search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "போட்டித்தேர்வு"

    • குரூப்- 1, காவலர் தேர்வுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் வருகிற 3-ந் தேதி நடக்கிறது.
    • போட்டித்தேர்வில் வெற்றி பெற்று அரசுப் பணியில் பல்வேறு நிலைகளில் பணியாற்றி வருகின்றனர்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    டி.என்.பி.எஸ்.சி. குரூப்- 1 மற்றும் காவலர் தேர்வுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் மாநில அரசு பணிகளுக்கான போட்டித்தேர்வுகள் மற்றும் மத்திய அரசுப் பணிகளுக்கான போட்டித்தேர்வுகளுக்கு விண்ண ப்பித்து தயாரா கிவரும் இளைஞர்களுக்காக ராமநாதபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் தன்னார்வ பயிலும் வட்டம் என்ற அமைப்பு தொடர்ந்து செயல்பட்டுவருகிறது.

    இங்கு பல்வேறு போட்டித்தேர்வுகளுக்கான நூல்கள், மாதாந்திர இதழ்கள் மற்றும் நாளிதழ்கள் அடங்கிய நூலகம் செயல்பட்டு வருகிறது. தன்னார்வ பயிலும் வட்டம் மூலமாக போட்டித்தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகிறது.

    இந்த பயிற்சி வகுப்பில் கலந்து கொண்ட பலர் போட்டித்தேர்வில் வெற்றி பெற்று அரசுப் பணியில் பல்வேறு நிலைகளில் பணியாற்றி வருகின்றனர்.

    தற்போது அறிவிக்க ப்பட்டுள்ள தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைய ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு (தொகுதி-I) மற்றும் தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரிய 2-ம் நிலைக் காவலர் (ஆயுதப்படை மற்றும் தமிழ்நாடு சிறப்புக் காவல்படை), 2-ம் நிலை சிறைக் காவலர் மற்றும் தீயணைப்பாளர் தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் தொடங்கப்பட உள்ளன.

    இந்த தேர்வுகளுக்கான அறிமுக வகுப்பு வருகிற 3-ந் தேதி காலை 10.30 மணியளவில் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் நடைபெற உள்ளது. இதில் பங்கேற்க ஆர்வமும், விருப்பமும் உள்ள போட்டித்தேர்வுக்கு தயாராகும் இளைஞர்கள் அறிமுக வகுப்பு நாளில் மார்பளவு புகைப்படம் மற்றும் தேர்வுக்கு விண்ணப்பித்த விவரங்களுடன் கலந்து கொள்ளலாம்.

    பயிற்சி தொடர்பாக ராமநாதபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தை நேரிலோ அல்லது 9487375737 என்ற மொபைல் எண்ணிலோ தொடர்பு கொண்டும் பதிவு செய்து இப்பயிற்சி வகுப்பில் பங்கேற்று பயனடையலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.i

    ×