search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மருத்துவ அலுவலர்"

    • பெண்கள் பல்வேறு உடல் ரீதியான கோளாறுகளை சந்திப்பீர்கள்.
    • சத்தான உணவுகளை சாப்பிட வேண்டியது அவசியம்.

    பல்லடம் :

    ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டத்தின் மூலம் வளர் இளம் பெண்களுக்கான ஊட்டச்சத்து விழிப்புணர்வு முகாம் பல்லடம் அடுத்த வடுகபாளையம் அங்கன்வாடி மையத்தில் நடந்தது. குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் மகாலட்சுமி சங்கீதா வரவேற்றார். தோட்டக்கலை துணை அலுவலர் யாழினி, விரிவுரையாளர் யசோதா தேவி, மற்றும் வழக்கறிஞர் சுதாகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    இது குறித்து வட்டார மருத்துவ அலுவலர் சுடர்விழி பேசியதாவது:-

    வளர் இளம் பருவத்தில் உள்ள பெண்கள், பல்வேறு உடல் ரீதியான கோளாறுகளை சந்திப்பீர்கள். இதிலிருந்து, உடலை பாதுகாத்துக் கொள்ள சத்தான உணவுகளை சாப்பிட வேண்டியது அவசியம். அதிலும் குறிப்பாக, இரும்புச்சத்து மிக்க உணவுகளை அன்றாடம் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.சுவையாக உள்ளது என்பதற்காக கடைகளில் விற்பனை செய்யப்படும் உடலுக்கு ஒவ்வாத பொருட்களை சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். ஜங்க் புட் எனப்படும் உணவுகள் உடலுக்கு பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடும். விரும்பும் உணவுகளை வீட்டிலேயே செய்து தரச் சொல்லி சாப்பிடுங்கள். தினசரி காய்கறிகள் கீரைகள் உள்ளிட்டவற்றை அவசியம் சேர்க்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

    ×