search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மரப்பயிர்கள்"

    • விவசாயிகளின் நிலங்களில் மரம் நடவு செய்ய மானிய உதவி வழங்கப்பட்டது.
    • தேசிய உணவு பாதுகாப்பு மற்றும் ஊட்டச்சத்து திட்ட ஆலோசகர் கள ஆய்வு செய்தார்.

     காங்கயம் :

    தேசிய எண்ணெய் வித்துக்கள் இயக்கம், எண்ணெய் வித்து மரப்பயிர்கள் திட்டத்தின் மூலம் விவசாயிகளின் நிலங்களில் மரம் நடவு செய்ய மானிய உதவி வழங்கப்பட்டது. இது குறித்து திருப்பூர் மாவட்ட தேசிய உணவு பாதுகாப்பு மற்றும் ஊட்டச்சத்து திட்ட ஆலோசகர் கள ஆய்வு செய்தார். பின்னர் அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியுள்ளதாவது:-

    விவசாயிகள் தரிசாக உள்ள நிலங்களில் எண்ணெய் வித்து மரபயிர்களான வேம்பு மற்றும் புங்கன் நடவு செய்ய மானியம் வழங்கப்படுகிறது. அதன்படி வேம்பு பயிருக்கு எக்டேருக்கு ரூ.17 ஆயிரமும், புங்கன் பயிருக்கு எக்டேருக்கு ரூ.20 ஆயிரம் மானியம் வழங்கப்படுகிறது. மேலும் நடவு செய்த முதல் 3 ஆண்டுகளுக்கு ஊடுபயிரிடுதல் மற்றும் பராமரிப்பு மானியமாக ரூ.3 ஆயிரம் வழங்கப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    தொடர்ந்து காங்கயம் வட்டாரம் வீரணம்பாளையம் கிராமத்தில் கணேசன் என்ற விவசாயி 2021-22-ம் ஆண்டில் நடவு செய்துள்ள வேம்பு எண்ணெய்வித்து, மரப்பயிர் கன்றுகளை தேசிய உணவு பாதுகாப்பு மற்றும் ஊட்டச்சத்து திட்ட ஆலோசகர் அரசப்பன், காங்கயம் வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் வசந்தாமணி மற்றும் வேளாண்மை அலுவலர் ரேவதி ஆகி–யோர் நேரில் சென்று கள ஆய்வு மேற்கொண்டனர்.

    • மாவட்ட தேசிய உணவு பாதுகாப்பு மற்றும் ஊட்டச்சத்து திட்ட ஆலோசகர் கள ஆய்வு செய்தார்.
    • விவசாயிகள் தரிசாக உள்ள நிலங்களில் எண்ணெய் வித்து மரபயிர்களான வேம்பு மற்றும் புங்கன் நடவு செய்ய மானியம் வழங்கப்படுகிறது.

    காங்கயம்:

    தேசிய எண்ணெய் வித்துக்கள் இயக்கம், எண்ணெய் வித்து மரப்பயிர்கள் திட்டத்தின் மூலம் விவசாயிகளின் நிலங்களில் மரம் நடவு செய்ய மானிய உதவி வழங்கப்பட்டது. இது குறித்து திருப்பூர் மாவட்ட தேசிய உணவு பாதுகாப்பு மற்–றும் ஊட்டச்சத்து திட்ட ஆலோசகர் கள ஆய்வு செய்தார். பின்னர் அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியுள்ளதாவது:-

    விவசாயிகள் தரிசாக உள்ள நிலங்களில் எண்ணெய் வித்து மரபயிர்களான வேம்பு மற்றும் புங்கன் நடவு செய்ய மானியம் வழங்கப்படுகிறது.அதன்படி வேம்பு பயிருக்கு எக்டேருக்கு ரூ.17 ஆயிரமும், புங்கன் பயிருக்கு எக்டேருக்கு ரூ.20 ஆயிரம் மானியம் வழங்கப்படுகிறது. மேலும் நடவு செய்த முதல் 3 ஆண்டுகளுக்கு ஊடுபயிரிடுதல் மற்றும் பராமரிப்பு மானியமாக ரூ.3 ஆயிரம் வழங்கப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    தொடர்ந்து காங்கயம் வட்டாரம் வீரணம்பாளையம் கிராமத்தில் கணேசன் என்ற விவசாயி 2021-22-ம் ஆண்டில் நடவு செய்துள்ள வேம்பு எண்ணெய்வித்து, மரப்பயிர் கன்றுகளை தேசிய உணவு பாதுகாப்பு மற்றும் ஊட்டச்சத்து திட்ட ஆலோசகர் அரசப்பன், காங்கயம் வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் வசந்தாமணி மற்றும் வேளாண்மை அலுவலர் ரேவதி ஆகியோர் நேரில் சென்று கள ஆய்வு மேற்கொண்டனர்.

    • வேளாண் நிலத்தை நன்கு உழுது விட வேண்டும்.
    • மண்ணுக்கு ஏற்ற மரப்பயிர்களை நட வேண்டும்.

