search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "போலீசார் ஆலோசனை"

    • நாமக்கல் மண்டலத்தில் 1000-க்கும் அதிகமான கோழிப்பண்ணைகள் உள்ளன.
    • வடமாநில தொழிலாளர்கள் அச்சம் இன்றி பணிபுரிய போலீஸ் சார்பில் அனைத்து விதமான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகின்றன.

    நாமக்கல்:

    தமிழ்நாடு கோழிப்பண்ணையாளர்கள் சங்க தலைவர் சிங்கராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    நாமக்கல் மண்டலத்தில் 1000-க்கும் அதிகமான கோழிப்பண்ணைகள் உள்ளன. இவற்றில் ஆயிரக்கணக்கான வட மாநில தொழிலாளர்கள், அங்கேயே தங்கி பணிபுரிந்து வருகின்றனர்.

    கடந்த சில நாட்களுக்கு முன்பு தமிழ்நாட்டில் ஒரு சில பகுதிகளில் வடமாநில தொழிலாளர்களுக்கு ஏற்பட்ட பிரச்சினை களால், அனைத்து பகுதிகளிலும் பல்வேறு பிரச்சினைகள் ஏற்பட்டு தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

    இந்த நிலையில் கோழிப்பண்ணைகளில் பணிபுரியும், வடமாநில தொழிலாளர்கள் அச்சம் இன்றி பணிபுரிய போலீஸ் சார்பில் அனைத்து விதமான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகின்றன.

    அதன்படி, நாமக்கல் பகுதியில் உள்ள கோழிப்பண்ணைகளில் பணிபுரியும் பணியாளர்க ளுக்கு ஏதேனும் அச்சம் இருப்பின், பண்ணையா ளர்கள் விருப்பப்பட்டால், நாமக்கல் போலீஸ் இன்ஸ்பெக்டர் மூலம் நேரடியாக பண்ணை களுக்கே வந்து வடமாநில தொழிலாளர்களை சந்தித்து பேசி, அவர்களுக்கு தேவை யான ஆலோசனைகளை வழங்கி உதவிகளை செய்து கொடுத்து, அவர்க ளிடம் உள்ள அச்சத்தை போக்க உள்ளனர்.

    எனவே வட மாநில பணியாளர்களை, பணியமர்த்தியுள்ள பண்ணையாளர்கள், தங்கள் பணியாளர்களுக்கு, போலீஸ் துறை மூலம் அறிவுரை மற்றும் ஆலோ சனைகள் வழங்க விரும்பி னால், நாமக்கல் போலீஸ் நிலையத்தில் இன்ஸ்பெக்டர் சங்கரபாண்டியனை தொடர்புகொள்ளலாம்.

    இவ்வாறு அவர் அதில் தெரிவித்துள்ளார்.

    ×