search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பாலக்கரை பாலத்தின் கீழ் பூங்கா அமைக்க நடவடிக்கை
    X

    பாலக்கரை பாலத்தின் கீழ் பூங்கா அமைக்க நடவடிக்கை

    • திருச்சி பாலக்கரை பாலத்தின் அடியில் பூங்கா அமைப்பது தொடர்பான பணிகள் தொடங்கி உள்ளதை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்
    • திருச்சி பாலக்கரை பாலத்தின் அடியில் பூங்கா அமைப்பது தொடர்பான பணிகள் தொடங்கி உள்ளதை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்

    திருச்சி:

    திருச்சி மாநகராட்சி சார்பில் மாநகர் முழுவதும் தூய்மை பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. தொடர்ந்து மாநகராட்சி பகுதிகளில் பொது மக்களின் பயன்பாட்டிற்காக மேம்பாலங்களின் அடியில் தரிசாக கிடக்கும் நிலங்களில் பூங்காக்கள் அமைப்பது, திறந்தவெளி உடற்பயிற்சி கூடங்கள் அமைப்பது உள்ளிட்ட பணிகளில் தற்போது மாநகராட்சி அதிகாரிகள் கவனம் செலுத்தி வருகிறார்கள்.

    திருச்சி மாநகராட்சிகுட்பட்ட 5 மண்டல அலுவலகங்களிலும் உள்ள உதவி ஆணையர்கள் மாநகர் பகுதிகளை தூய்மையாக வைத்து கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் பொது மக்களின் கோரிக்கைகளையும் உடனடியாக நிைவேற்றவும் நடிவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

    அதைத் தொடர்ந்து பாலக்கரை, அரியமங்கலம் மாநகராட்சி கோட்ட அலுவலகம் அருகே அமைந்துள்ள மேம்பாலத்தின் கீழ் இருக்கும் இடங்களை அங்குள்ளவர்கள் வாகனம் நிறுத்துவது, கட்டுமான பொருட்களை அடுக்கி வைத்திருப்பது, மது அருந்துவது உள்ளிட்ட செயல்களுக்கு பயன்படுத்தி வந்தனர்.

    பொது மக்கள் அந்த இடத்தில் மாநகராட்சி சார்பில் பூங்காக்கள் அமைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். அந்த கோரிக்கையை நிறைவேற்றும் வகையில் அரியமங்கலம் கோட்ட உதவி ஆணையர் அக்பர் அலி தலைமையில் பாலக்கரை மேம்பாலத்தின் கீழ் இரு புறமும் பூங்காக்கள்அமைக்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது.

    இதுகுறித்து அரியமங்கலம் கோட்ட உதவி ஆணையர் அக்பர் அலி கூறுகையில், பொதுமக்கள் பாலக்கரை பகுதியில் உள்ள மேம்பாலத்தின் அடியில் நீண்ட நாட்களாக பூங்காக்கள் அமைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்து வந்தனர். குறிப்பாக வயதானவர்கள், கர்ப்பிணி பெண்கள், குழந்தைகள் மாலை நேரத்தில் நடைபயணம் மேற்கொள்ள வசதியாக இருக்கும் என்ற அடிப்படையில் இதனை வலியுறுத்தி வந்தனர்.

    அந்த அடிப்படையில் தற்போது பாலக்கரை பகுதியில் உள்ள மேம்பாலத்தின் அடியில் பூங்காக்கள் அமைக்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது. மேலும் அந்த பூங்காக்களை உருவாக்கி தனியார் நிறுவனங்களின் கட்டுப்பாட்டில் கொடுத்துவிடுவோம். அவர்கள் அதை திறம்பட வழிநடத்துவார்கள் என்றார்.

    Next Story
    ×