    உடுமலை :

    மரப்பயிர்களில் பூச்சிகள் தாக்குதலுக்கு, முறையான தடுப்பு நடவடிக்கைகள் அவசியம் என்கின்றனர் விஞ்ஞானிகள். இது குறித்து வனமரபியல் மற்றும் மரப்பெருக்கு நிறுவனத்தின் பூச்சியியல் துறை விஞ்ஞானி ஜான் பிரசாந்த் ஜேக்கப் கூறியதாவது :- பூச்சி தாக்குதலுக்கு முன்பாகவே தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்வது முக்கியம்.அதன்படி மரப்பயிர்களை நடவு செய்யும் வேளாண் நிலத்தை நன்கு உழுது விட வேண்டும்.தண்ணீர் தேங்காமல் முறையான வடிகால் வசதி செய்யப்பட வேண்டும். மண்ணை முழுமையாக பரிசோதித்த பின் மண்ணுக்கு ஏற்ற மரப்பயிர்களை நட வேண்டும்.மரப்பயிர்களை நடவு செய்யும்போது இயற்கை உரங்களையிட்டு நட வேண்டும். களைத்தாவரங்களை தொடர்ந்து நீக்கி சுத்தமாக வைத்திருத்தல் அவசியம்.

    பூச்சி தாக்குதலை கட்டுப்படுத்த நோயினால் பாதிக்கப்பட்ட மரங்களின் கிளைகளை அகற்றுதல், ஒளி பொறிகளை வைத்து பூச்சிகளை பிடித்தல், சரியான ஊடு பயிரிடுதல் ஆகியவற்றை பின்பற்றலாம்.ஒரே இன மரப்பயிர்களை அருகருகே நடுவதால் பூச்சி விரைவாக பரவி விடும். ஆகவே பல்வேறு இனப்பயிர்களை நட வேண்டும். வேளாண் நிலத்தில் அகற்றப்படும் களைச்செடிகள் எரிக்கப்படும்போது பூச்சிகள் பெருக்கத்தை கட்டுப்படுத்தலாம்.இவ்வாறு அவர் கூறினார். 

    மலைப் பகுதிகளில் இயற்கையாக வளரும் மலைநெல்லி எனப்படும் பெருநெல்லியில் இன்னும் கூடுதல் சத்துக்கள் அடங்கியுள்ளது.
    குடிமங்கலம்:

    குடிமங்கலம் சுற்றுவட்டார பகுதியில் ஒரு சில விவசாயிகள் நெல்லிக்காய் சாகுபடியில் ஆர்வம் காட்டி வருகிறார்கள். 

    இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது:

    நெல்லியை பொறுத்தவரை ஒவ்வொரு ரகமும் ஒவ்வொரு சமயத்தில் காய்ப்புக்கு வரும். இதனை கருத்தில் கொண்டு வெவ்வேறு ரகங்களை சாகுபடி செய்வதன் மூலம் எல்லா பருவத்திலும் வருவாய் ஈட்டமுடியும். 

    நெல்லியை பொறுத்தவரை நடவு செய்த 4 மாதங்களில் பூக்கத் தொடங்கி விடுகிறது. ஆனால் 3 வருடங்கள் வரை இந்த பூக்களை உதிர்த்து விட வேண்டும். அப்போதுதான் நல்ல மகசூல் கிடைப்பதுடன் சுவையும் கூடுதலாக இருக்கும். நெல்லிக்காய் மரங்கள் 40 ஆண்டுகள் வரை மகசூல் தரக்கூடியது. 

    ஊடுபயிராக வாழை மற்றும் பயறுவகை பயிர்கள் சாகுபடி செய்து கூடுதல் வருமானம் பெற முடியும். பொதுமக்களிடையே நல்ல பொருட்களுக்கான தேவை அதிகரித்துள்ளது. எனவே சத்துக்கள் அதிகம் கொண்ட பெருநெல்லிக்கு நல்ல வரவேற்பு உள்ளது.

    இப்போது அதிக அளவில் வீரிய ஒட்டு ரக நெல்லிக்காய் சாகுபடி செய்யப்படுகிறது. ஆனால் மலைப் பகுதிகளில் இயற்கையாக வளரும் மலைநெல்லி எனப்படும் பெருநெல்லியில் இன்னும் கூடுதல் சத்துக்கள் அடங்கியுள்ளது. இவை வனப்பகுதியிலேயே பெருமளவு குறைந்து வருவதாக கூறப்படுகிறது.

    மலை நெல்லியை அழியாமல் பாதுகாக்கவும் மக்களுக்கு கொண்டு சேர்க்கவும் தோட்டக்கலைத்துறை மற்றும் வனத்துறை இணைந்து மலை நெல்லி நாற்றுகளை விவசாயிகளுக்கு வழங்கி அவற்றை பராமரிப்பதற்கான வழிகாட்டல்களை வழங்க வேண்டும். 

    மேலும் புவி வெப்பமயமாதல், காற்று மாசு உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளுக்கு தீர்வுகாண மரம் வளர்ப்பு கட்டாயமானதாக உள்ளது. இதில் மரப்பயிர்கள் சாகுபடி என்பது தொழில் ரீதியான மரம் வளர்ப்பாக உள்ளதால் இரட்டை பயன் தருவதாக உள்ளது. 

    எனவே மரம் வளர்ப்பை ஊக்குவிக்க வேண்டியது அவசியமாகிறது. அந்த வகையில் மா, பலா, நெல்லி, சப்போட்டா, மலைவேம்பு போன்ற மரப்பயிர்கள் சாகுபடியை ஊக்குவிக்கும் வகையில் அரசு திட்டங்களை அறிவிக்க வேண்டும்.

    மேலும் இந்த விளைபொருட்களை சந்தைப்படுத்துவதற்கான வாய்ப்புகளை உருவாக்கித்தர வேண்டும் என்று விவசாயிகள் கூறினர்.
    ×