search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மாடித்தோட்டங்கள்"

    • மாடித்தோட்டங்கள் அமைத்து கொடுக்கும் திட்டம், வாழப்பாடி, அயோத்தி யாப்பட்டணம் மற்றும் பெத்தநாயக்கன்பாளையம் வட்டாரத்தில் செயல்படுத்தப்பட்டு உள்ளது.
    • அரசு மானியத்தில் இந்த திட்டத்தில் பயன்பெற தோட்டக்கலை அழைப்பு விடுத்துள்ளது.

    வாழப்பாடி:

    தேசிய வேளாண்மை வளர்ச்சித் திட்டத்தின் கீழ், அரசு மானியத்தில் மாடித்தோட்டங்கள் அமைத்து கொடுக்கும் திட்டம், வாழப்பாடி, அயோத்தி யாப்பட்டணம் மற்றும் பெத்தநாயக்கன்பாளையம் வட்டாரத்தில் செயல்படுத்தப் பட்டு உள்ளது.

    இத்திட்டத்தின் கீழ், காய் கறிகள் மற்றும் கீரைகளை இயற்கை முறையில் வீட்டு மாடியில் எளிதாக பயிரிடுவதற்கான நெகிழிப் பைகள்– 6, 2 கிலோ தென்னை நார்க் கழிவு கட்டிகள் –6, காய்கறி விதை பாக்கெட்டுகள் –6, அசோஸ்பைரில்லம், பாஸ்மோபாக்டீரியா, டிரைக்கோடெர்மா விரிடி உயிர் உரங்கள் தலா 200 கிராம் மற்றும் வேப்ப எண்ணைய் 100 மிலி மற்றும் மாடித்தோட்ட காய்கறி வளர்ப்பு குறித்த விளக்கக் கையேடு ஆகியவை கொண்ட ரூ.900 மதிப்புள்ள தொகுப்புப் பெட்டகம், தற்போது அரசு மானியத்தில் பொதுமக்களுக்கு ரூ.450க்கு வழங்கப்படுகிறது.

    சேலம் மாவட்டம் வாழப்பாடி, அயோத்தியாப் பட்டணம் மற்றும் பெத்த நாயக்கன்பாளையம் வட்டார தோட்டக்கலைத்துறை அலுவலகத்தில், ஆதார் அட்டை நகல், பாஸ்போர்ட் சைஸ் போட்டோ ஆகியவற்றை கொண்டு வந்து பெயரை பதிவு செய்து விண்ணப்பித்து, ரூ.450 பணம் செலுத்தி, மாடித்தோட்ட பெட்டகத்தை பெற்று, வீட்டு மாடியில் காய்கறி தோட்டத்தை அமைத்து பயன் பெறலாம் என்று தோட்டக்கலைத்துறை உதவி இயக்குநர்கள் பெத்தநாயக்கன்பாளையம் கோதைநாயகி, அயோத்தியாப் பட்டணம் கலைவாணி, வாழப்பாடி பிரியதர்ஷினி ஆகியோர் தெரிவித்து உள்ளனர். 

    ×