search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மலைக் கிராம மக்களின்"

    • மலை கிராம பழங்குடியின மக்கள் அந்தியூர் எம்.எல்.ஏ. ஏஜி வெங்கடாச லத்திடம் தங்களுக்கு புதிய வீடுகள் கட்டித் தர வேண்டும் என்று கோரிக்கை மனுவினை வழங்கினர்
    • பழங்குடியினர் நல வீடுகள் கட்டும் திட்டத்தின் முதல் கட்டமாக 39 வீடுகள் கட்டிட பணி துவக்க ஆணைகள் வழங்கப்பட்டது

    அந்தியூர்

    ஈரோடு மாவட்டம் அந்தியூர் அடுத்த பர்கூர் மலை கிராம பழங்குடியின மக்கள் அந்தியூர் எம்.எல்.ஏ. ஏஜி வெங்கடாச லத்திடம் தங்களுக்கு புதிய வீடுகள் கட்டித் தர வேண்டும் என்று கோரிக்கை மனுவினை வழங்கினர்.

    அவர்களின் கோரிக்கை களை தமிழ்நாடு முதலமை ச்சர் மு.க.ஸ்டாலினிடம் கொண்டு சென்று தொடர் நடவடிக்கையால் பர்கூர் மலை கிராமங்களில் உள்ள மலைவாழ் பழங்குடி யின மக்களுக்கு புதிய வீடுகள் கட்ட நிதி ஒதுக்கீடு செய்ய ப்பட்டு உத்தரவு பிறப்பிக்க ப்பட்டது.

    அதன் அடிப்படையில் சோழர்கனைப் பகுதியில் பழங்குடியினர் நல வீடுகள் கட்டும் திட்டத்தின் முதல் கட்டமாக 39 வீடுகள் கட்டிட பணி துவக்க ஆணைகள் வழங்கப்பட்டது. இதில் சோழகனை, ஒந்தனை, குட்டையூர், அக்கினி பாவி உள்ளிட்ட பல்வேறு மலை கிராமங்களைச் சேர்ந்த பகு திகளில் வசிக்கும் 36 பழங்கு டியின மக்களுக்கு ஒரு வீட்டிற்கு ரூ.4 லட்சத்து 95 ஆயிரம் என்ற மதிப்பில் புதிய வீடுகள் கட்டிட பணி துவக்க ஆணைகளை அந்தி யூர் எம்.எல்.ஏ. ஏஜி வெங்க டாஜலம் வழங்கினார்.

    மேலும் பொதுமக்கள் தங்களது பகுதிகளுக்கு சரிவர குடிநீர், மின் விள க்குகள், சாலை வசதிகள் போன்ற பல்வேறு அடி ப்படை வசதிகள் இன்றி மிகுந்த சிரமப்படுவதாக கோரிக்கை விடுத்தனர். கோரிக்கையை கேட்டறிந்த எம்.எல்.ஏ. உங்கள் கோரி க்கை குறித்து மாவட்ட கலெ க்டர் கவனத்திற்கு கொண்டு சென்று உரிய நடவடிக்கை மேற்கொள்வதாக உறுதி அளித்தார்.

    இந்நிகழ்ச்சியில் வட்டார வளர்ச்சி அலுவலர் சரவ ணன் மற்றும் அரசு அலுவ லர்கள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

    ×