search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மணல் சிற்பம்"

    • மணல் சிற்பத்தில் பேரறிஞர் அண்ணாவின் உருவம் வரையப்பட்டுள்ளது.
    • சென்னை செயிண்ட் ஜார்ஜ் கோட்டையும் இந்த மணல் சிற்பத்தில் உருவாக்கப்பட்டுள்ளது.

    சென்னை:

    தமிழ்நாடு தினத்தையொட்டி சென்னை மெரினா கடற்கரையில் இன்று பிரமாண்ட மணல் சிற்பம் உருவாக்கப்பட்டது.

    தமிழ்நாடு தினம் இன்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி சென்னை மெரினா கடற்கரையில் ஒடிசா மாநிலத்தை சேர்ந்த மணற் சிற்பக் கலைஞர் சுதர்சன் பட்நாயக் பிரமாண்ட மணல் சிற்பத்தை அமைத்து உள்ளார்.

    50 டன் மண், 30 ஆயிரம் லிட்டர் தண்ணீர், மூலம் இந்த மணல் சிற்பம் உருவாக்கப்பட்டது. இந்த மணல் சிற்பத்தில் பேரறிஞர் அண்ணாவின் உருவம் வரையப்பட்டுள்ளது. அருகில் தமிழ்நாடு மாநிலம் வரைபடமும் உருவாக்கப்பட்டுள்ளது.

    தமிழ்நாடு நாள் என்று தமிழிலும், ஆங்கிலத்திலும் எழுத்துக்கள் உருவாக்கப்பட்டுள்ளன. சென்னை செயிண்ட் ஜார்ஜ் கோட்டையும் இந்த மணல் சிற்பத்தில் உருவாக்கப்பட்டுள்ளது.

    இதனை இன்று காலை அமைச்சர்கள் துரை முருகன், தங்கம் தென்னரசு ஆகியோர் பார்வையிட்டனர்.

    மணல் சிற்பக் கலைஞர் சுதர்சன் பட்நாயக்கை பாராட்டி அமைச்சர் துரை முருகன் சால்வை அணிவித்தார்.

    இந்த நிகழ்ச்சியில் மேயர் பிரியா, துணை மேயர் மகேஷ்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர். இந்த மணல் சிற்பம் கண்காட்சி ஒரு வாரம் பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்பட உள்ளது.

    இதனை பொது மக்கள் நேரில் சென்று பார்வையிடலாம். அருகில் நின்று செல்பி போட்டோக்கள் எடுத்துக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    • ஒடிசா பூரி கடற்கரையில் மணல் கலைஞர் சுதர்சன் பட்நாயக் 125 மணல் ரதங்களை உருவாக்கியுள்ளார்.
    • ரத யாத்திரை திருநாளில், ஒருமுறை மட்டுமே பயன்படுத்தும் பிளாஸ்டிக்கை இனி பயன்படுத்த வேண்டாம்.

    ஒடிசா மாநிலம் பூரியில் புகழ்பெற்ற ஜெகந்நாதர் கோயில் யாத்திரை விழா இன்று கோலாகலமாக நடைபெறுகிறது. கொரோனா காரணமாக 2 ஆண்டுகளுக்கு பிறகு அனுமதி தரப்பட்டதால் யாத்திரையில் லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றுள்ளனர்.

    பக்தர்களின் வெள்ளத்தில் அலங்கரிக்கப்பட்ட 3 ரதங்களில் ஜெகந்நாதர், தேவி சுபத்ரா, பாலபத்ரா வலம் வர உள்ளனர். இதனால் அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

    இந்நிலையில், பூரி ஜெந்நாதர் யோயில் யாத்திரை திருவிழாவையொட்டி, ஒடிசா பூரி கடற்கரையில் மணல் கலைஞர் சுதர்சன் பட்நாயக் 125 மணல் ரதங்களை உருவாக்கியுள்ளார்.

    இதுகுறித்து சுதர்சன் பட்நாயக் கூறுகையில், " ஜெகநாதரின் புனித ரத யாத்திரையைக் குறிக்கும் வகையில் 125 மணல் ரதங்களை உருவாக்கியுள்ளோம். இது எங்களின் புதிய உலக சாதனையாக இருக்கும்.

    மேலும், இந்த ரத யாத்திரையில் ஒருமுறை மட்டுமே பயன்படுத்தும் பிளாஸ்டிக்கை பயன்படுத்த வேண்டாம் என்று குறிக்கும் வகையிலும் மணல் சிற்பம் உருவாக்கப்பட்டுள்ளது" என்றார்.

    ×