search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மாசுபட வாய்ப்பு"

    கிணற்றை பாதுகாப்பான முறையில் மூடி சுகாதாரமான முறையில் குடிநீர் வழங்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

    கள்ளக்குறிச்சி:

     கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே கீழ் குப்பம் பஸ் நிலையம் பகுதியில் குடிநீருக்காக பயன்படுத்தப்படும் கிணறு ஒன்று உள்ளது.இந்த கிணற்றில் உள்ள தண்ணீரை தான் கீழ்குப்பத்தில் வசிக்கும் பொது மக்களுக்கு குடிநீருக்காக பஞ்சாயத்து மூலம் வழங்கப்படுகிறது. இந்த கிணறு மூலம் சுமார் 500-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் பயன்பெற்று வருகிறது.

    இந்நிலையில் கிணற்றின் மேல் பகுதியில் பாதுகாப்பிற்காக இரும்பு வளையம் கொண்டு மூடப்பட்டு இருந்தது. இந்த இரும்பு வளையம் சில ஆண்டுகளாகவே சேதமடைந்து கிணற்றுக்கு அருகிலேயே சேதம் அடைந்து கிடைக்கின்றது. இதனால் குடிநீர் மாசு படுவதற்கு வாய்ப்பு உள்ளது.

    கீழ் குப்பம் அருகில் வனப்பகுதி உள்ளது. இந்த வனப்பகுதியில் குரங்கு, மான், மயில் போன்ற உயிரினங்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறது. தண்ணீருக்காக இந்த உயிரினங்கள் அடிக்கடி வெளியே வருவது உண்டு. அப்படி வரும்பொழுது மூடப்படாமல் இருக்கும் கிணற்றில் தவறி விழுந்து இறப்பதற்கு அதிக அளவில் வாய்ப்புள்ளது. இதனால் குடிநீரில் மாசுபடுவதற்கு அதிகளவில் வாய்ப்பு உள்ளது.

    எனவே கிணற்றை பாதுகாப்பான முறையில் மூடி சுகாதாரமான முறையில் குடிநீர் வழங்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

    ×