search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மந்தமான பாலப்பணிகள்"

    • வனத்துச் சின்னப்பர் குருசடி அடுத்து பனிக்கரை வரை சாலை சீரமைப்பு மற்றும் பாலம் அமைக்கும் பணிகள் பால மாதங்களாக நடைபெற்று வருகிறது.
    • மாவட்ட நிர்வாகம் இதில் தலையிட்டு பணி களை விரைந்து முடிக்க வேண்டும் என சுற்றுலா பயணிகள் மற்றும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    கொடைக்கானல்:

    கொடைக்கானல் வத்தலகுண்டு நெடுஞ்சாலை யில் வனத்துச் சின்னப்பர் குருசடி அடுத்து பனிக்கரை வரை சாலை சீரமைப்பு மற்றும் பாலம் அமைக்கும் பணிகள் பால மாதங்களாக நடைபெற்று வருகிறது. பல இடங்களில் பாலப்பணிகள் முடிந்தும் முடியாமலும் உள்ளன.

    சில இடங்களில் பணி முடிக்கப்பட்டுள்ளது. ஒரு சில இடங்களில் பணி தற்போதுவரை நடைபெற்று வருகிறது.ஒரே நேரத்தில் 10-க்கும் மேற்பட்ட பால ப்பணிகள் நடைபெறுவதால் போக்குவரத்து இடையூறு ஏற்பட்டு வருகிறது. குறிப்பாக வெள்ளி, சனி, ஞாயிறு போன்ற நாட்களில் அதிக அளவிலான சுற்றுலா பயணிகள் வந்து செல்லும் நிலையில் இந்தப் பணிகள் காரணமாக போக்கு வரத்திற்கு இடையூறு ஏற்பட்டுள்ளது.

    பாலம் அமைக்கும் பணிகள் முடிக்கப்பட்ட இடத்தில் மேடாகவும், கரடு முரடாகவும் சாலைகள் உள்ள நிலையில் அந்த பகுதியில் தார்ச்சாலையை விரைந்து அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வலுத்துள்ளது.

    பல ஆயிரக்கணக்கான வாகனங்கள் வந்து செல்லும் வத்தலக்குண்டு கொடை க்கானல் நெடுஞ்சாலையின் ஓரங்களில் வடிகால் வாய்க்கால் அமைக்கிறோம் என்ற பெயரில் ஏற்கனவே சாலையை குறுக்கி போக்குவரத்து நெரிசலை ஏற்படுத்தியுள்ள நிலையில் மீண்டும் பல மாதங்களாக நடைபெற்று வரும் பணி களால் சுற்றுலா பயணிகளும் பொதுமக்களும், விவசாயப் பொருட்களைக் கொண்டு செல்லும் வாகன ஓட்டிக ளும் கடும் இன்னலுக்கு ஆளாகி வருகின்றனர்.

    எனவே மாவட்ட நிர்வாகம் இதில் தலையிட்டு பணி களை விரைந்து முடிக்க வேண்டும் என சுற்றுலா பயணிகள் மற்றும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    ×