search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பெட்டகங்கள்"

    • ஊட்டச்சத்து குறைபாடுள்ள குழந்தைகள் மற்றும் தாய்மார்களுக்கான சிறப்பு ஊட்டச்சத்து தொகுப்பு வழங்கும் திட்டத்தினை சென்னையில் நடைபெற்ற “ஏற்றுமிகு ஏழு திட்டங்கள்” நிகழ்ச்சியில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
    • சேலம், அய்யந்திரு மாளிகை, வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் உள்ள குழந்தைகள் மையத்தில் குழந்தைகளுக்கான சிறப்பு உணவு மற்றும் ஊட்டச்சத்து பெட்டகங்களை கலெக்டர் கார்மேகம் வழங்கினார்.

    சேலம்:

    தமிழக அரசின் "ஊட்டச்சத்தை உறுதிசெய்" திட்டத்தின் கீழ் ஊட்டச்சத்து குறைபாடுள்ள குழந்தைகள் மற்றும் தாய்மார்களுக்கான சிறப்பு ஊட்டச்சத்து தொகுப்பு வழங்கும் திட்டத்தினை சென்னையில் நடைபெற்ற "ஏற்றுமிகு ஏழு திட்டங்கள்" நிகழ்ச்சியில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

    இத்திட்டத்தின் மூலம் 6 மாதம் முதல் 2 வயது வரையுள்ள கடுமையான ஊட்டச்சத்து குறைபாடுள்ள குழந்தைகள் மற்றும் மிதமான ஊட்டச்சத்து குறைபாடுள்ள குழந்தைகள் ஆகியோர்களுக்கு 8 வாரங்கள் சிறப்பு உணவாக, உடனடியாக உட்கொள்ளும் சிகிச்சை உணவு அளிக்கவும், முதல் 6 மாதம் வரை கடுமையான ஊட்டச்சத்து குறைபாடுடைய குழந்தைகளின் தாய்மார்களுக்கு அவர்களின் ஊட்டச்சத்து நிலையினை மேம்படுத்தி குழந்தைகளுக்கு தேவையான தாய்பால் கிடைப்பதை உறுதி செய்யும் வகையில் 2 ஊட்டச்சத்து பெட்டகங்கள் வழங்கப்படுகிறது.

    சேலம் மாவட்டத்தில் கடுமையான ஊட்டச்சத்து குறைபாடுள்ள 6 மாதம் வரையுள்ள 468 குழந்தைகளின் தாய்மார்களுக்கு 2 ஊட்டச்சத்து பெட்டகமும் தொகுப்பும், மிதமான எடை குறைவுள்ள 616 குழந்தைகளின் தாய்மார்களுக்கு 1 ஊட்டச்சத்து பெட்டக தொகுப்பு வழங்கப்படுகிறது. மேலும், 6 மாதம் முதல் 6 வயது வரையுள்ள கடுமையான ஊட்டச்சத்து குறைபாடுள்ள 2,581 குழந்தைகளுக்கு தொகுப்பும் வழங்கப்படுகிறது.

    சேலம், அய்யந்திரு மாளிகை, வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் உள்ள குழந்தைகள் மையத்தில் குழந்தைகளுக்கான சிறப்பு உணவு மற்றும் ஊட்டச்சத்து பெட்டகங்களை கலெக்டர் கார்மேகம் வழங்கினார்.

    பின்னர் அவர் கூறுகையில், உடனடியாக உட்கொள்ளும் சிகிச்சை குழந்தைகளின் ஊட்டச்சத்தை மேம்படுத்தக்கூடிய உணவு என்பது யுனிசெப் அமைப்பினால் பரிந்துரைக்கப்பட்ட வழுவழுப்பான பசை (paste) போன்று இருக்கும் உணவுப் பொருளாகும். இதில், அரைத்த வேர்க்கடலை, பால் பவுடர், எண்ணெய், சர்க்கரை, வைட்டமின்கள் மற்றும் மினரல் ஆகிய பொருட்கள் அடங்கி இருக்கும்.

    ஊட்டச்சத்து குறைபாடுள்ள தாய்மார்களுக்கு வழங்கப்படும் ஊட்டச்சத்து பெட்டகத்தில், தாய்மார்களுக்கான சிறப்பு ஆரோக்கிய உணவுக் கலவை, இரும்புச் சத்து மருந்து, விதை நீக்கப்பட்ட பேரீச்சம் பழம், குடற்புழு நீக்க மாத்திரை, ஆவின் நெய் மற்றும் பருத்தி துண்டு ஆகியன அடங்கியிருக்கும் என்றார்.

    நிகழ்ச்சியில் சேலம் மாநகராட்சி துணை மேயர் சாரதா தேவி, மாநகர் நல அலுவலர் யோகானந்த், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட இயக்குநர் பரிமளாதேவி உள்பட பலர் கலந்துகொண்டனர்.

    ×