search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மருத்துவ பெட்டகம்"

    • வருமுன் காப்போம் சிறப்பு முகாம் நடந்தது
    • பொதுமக்கள் ஏராளமானோர் பங்கேற்பு

    ஆரணி:

    திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே காமக்கூர் கிராமத்தில் உள்ள அரசு நடுநிலைப் பள்ளி வளாகத்தில் நடைபெற்ற பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை ஒன்றிணைந்து நடத்திய கலைஞரின் வருமுன் காப்போம் சிறப்பு முகாமில் ஊராட்சி மன்ற தலைவர் குப்பு சங்கர் அனைவரையும் வரவேற்றார்.

    ஒன்றிய செயலாளர் அன்பழகன் முன்னிலை வகித்தார் ஒன்றிய செயலாளர் மோகன் தலைமை தாங்கினார். முன்னதாக மாவட்ட பொருளாளர் தட்சிணாமூர்த்தி குத்து விளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார்.

    மேலும் இந்த மருத்துவ முகாமில் கர்ப்பிணிகளுக்கு ஊட்டச்சத்து பெட்டகம் வழங்கப்பட்டது.

    இந்நிகழ்ச்சியில் நகர மன்ற தலைவர் ஏ.சி மணி, ஒன்றிய செயலாளர்கள் துரை.மாமது, சுந்தர், மேற்கு ஆரணி சேர்மன் பச்சையம்மாள் சீனிவாசன், மாவட்ட பிரதிநிதிகள் முள்ளிபட்டு ரவி, ஜெய்சங்கர், மாவட்ட இளைஞரணி அமைப்பா ளர் வெங்கடேசன், ஒன்றிய கவுன்சிலர் மகேஸ்வரி கோபி, மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளர் முருகன், ஊராட்சி மன்ற துணைத் தலைவர் சங்கீதா ஜெயவேல், காமக்கூர் அரசு மருத்துவர் விஜயகுமார், சந்திரலேகா, நரேந்திரன், மோனிகா, தனலட்சுமி, மற்றும் திமுக நிர்வாகிகள், செவிலியர்கள், மருத்துவ ஊழியர்கள், பொதுமக்கள் பங்கேற்றனர்.

    • வரும் முன் காப்போம் திட்டத்தின் கீழ் கர்ப்பிணி பெண்களுக்கு சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது.
    • இதில் கர்ப்பிணிகளுக்கு பல்வேறு சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டது.

    பெரியகுளம்:

    பெரியகுளம் வட்டார அனைத்து ஆரம்ப சுகாதார நிலையம், எண்டப்புளி ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் ஊராட்சி நிர்வாகம் இணைந்து அரசு கள்ளர் மேல்நிலைப் பள்ளியில் வரும் முன் காப்போம் திட்டத்தின் கீழ் கர்ப்பிணி பெண்களுக்கு சிறப்பு மருத்துவ முகாமை நடத்தினர்.

    இதில் கர்ப்பிணிகளுக்கு எக்ஸ்ரே ஸ்கேன், ரத்த அழுத்த நோய், சர்க்கரை நோய், சிறுநீரக நோய், உள்ளிட்ட மருத்துவ சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு தமிழக அரசு மருத்துவ பெட்டகத்தை ஊராட்சி மன்ற தலைவர் சின்னபாண்டி, மாவட்ட ஊராட்சி துணைத்தலைவர் ராஜபாண்டியன் ஆகியோர் வழங்கினர்.

    முகாமில் க.விலக்கு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை டாக்டர்கள், வட்டார மருத்துவ அலுவலர் கோமதி மற்றும் நர்சுகள் சிகிச்சை அளித்தனர்.

    ×