search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பூச்சொரிதல் விழா"

    • முசிறி மாரியம்மன் கோவில்களில் பூச்சொரிதல் விழா நடைபெற்றது
    • முக்கிய வீதிகளில் மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் மகா மாரியம்மன் சிறப்பு அலங்காரத்தில் வீதி உலா நடைபெற்றது.

    முசிறி:

    சித்திரை மாதத்தை முன்னிட்டு முசிறியில் மாரியம்மன் கோவில்களில் பூச்சொரிதல் விழா நடைபெற்றது. நிகழ்ச்சியில் முசிறியில் உள்ள கள்ளத்தெரு மகா மாரியம்மன், பாலத்து மாரியம்மன் மேலத்தெரு மகா மாரியம்மன், சின்ன சமயபுரத்தாள், கருமாரியம்மன், கீழத்தெரு மகா மாரியம்மன் ஆகிய கோவில்களில் பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு மாரியம்மனுக்கு பூக்களால் பூச்சொரிதல் நடத்தினர். இதனை தொடர்ந்து முக்கிய வீதிகளில் மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் மகா மாரியம்மன் சிறப்பு அலங்காரத்தில் வீதி உலா நடைபெற்றது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை அந்தந்த கோவில்களின் விழா குழுவினர் சிறப்பாக செய்திருந்தனர்.

    • தேவகோட்டை அருகே முத்துமாரியம்மன் கோவில் பூச்சொரிதல் விழா நடந்தது.
    • இதில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு பிரசாதமும், அன்னதானமும் வழங்கப்பட்டது.

    தேவகோட்டை

    சிவகங்ைக மாவட்டம் தேவகோட்டை அருகே உள்ள கோட்டூர் கிராமத்தில் பழமையான முத்துமாரியம்மன் கோவில் உள்ளது. இங்கு பங்குனி உற்சவ விழா நடைபெற்று வருகிறது. காப்பு கட்டிய நாள் முதல் காலை, மாலை நேரங்களில் லட்சார்ச்சனை, 108 சங்காபிஷேகம், பால், தயிர், மஞ்சள் மற்றும் சிறப்பு அபிஷேகம் சிறப்பு அலங்காரம் நடந்தது. விழாவின் ஒரு பகுதியாக பூச்சொரிதல் விழா நடந்தது. இதையொட்டி நயினார்வயல் அகத்தீசுவரர் கோவிலில் இருந்து 1000-க்கும் மேற்பட்டோர் புறப்பட்டு பல வகையான பூக்கள் அடங்கிய தட்டுகளை எடுத்து வந்தனர். பின்னர் கோட்டூர் முத்துமாரியம்மனுக்கு பூக்களால் அபிஷேகம் செய்யப்பட்டது. இதில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு பிரசாதமும், அன்னதானமும் வழங்கப்பட்டது.

    பங்குனி உற்சவ விழா முளைப்பாரி திருவிழாவில் இன்று இரவு அம்மன் கோவிலுக்கு வந்தடைந்தது. நாளை காலை முளைப்பாரி செலுத்துதல் நடைபெறும். அதனைத் தொடர்ந்து மாலை மஞ்சுவிரட்டு நடைபெறுகிறது.

    ×