search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மருதுபாண்டியர்கள் சிலை"

    • திருமங்கலத்தில் மருதுபாண்டியர்கள் சிலையை நிறுவக்கோரி ஆர்ப்பாட்டம் நடந்தது.
    • முடிவில் நகர தலைவர் விஜேந்திரன் நன்றி கூறினார்.

    திருமங்கலம்

    ஆங்கிலேயர்களை எதிர்த்து முதன் முதலில் போர் தொடங்கியது மருது சகோதரர்கள் தான். இதற்காக அவர்கள் உள்பட 500-க்கும் மேற்பட்டோர் சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் ஆங்கிலேயர்களால் தூக்கிட்டு கொல்லப்பட்டனர். இதன் நினைவாக மருது பாண்டியர்களுக்கு சிலை அமைக்க வேண்டும் என பாரதிய ஜனதா கட்சியினர் வலியுறுத்தி வருகின்றனர்.

    இதன் ஒரு பகுதியாக மதுரை மாவட்டம் திருமங்க லம் ராஜாஜி சிலை முன்பு மதுரை மேற்கு மாவட்ட பாரதிய ஜனதா கட்சி ஓ.பி.சி. அணி சார்பில் மதுரை மேற்கு மாவட்ட ஓ.பி.சி. அணி தலைவர் வேல்முருகன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    இதில் சிறப்பு விருந்தினர்களாக மாநில பொதுச் செயலாளர் சீனிவாசன் மற்றும் ஓ.பி.சி. மாநில தலைவர் சாய்சுரேஷ் கலந்து கொண்டு சிவகங்கை மாவட்டத்தில் தமிழக அரசு சார்பில் மருது பாண்டியர் களுக்கு சிலை நிறுவ வேண்டும் என வலியுறுத்தினர்.

    ஆர்ப்பாட்டத்தில் துணைத்தலைவர் தங்கப் பாண்டி, மாநில செயற்குழு உறுப்பினர் வெற்றிவேல் முருகன், மதுரை மேற்கு மாவட்ட தலைவர் சசி குமார், தென்னிந்திய பார்வர்ட் பிளாக் திருமாறன், மாவட்ட துணைத்தலைவர் ஓம் ஸ்ரீ முருகன், சரவணன், சின்னச்சாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    முடிவில் நகர தலைவர் விஜேந்திரன் நன்றி கூறினார்.

    ×