search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மஞ்சப்பை விருதுகள்"

    • ஒருமுறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பொருட்களை தமிழக அரசு தடை விதித்துள்ளது.
    • முதல் பரிசாக ரூ.10 லட்சமும், இரண்டாம் பரிசாக ரூ.5 லட்சமும், மூன்றாம் பரிசாக ரூ.3 லட்சமும் வழங்கப்படுகிறது.

    நாகர்கோவில்:

    குமரி மாவட்ட கலெக்டர் அரவிந்த் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    ஒருமுறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பொருட்களை தமிழக அரசு தடை விதித்துள்ளது. அதில் பிளாஸ்டிக் பைகளும் அடங்கும். இந்த பிளாஸ்டிக் பைகளுக்கு மாற்றாக மஞ்சப்பை போன்ற பாரம்பரியமான சுற்றுச்சூழலுக்கு உகந்த பயன்பாட்டை ஊக்குவித்து சிறப்பாக செயல்படுத்தும் 3 பள்ளிகள், 3 கல்லூரிகள் மற்றும் 3 வணிக வளாகங்களுக்கு மஞ்சப்பை விருதுகள் வழங்கப்பட இருக்கிறது.

    முதல் பரிசாக ரூ.10 லட்சமும், இரண்டாம் பரிசாக ரூ.5 லட்சமும், மூன்றாம் பரிசாக ரூ.3 லட்சமும் வழங்கப்படுகிறது. இந்த அறிவிப்பு தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தால் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக விண்ணப்பங்களை மாவட்ட கலெக்டர் அலுவலக இணையதளமான https://kanyakumari.nic.inபதிவிறக்கம் செய்து கொள்ளலாம். விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் 1-5-2023 ஆகும்.

    இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

    • சிவகங்கை மாவட்டத்தை பிளாஸ்டிக் இல்லாததாக மாற்ற கல்வி நிறுவனங்களுக்கு மஞ்சப்பை விருதுகள் வழங்கப்பட்டது.
    • இதற்கான விண்ணப்பப் படிவங்கள் சிவகங்கை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தின் https://sivagangai.nic.in என்ற இணைய தளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்ட கலெக்டர் மதுசூதன்ரெட்டி விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    மீண்டும் மஞ்சப்பை பிரசா ரத்தை முன்னெடுத்துச் செல்லும் வகையில் தமிழக சுற்றுச்சூழல் மற்றும் பருவநிலை மாற்றத்துறை அமைச்சர் சட்டப்பேரவை கூட்டத்தொடரில் மஞ்சப்பை விருதுகளை அறிவித்தார்.

    ஒருமுறை உபயோகித்து தூக்கி எறியக்கூடிய பிளாஸ்டிக் பைகள் மற்றும் பிற தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களுக்கு மாற்றாக மஞ்சப்பை (மஞ்சள் துணிப்பை) மாற்றுகளின் பயன்பாட்டை ஊக்குவிக்கும் வகையில் 3 சிறந்த பள்ளிகள், 3 சிறந்த கல்லூரிகள் மற்றும் 3 சிறந்த வணிக வளாகங்களுக்கு இந்த மஞ்சப்பை விருது வழங்கப்படும்.

    தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம், பிளாஸ்டிக்கிற்கு மாற்றாக தங்களுடைய வளாகங்கள், சுற்றுப்புறங்கள் மற்றும் வளாகப்பகுதியை பிளாஸ்டிக் இல்லாததாக மாற்ற ஊக்குவிப்பதில் முன்மாதிரியாக திகழும் பள்ளிகள், கல்லூரிகள், வணிக வளாகங்களுக்கு மஞசப்பை விருதுகளை வழங்கி கவுரவிக்க முன் வந்துள்ளது.

    இதற்கான விண்ணப்பப் படிவங்கள் சிவகங்கை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தின் https://sivagangai.nic.in என்ற இணைய தளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்த விண்ணப்பப் படிவத்தில் தனிநபர், நிறுவனத்தலைவர் முறையாக கையொப்பமிட வேண்டும்.

    கையொப்பமிட்ட பிரதிகள் 2 நகல்கள் மற்றும் குறுவட்டு பிரதிகள் (2 எண்ணிக்கைகள்) மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் வருகிற மே மாதம் 1-ந் தேதிக்குள் சமர்ப்பிக்கப்பட வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    ×