search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மனித சங்கிலி நிகழ்ச்சி"

    • ஆண்டு தோறும் வன உயிரின வார விழா, அக்டோபர் முதல் வாரம் கொண்டாடப்பட்டு வருகிறது.
    • சாலை மார்க்கத்தில் செல்லும் வாகன ஓட்டிகளுக்கும், பொதுமக்களுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தபட்டது.

    மேட்டுப்பாளையம்

    மேட்டுப்பாளையத்தில் குன்னூர் மலைப்பாதையில் கல்லார் பகுதியில் வனத்துறை மற்றும் வன உயிர் இயற்கை பாதுகாப்பு அறக்கட்டளை, குமரன் கலை அறிவியல் கல்லூரி ஆகியவை சார்பில் வன உயிரின வார விழா நிகழ்ச்சி நடைபெற்றது.

    ஆண்டு தோறும் வன உயிரின வார விழா, அக்டோபர் முதல் வாரம் கொண்டாடப்பட்டு வரும் நிலையில் இரு ஆண்டுகளாக கொரோனா நோய் தொற்று காரணமாக விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெறாமல் இருந்தது.

    தற்போது நீண்ட இடைவெளிக்குப்பின் பொதுமக்களுக்கு வனம், வன விலங்குகள் குறித்தும், இயற்கை காப்பதன் அவசியம் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுத்தும் வகையில் கல்லூரி மாணவர்கள், சமூக ஆர்வலர்கள், இயற்கை ஆர்வலர்கள் ஆகியோர் இணைந்து மனித சங்கிலி விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தினர்.

    வனங்களில் வாழும் அனைத்து விலங்குகள் மற்றும் உயிரினங்களும் பாதுகாக்கப்பட வேண்டும், காடுகளில் வறட்சி, உணவுகள் பற்றாக்குறை போன்றவற்றால் வன உயிரினங்கள் குறைந்து வரும் நிலையில் இது இயற்கையின் சமநிலையில் மாற்றத்தினை ஏற்படுத்தும். எனவே காடுகள் மற்றும் வன உயிரினங்களை காப்பாற்ற அனைவரும் முன்வர வேண்டும் என மனித சங்கிலி நிகழ்ச்சியில் வலியுறுத்தப்பட்டது.

    கையில் பதாகைகளுடன் நீண்ட தொலைவிற்கு நின்று சாலை மார்க்கத்தில் செல்லும் வாகன ஓட்டிகளுக்கும், பொதுமக்களுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தபட்டது. இதில் மாவட்ட வன அலுவலர், வனச்சரக அலுவலர்கள் ஜோசப் பிராங்கிளின், செந்தில்குமார் மற்றும் கல்லூரி மாணவர்கள், சமூக ஆர்வலர்கள் பலர் கலந்து கொண்டனர்.  

    ×