search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பூங்கா அமைக்கும் பணி"

    • ஏரியை நவீனப்படுத்தவும், ஏரிக்கரையில் பூங்கா அமைக்கவும்ரூ.1 கோடி யே 93 லட்சத்து 80 ஆயிரம்ஒதுக்கீடு செய்யப்பட்டது.
    • வயிற்றில் கட்டி அகற்றப்பட்டு சிகிச்சை பெற்று வரும் அனையேரியை சேர்ந்த பெண் ராணிஎன்பவரை பார்வையிட்டு மருத்துவ உதவியாக ரூ.10 ஆயிரம் வழங்கினார்.

    விழுப்புரம்:

    செஞ்சி திருவண்ணாமலை சாலையில் பி. ஏரி உள்ளது. இதனை நவீனப்படுத்தவும், ஏரிக்கரையில் பூங்கா அமைக்கவும்ரூ.1 கோடி யே 93 லட்சத்து 80 ஆயிரம்ஒதுக்கீடு செய்ய ப்பட்டு அப்பணி தொடங்கு வதற்கான பூமி பூஜை நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு திண்டிவனம் உதவி கலெக்டர் அமீத் தலைமை தாங்கினார். 

    மாவட்ட திட்ட இயக்குனர் சங்கர், செஞ்சி பேரூராட்சி மன்ற தலைவர் மொக்தியார் மஸ்தான் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.செயல் அலுவலர் ராமலிங்கம் வரவேற்றார். நிகழ்ச்சியில் சிறுபான்மையினர் நலத்து றை அமைச்சர் செஞ்சி மஸ்தான் கலந்து கொண்டு பூமி பூஜை போட்டு பணியை தொடங்கி வைத்தார். 

    நிகழ்ச்சியில் செஞ்சி யூனியன் தலைவர் விஜய குமார், தாசில்தார் நெகருன்னிசா, மாவட்ட விவசாய அணி அஞ்சா ஞ்சேரி கணேசன், மாவட்ட கவுன்சிலர் அரங்கஏழுமலை, மாவட்டவழக்கறிஞர் அணி மணிவண்ணன், பொதுக்குழு உறுப்பினர் செல்வராஜ், ஒன்றிய செயலாளர்கள் நெடு ஞ்செழியன், பச்சையப்பன், அண்ணாதுரை பேரூராட்சி துணைத்தலைவர் ராஜ லட்சுமி செயல்மணி மற்றும் அனைத்துபேரூரா ட்சி உறுப்பினர்களும் கலந்து கொண்டனர். தொடர்ந்து அமைச்சர் செஞ்சி மஸ்தான் செஞ்சி அரசு மருத்துவமனையில் வயிற்றில் இருந்து 6 கிலோ கட்டி அகற்றப்பட்டு சிகிச்சை பெற்று வரும் அனையேரியை சேர்ந்த பெண் ராணிஎன்பவரை பார்வையிட்டு மருத்துவ உதவியாக ரூ.10 ஆயிரம் வழங்கினார்.

    • திருச்சி பாலக்கரை பாலத்தின் அடியில் பூங்கா அமைப்பது தொடர்பான பணிகள் தொடங்கி உள்ளதை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்
    • திருச்சி பாலக்கரை பாலத்தின் அடியில் பூங்கா அமைப்பது தொடர்பான பணிகள் தொடங்கி உள்ளதை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்

    திருச்சி:

    திருச்சி மாநகராட்சி சார்பில் மாநகர் முழுவதும் தூய்மை பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. தொடர்ந்து மாநகராட்சி பகுதிகளில் பொது மக்களின் பயன்பாட்டிற்காக மேம்பாலங்களின் அடியில் தரிசாக கிடக்கும் நிலங்களில் பூங்காக்கள் அமைப்பது, திறந்தவெளி உடற்பயிற்சி கூடங்கள் அமைப்பது உள்ளிட்ட பணிகளில் தற்போது மாநகராட்சி அதிகாரிகள் கவனம் செலுத்தி வருகிறார்கள்.

    திருச்சி மாநகராட்சிகுட்பட்ட 5 மண்டல அலுவலகங்களிலும் உள்ள உதவி ஆணையர்கள் மாநகர் பகுதிகளை தூய்மையாக வைத்து கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் பொது மக்களின் கோரிக்கைகளையும் உடனடியாக நிைவேற்றவும் நடிவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

    அதைத் தொடர்ந்து பாலக்கரை, அரியமங்கலம் மாநகராட்சி கோட்ட அலுவலகம் அருகே அமைந்துள்ள மேம்பாலத்தின் கீழ் இருக்கும் இடங்களை அங்குள்ளவர்கள் வாகனம் நிறுத்துவது, கட்டுமான பொருட்களை அடுக்கி வைத்திருப்பது, மது அருந்துவது உள்ளிட்ட செயல்களுக்கு பயன்படுத்தி வந்தனர்.

    பொது மக்கள் அந்த இடத்தில் மாநகராட்சி சார்பில் பூங்காக்கள் அமைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். அந்த கோரிக்கையை நிறைவேற்றும் வகையில் அரியமங்கலம் கோட்ட உதவி ஆணையர் அக்பர் அலி தலைமையில் பாலக்கரை மேம்பாலத்தின் கீழ் இரு புறமும் பூங்காக்கள்அமைக்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது.

    இதுகுறித்து அரியமங்கலம் கோட்ட உதவி ஆணையர் அக்பர் அலி கூறுகையில், பொதுமக்கள் பாலக்கரை பகுதியில் உள்ள மேம்பாலத்தின் அடியில் நீண்ட நாட்களாக பூங்காக்கள் அமைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்து வந்தனர். குறிப்பாக வயதானவர்கள், கர்ப்பிணி பெண்கள், குழந்தைகள் மாலை நேரத்தில் நடைபயணம் மேற்கொள்ள வசதியாக இருக்கும் என்ற அடிப்படையில் இதனை வலியுறுத்தி வந்தனர்.

    அந்த அடிப்படையில் தற்போது பாலக்கரை பகுதியில் உள்ள மேம்பாலத்தின் அடியில் பூங்காக்கள் அமைக்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது. மேலும் அந்த பூங்காக்களை உருவாக்கி தனியார் நிறுவனங்களின் கட்டுப்பாட்டில் கொடுத்துவிடுவோம். அவர்கள் அதை திறம்பட வழிநடத்துவார்கள் என்றார்.

    ×