search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மகளிரி பிரீமியர் லீக்"

    • இஸ்ஸி வோங் வெறும் 15 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
    • முதல் மகளிர் ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டி வரும் ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ளது.

    மகளிர் பிரீமியர் லீக் எலிமினேட்டர் போட்டியில் முதலில் பேட் செய்த மும்பை அணி 182 ரன்கள் குவித்தது. இதையடுத்து 183 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் யுபி வாரியர்ஸ் அணி களமிறங்கியது.

    17.4 ஓவரில் 110 ரன்களுக்கு யுபி வாரியர்ஸ் அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதனால் 72 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை அணி வெற்றி பெற்றதுடன், இறுதிப்போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு எதிராக விளையாடவுள்ளது.

    தொடக்கத்தில் மூன்று முக்கிய விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய போது அணியை சரிவிலிருந்து மீட்டார் கிரண் நவ்கிரே. ஒரு புறம் விக்கெட்டுகளை சரிந்தாலும் பவுண்டரி, சிக்ஸர் என அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த கிரண் நவ்கிரே 43 ரன் எடுத்தபோது மும்பை வேகப்பந்து வீச்சாளர் வோங் அவரது விக்கெட்டை வீழ்த்தினார்.

    அவரது விக்கெட்டோடு இல்லாமல் சிம்ரன் ஷேக், சோஃபி எக்லெஸ்டோன் ஆகியோரின் விக்கெட்டுகளையும் அடுத்தடுத்து வீழ்த்தி, மகளிர் ஐபிஎல் தொடரில் ஹாட்ரிக் விக்கெட் எடுத்த முதல் வீராங்கனை என்ற பெருமையை பெற்றார்.

    வேகத்தால் மிரட்டிய இஸ்ஸி வோங் வெறும் 15 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். பேட்டிங்கில் கலக்கிய நாட் ஸ்கிவர்-பிரண்ட், பந்துவீச்சிலும் ஒரு விக்கெட் வீழ்த்தி ஆட்டநாயகி விருதை தட்டி சென்றார்.

    முதல் மகளிர் ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டி வரும் ஞாயிற்றுக்கிழமை டெல்லி கேபிட்டல்ஸ் - மும்பை இந்தியன்ஸ் இடையே பார்போர்ன் மைதானத்தில் நடைபெறவுள்ளது.

    ×