search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மரம் முறிந்து விழுந்து விபத்து"

    • கொடலங்காடு அருகே சாலை ஓரத்தில் நின்ற பெரிய மரம் திடீரென வேரோடு சாயந்து மலைப்பாதையின் குறுக்கே விழுந்தது.
    • டிரைவர் சாமர்த்திய மாக பிரேக் போட்டு பஸ்சை நிறுத்தினார். இதனால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.

    பெரும்பாறை:

    திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டுவில் இருந்து மலைக்கிராமங்களான பெரும்பாறை, தடிய ன்குடிசை, மங்களம்கொம்பு, காமனூர் வழியாக தாண்டிக்குடிக்கு தினமும் காலை 10.45 மணிக்கு அரசு பஸ் இயக்கப்படுகிறது.

    நேற்று காலையில் வத்தலக்குண்டுவில் இருந்து தாண்டிக்குடிக்கு அந்த அரசு பஸ் புறப்பட்ட து. அதில் சுமார் 20 பயணிகள் இருந்தனர். பஸ்சை வத்த லக்குண்டுவை சேர்ந்த சுரேஷ் என்பவர் ஓட்டி வந்தார்.

    மதியம் 1 மணிக்கு காமனூர் வழியாக மலை ப்பாதையில் அந்த பஸ் தாண்டிக்குடி நோக்கி சென்று கொண்டிருந்தது. அப்போது கொடலங்காடு அருகே சாலை ஓரத்தில் நின்ற பெரிய மரம் திடீரென வேரோடு சாயந்து மலைப்பாதையின் குறுக்கே விழுந்தது. இதை கவனித்த டிரைவர் சுரேஷ் சாமர்த்திய மாக பிரேக் போட்டு பஸ்சை நிறுத்தினார்.

    இதனால் பெரும் விபத்து தவிர்க்க ப்பட்டது. பஸ்சில் இருந்த பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். மரம் சாய்ந்து விழுந்ததை கண்டு பஸ்சை முன் கூட்டியே நிறுத்திய டிரைவரை பயணிகளும், பொது மக்களும் பாராட்டினர்.

    இதுகுறித்து தகவலறிந்த காமனூர் ஊராட்சி ஊழிய ர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். பின்னர் அவர்கள் அறுவை எந்திரம் மூலம் மரத்தை வெட்டி அகற்றினர். இதனால் தாண்டிக்குடி மலைப்பா தையில், சுமார் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

    ×