search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பொங்கல் பானைகள்"

    • திருப்பூரில் பாத்திர உற்பத்தியாளர்கள் தலைமுறை தலைமுறையாக பொங்கல் பானை உற்பத்தி செய்யும் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர்.
    • தற்போது விலை அதிகமாக இருப்பதால் பெரும்பான்மையினர் அதிக விலை கொடுத்து வாங்க முன்வருவதில்லை.

    அனுப்பர்பாளையம்:

    ஜனவரி மாதம் 15-ந்தேதி பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுகிறது. இதையொட்டி திருப்பூர் அனுப்பர்பாளையம், ஆத்துப்பாளையம், வேலம்பாளையம், அங்கேரிபாளையம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள பாத்திர பட்டறைகளில் பொங்கல் பானை உற்பத்தி சூடு பிடித்துள்ளது. அரை கிலோ முதல் 10 கிலோ வரை அரிசி பொங்கலிடும் வகையில் பானை உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. கோவை, ஈரோடு, சேலம், நெல்லை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஆர்டர்கள் கிடைக்கப்பெற்றுள்ளன.

    திருப்பூரில் பாத்திர உற்பத்தியாளர்கள் தலைமுறை தலைமுறையாக பொங்கல் பானை உற்பத்தி செய்யும் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். தரமான தகடு, துல்லிய வடிவமைப்பு, குறிப்பிட்ட நாட்களில் ஆர்டரை செய்து கொடுத்தல் உள்ளிட்ட பணிகளால் பலர் இங்கு ஆர்டர் கொடுக்க விரும்புகின்றனர்.

    கடந்த ஆண்டை ஒப்பிடும்போது இந்த ஆண்டு ஆர்டர் குறைவாக உள்ளது. கடந்த ஆண்டுக்கு முன்பு ஒரு கிலோ பித்தளை தகடு ரூ.270க்கும், கடந்த ஆண்டு ரூ.500 க்கும் விற்கப்பட்டது. இந்த ஆண்டு ரூ.600 முதல் 650 வரை விற்கிறது. தகடை வெட்டி பானையாக மாற்றி விற்பனைக்கு கொண்டு வரும்போது ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்ய வேண்டி உள்ளது. விலை அதிகம் என்பதால் மக்கள் பானை வாங்க தயக்கம் காட்டுகின்றனர். முன்பு மக்கள் பழைய பானை இருந்தாலும் பொங்கலிட புது பானை வாங்குவர்.

    தற்போது விலை அதிகமாக இருப்பதால் பெரும்பான்மையினர் அதிக விலை கொடுத்து வாங்க முன்வருவதில்லை. பழைய பானையை பாலிஷ் செய்து பயன்படுத்துகின்றனர் என்கின்றனர் உற்பத்தியாளர்கள். பொங்கல் பண்டிகைக்கு குறைந்த நாட்களே இருப்பதால் பெற்ற ஆர்டர்களுக்கு உரிய பானைகளை உற்பத்தி செய்து அனுப்பும் பணியில் உற்பத்தியாளர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

    • அரை கிலோ முதல் 10 கிலோ வரை அரிசி பொங்கலிடும் வகையில் பானை உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது.
    • ஆர்டர்களுக்கு உரிய பானைகளை உற்பத்தி செய்து அனுப்பும் பணியில் உற்பத்தியாளர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

    அனுப்பர்பாளையம் : 

    ஜனவரி மாதம் 15-ந்தேதி பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுகிறது. இதையொட்டி திருப்பூர் அனுப்பர்பாளையம், ஆத்துப்பாளையம், வேலம்பாளையம், அங்கேரிபாளையம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள பாத்திர பட்டறைகளில் பொங்கல் பானை உற்பத்தி சூடு பிடித்துள்ளது. அரை கிலோ முதல் 10 கிலோ வரை அரிசி பொங்கலிடும் வகையில் பானை உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. கோவை, ஈரோடு, சேலம், நெல்லை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஆர்டர்கள் கிடைக்கப்பெற்றுள்ளன.

    திருப்பூரில் பாத்திர உற்பத்தியாளர்கள் தலைமுறை தலைமுறையாக பொங்கல் பானை உற்பத்தி செய்யும் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். தரமான தகடு, துல்லிய வடிவமைப்பு, குறிப்பிட்ட நாட்களில் ஆர்டரை செய்து கொடுத்தல் உள்ளிட்ட பணிகளால் பலர் இங்கு ஆர்டர் கொடுக்க விரும்புகின்றனர்.

    கடந்த ஆண்டை ஒப்பிடும்போது இந்த ஆண்டு ஆர்டர் குறைவாக உள்ளது. கடந்த ஆண்டுக்கு முன்பு ஒரு கிலோ பித்தளை தகடு ரூ.270க்கும், கடந்த ஆண்டு ரூ.500 க்கும் விற்கப்பட்டது. இந்த ஆண்டு ரூ.600 முதல் 650 வரை விற்கிறது. தகடை வெட்டி பானையாக மாற்றி விற்பனைக்கு கொண்டு வரும்போது ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்ய வேண்டி உள்ளது. விலை அதிகம் என்பதால் மக்கள் பானை வாங்க தயக்கம் காட்டுகின்றனர்.முன்பு மக்கள் பழைய பானை இருந்தாலும் பொங்கலிட புது பானை வாங்குவர்.

    தற்போது விலை அதிகமாக இருப்பதால் பெரும்பான்மையினர் அதிக விலை கொடுத்து வாங்க முன்வருவதில்லை. பழைய பானையை பாலிஷ் செய்து பயன்படுத்துகின்றனர் என்கின்றனர் உற்பத்தியாளர்கள்.பொங்கல் பண்டிகைக்கு குறைந்த நாட்களே இருப்பதால் பெற்ற ஆர்டர்களுக்கு உரிய பானைகளை உற்பத்தி செய்து அனுப்பும் பணியில் உற்பத்தியாளர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

    ×