search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மதுவிலக்கு சட்டம்"

    • கலால் சட்டத்தின் கீழ் விதிகளை மீறியது தொடர்பாக 5.63 லட்சம் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
    • மதுவிலக்கு தொடர்பான வழக்குகளை விரைந்து முடிப்பதற்காக 74 சிறப்பு நீதிமன்றங்கள்.

    பீகாரில் கடந்த 2016ம் ஆண்டு முதல் மாநிலம் முழுவதும் மதுவிலக்கு விதிக்கப்பட்டது. கலால் சட்டத்தின் கீழ், போதைப்பொருள் உற்பத்தி, மதுபானம் விநியோகம், போக்குவரத்து, சேகரிப்பு, சேமிப்பு, விற்பனை, பதுக்கி வைத்திருத்தல் அல்லது வாங்குதல் ஆகியவற்றுக்கு முழுமையான தடை விதிக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில், பீகார் மாநில சட்டசபையில் இதுதொடர்பாக கேட்ட கேள்விக்கு கலால் துறை அமைச்சர் பதில் அளித்தார்.

    இதுகுறித்து அம்மாநில கலால் துறை அமைச்சர் சுனில் குமார் கூறியதாவது:-

    கடந்த 2016ம் ஆண்டு ஏப்ரல் 1ம் தேதி முதல் 2023ம் ஆண்டு பிப்ரவரி 20ம் தேதி வரை, பீகார் தடை மற்றும் கலால் சட்டத்தின் கீழ் விதிகளை மீறியது தொடர்பாக 5.63 லட்சம் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

    இதேபோல், ஜனவரி 2023ம் ஆண்டு வரை மதுவிலக்கு சட்டத்தின் கீழ் மொத்தம் 7,49,000 பேர் கைது செய்யப்பட்டுள்ளன.

    தண்டனை விகிதம் 21.98% ஆகும். மதுவிலக்கு தொடர்பான வழக்குகளை விரைந்து முடிப்பதற்காக 74 சிறப்பு நீதிமன்றங்கள் (கலால்) செயல்படத் தொடங்கியுள்ளன.

    தரவுகளின்படி, பீகாரில் மதுவிலக்கு அமல்படுத்தப்பட்டதில் இருந்து 1.54 கோடி லிட்டர் சட்டவிரோத வெளிநாட்டு மதுவும், 96.71 லட்சம் லிட்டர் நாட்டு மதுவும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×