search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "போடி தாலுகா அலுவலகம்"

    தங்களுக்கு பட்டா வழங்க கோரி போடி தாலுகா அலுவலகத்தை மக்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

    மேலசொக்காநாதபுரம்:

    போடி ஜீவாநகர் தெற்கு தெருவில் உள்ள அரசு புறம்போக்கு இடத்தில் சுமார் 60 ஆண்டுக்கு மேலாக 50- க்கும் மேற்பட்ட ஏழை எளிய குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் வசித்து வருகின்றனர்.

    இவர்கள் போடி நாயக்கனூர் நகராட்சிக்கு சொத்துவரி, குடிநீர் மற்றும் மின் கட்டணம் அனைத்தும் முறையாக செலுத்தி அதற்கான ரசீது பெற்று வருகின்றனர். கடந்த 3 தலைமுறைக்கும் மேலாக குடியிருந்து வரும் தங்களை சிலர் இப்பகுதியிலிருந்து வெளியேற கோரி கட்டாயப்படுத்துவதாக புகார் தெரிவித்தனர்.

    இது குறித்து அதிகாரிகளிடம் மனு கொடுத்து உள்ளனர். ஆனாலும் இந்த பிரச்சினை தொடர்ந்து வெடித்து வருகிறது.

    எனினும் போடி தாசில்தாரிடம் பலமுறை கோரிக்கை விடுத்தும் வீட்டுமனை பட்டா வழங்காமல் அலைக்கழித்து வந்து உள்ளார். இது முதல்- அமைச்சர் தனிப்பிரிவுக்கும் தேனி மாவட்ட கலெக்டருக்கும் மனு அளித்துள்ளனர்.

    தற்போது அந்த பகுதியை சேர்ந்த சிலர் இப்பகுதியிலிருந்து உடனடியாக வெளியேற கோரி பல்வேறு முயற்சிகள் செய்து வருகின்றனர். எனவே இதனை கண்டித்தும் தங்களுக்கு பட்டா வழங்க கோரியும் ஏராளமானோர் போடி தாசில்தார் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் செய்தனர். அதன்பின்னர் தாசில்தாரிடம் மனு கொடுத்தனர். மனுவை பரிசீலித்த தாசில்தார் இது குறித்து உரிய விசாரணை நடத்தி பதில் அளிப்பதாக தெரிவித்துள்ளார்.

    போராட்டகாரர்கள் கூறுகையில் தங்களுக்கு வீட்டுமனைப்பட்டா வழங்கா விட்டால் அனைவரும் ஒன்று திரண்டு உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபடப் போவதாக தெரிவித்து உள்ளனர்.

    ×