search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Medical Officer"

    • பெண்கள் பல்வேறு உடல் ரீதியான கோளாறுகளை சந்திப்பீர்கள்.
    • சத்தான உணவுகளை சாப்பிட வேண்டியது அவசியம்.

    பல்லடம் :

    ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டத்தின் மூலம் வளர் இளம் பெண்களுக்கான ஊட்டச்சத்து விழிப்புணர்வு முகாம் பல்லடம் அடுத்த வடுகபாளையம் அங்கன்வாடி மையத்தில் நடந்தது. குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் மகாலட்சுமி சங்கீதா வரவேற்றார். தோட்டக்கலை துணை அலுவலர் யாழினி, விரிவுரையாளர் யசோதா தேவி, மற்றும் வழக்கறிஞர் சுதாகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    இது குறித்து வட்டார மருத்துவ அலுவலர் சுடர்விழி பேசியதாவது:-

    வளர் இளம் பருவத்தில் உள்ள பெண்கள், பல்வேறு உடல் ரீதியான கோளாறுகளை சந்திப்பீர்கள். இதிலிருந்து, உடலை பாதுகாத்துக் கொள்ள சத்தான உணவுகளை சாப்பிட வேண்டியது அவசியம். அதிலும் குறிப்பாக, இரும்புச்சத்து மிக்க உணவுகளை அன்றாடம் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.சுவையாக உள்ளது என்பதற்காக கடைகளில் விற்பனை செய்யப்படும் உடலுக்கு ஒவ்வாத பொருட்களை சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். ஜங்க் புட் எனப்படும் உணவுகள் உடலுக்கு பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடும். விரும்பும் உணவுகளை வீட்டிலேயே செய்து தரச் சொல்லி சாப்பிடுங்கள். தினசரி காய்கறிகள் கீரைகள் உள்ளிட்டவற்றை அவசியம் சேர்க்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

    • பண்ருட்டியில் பெண் மருத்துவ ஊழியர் மாயமானார்.
    • சந்தியாவின் தந்தை சகாதேவன் புதுப்பேட்டை போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.

    கடலூர்:

    பண்ருட்டி அருகே புதுப்பேட்டை மேட்டா மேடு பகுதியை சேர்ந்தவர் சகாதேவன். அவரது மகள் சந்தியா (வயது 24) இவர் எம்.எஸ்.சி. முடித்துவிட்டு புதுவை மதகடிப்பட்டு உள்ள மணக்குள விநாயகர் மருத்துவமனையில் ஊழியராக பணிபுரிந்து வருகிறார். சம்பவத்தன்று கடந்த 8- தேதி வீட்டில் இருந்து வேலைக்கு புறப்பட்டு சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. அதிர்ச்சி அடைந்த சந்தியாவின் பெற்றோர் பல்வேறு இடங்களில் இவரை தேடிப் பார்த்தனர். எங்கு தேடியும் இவர் கிடைக்கவில்லை. இது குறித்து சந்தியாவின் தந்தை சகாதேவன் புதுப்பேட்டை போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். புகாரின் பேரில் புதுப்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் நந்தகுமார் வழக்கு பதிவு செய்து சந்தியா என்ன ஆனார் எங்கு சென்றார் யாரேனும் கடத்தப்பட்டாரா என்பது குறித்து பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • உலக மூளை தினம் ஆண்டுதோறும் ஜுலை 22ல் கொண்டாடப்பட்டு வருகிறது.
    • கருத்தரங்கு ஏற்பாடுகளை கல்லூரி முதல்வர் கிருஷ்ணன் செய்திருந்தார்.

    திருப்பூர்:

    திருப்பூர், சிக்கண்ணா அரசு கலை கல்லூரி நாட்டு நலப்பணித்திட்டம் அலகு- 2 சார்பில் உலக மூளை தின கருத்தரங்கு நடந்தது. கல்லூரி பேராசிரியை அமிர்தராணி தலைமை வகித்தார். என்.எஸ்.எஸ்., அலகு - 2 ஒருங்கிணைப்பாளர் மோகன்குமார் வரவேற்றார்.திருப்பூர் அரசு மருத்துவக்கல்லூரியின் பொது மருத்துவ துறைத்தலைவர் செண்பகாஸ்ரீ பேசியதாவது:-

    உலக மூளை தினம் ஆண்டுதோறும் ஜுலை 22ல் கொண்டாடப்பட்டு வருகிறது. மனித உடலில் மிக முக்கியமான உறுப்பு மூளை. ஒன்றரை கிலோ எடையுடன், ஏறத்தாழ 10 ஆயிரம் கோடி நரம்புகளை கொண்டது.

    நம் மூளையின் நரம்பு மண்டலத்தில் காயம் ஏற்பட்டால், சுற்றியுள்ள திசுக்கள் வளர்ந்து காயமடைந்த நரம்பு மண்டலத்தின் வேலையை செய்கிறது.ஆனால், புதிய நரம்புகள் உருவாகாது. அதனால்தான் மூளை பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு மிகவும் முக்கியமானதாக உள்ளது.புகைப்பிடித்தல் , மது அருந்துதல், நீண்ட நேரம் மொபைல் போன் உபயோகித்தல், துரித உணவுகளை உட்கொள்ளுதல் போன்ற செயல்முறைகளினால் மூளை பெரிதும் பாதிப்படையும்.

    மூளையை பாதுகாக்க முறையான பழக்கவழக்கங்களை பின்பற்றுதல், தினந்தோறும் குறைந்தது, 30 நிமிடங்கள் உடற்பயிற்சி செய்வதால் உடலின் ஆரோக்கியமும், மூளையின் ஆற்றலும் அதிகரிக்கும். தினமும் 8 மணிநேரம் உறங்கினால் மூளை புத்துணர்ச்சி அடையும். தவறாமல் அனைவரும் யோகா பயிற்சியினை மேற்கொள்ள வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்.மாணவ செயலர்கள் சுந்தரம், பூபதி ராஜா தலைமையில் ஏராளமான மாணவ, மாணவியர், பேராசிரியர்கள், பங்கேற்றனர். கருத்தரங்கு ஏற்பாடுகளை கல்லூரி முதல்வர் கிருஷ்ணன் செய்திருந்தார்.

    ×