search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மத்திய அரசின்"

    • மத்திய அரசின் பிட் இந்தியா இயக்கம், சுற்றுலா அமைச்சகம் மற்றும் பாரதிதாசன் பல்கலைக் கழகம் சார்பில், மருத்துவ மதிப்பீட்டு சுற்றுலா, இசை மற்றும் யோகா திருவிழா, நாமக்கல்லில் நடைபெற்றது.
    • 2 ஆண்டுகளுக்கு முன், கொரோனா தொற்று ஏற்பட்ட நேரத்தில், பிரதமரால் யோகா கலையின் மீது நல்ல விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

    நாமக்கல்:

    மத்திய அரசின் பிட் இந்தியா இயக்கம், சுற்றுலா அமைச்சகம் மற்றும் பாரதிதாசன் பல்கலைக் கழகம் சார்பில், மருத்துவ மதிப்பீட்டு சுற்றுலா, இசை மற்றும் யோகா திருவிழா, நாமக்கல்லில் நடைபெற்றது.

    கோவை பேரூர் ஆதீனம் மருதாசல அடிகளார் நிகழ்ச்சிக்கு தலைமை வகித்தார். நாமக்கல் எம்.பி. சின்ராஜ் முன்னிலை வகித்தார். தேசிய விருதாளர் கரகம் துர்கா, கின்னஸ் உலக சாதனையாளர் யோகா வைஷ்ணவி ஆகியோரின் கலை நிகழ்ச்சிகள், சுபாஷினி முத்துக்குமாரின் வாய்ப்பாட்டு ஆகியவை இடம்பெற்றன.

    மத்திய அரசின், இந்திய சுற்றுலா மற்றும் பயண மேலாண் நிறுவன தென் மண்டல சிறப்பு அலுவலர் மோனிகா பிரகாஷ் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசியதாவது:-

    மத்திய அரசு மேற்கொண்டுள்ள நடவடிக்கையால், இந்தியாவின் பாரம்பரிய யோகா கலை இன்று உலகம் முழுவதும் பிரபலமடைந்து வருகிறது. 2 ஆண்டுகளுக்கு முன், கொரோனா தொற்று ஏற்பட்ட நேரத்தில், பிரதமரால் யோகா கலையின் மீது நல்ல விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

    கடந்த ஆண்டுகளில் ஒப்பிடுகையில், சுற்றுலா வருபவர்களில், தேசிய அளவில் தமிழகம் முதன்மை மாநிலமாக திகழ்கிறது. வரும், 3, 4 ஆண்டுகளில், தமிழகம் ஆரோக்கிய சுற்றுலா மையமாக மாறும்.

    தமிழகம் மருத்துவ சுற்றுலாவில் மேம்பாடு அடைந்து வரும் நிலையில், நாமக்கல் மாவட்டத்தில், மத்திய அரசின் உதவியுடன், தனியார் பங்களிப்புடன், 50 ஏக்கர் பரப்பளவில், மருத்துவ மதிப்பீட்டு சுற்றுலா மையம் அமைய உள்ளது.

    விரைவில் அதற்கான அனுமதி கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதன்மூலம், தமிழகம் மட்டும் இன்றி, மற்ற மாநில மக்களும் பயன்பெறு வார்கள். இவ்வாறு அவர் பேசினார்.

    நேரு யுவகேந்திரா சங்கத்தின் தலைவர் சேவக் விஜய், நிர்வாக இயக்குனர் கார்த்திக் சோமசுந்தரம், விரிவுரையாளர் ஹரிணி பிரியா உள்ளிட்ட பலர் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.

    ×