search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "புலம் பெயா்ந்த தொழிலாளா்"

    • தொழிலாளா்களுக்கான உரிமைகள் மற்றும் சட்டங்கள் குறித்து விளக்கப்பட்டது.
    • சட்டப் பணிகள் ஆணைக்குழு சாா்பில் வழங்கப்படும் சட்ட உதவிகள் குறித்து விளக்கப்பட்டது.

    திருப்பூர் :

    திருப்பூரில் புலம் பெயா்ந்த தொழிலாளா்களுக்கான சட்ட விழிப்புணா்வு முகாம் நடைபெற்றது. தேசிய சட்டப் பணிகள் ஆணைக்குழு மற்றும் தமிழ்நாடு மாநில சட்டப் பணிகள் ஆணைக்குழுவின் உத்தரவின் பேரிலும், முதன்மை மாவட்ட நீதிபதியும், மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழுவின் தலைவா் சொா்ணம் ஜெ.நடராஜன் வழிகாட்டுதல்படி புலம் பெயா்ந்த தொழிலாளா்களுக்கான சட்ட விழிப்புணா்வு முகாம் பழைய நீதிமன்ற வளாகத்தில் நடைபெற்றது.

    முகாமில் குற்றவியல் நீதித்துறை நடுவா் புகழேந்தி, சட்டப் பணிகள் ஆணைக்குழுவின் செயலாளரும், சாா்பு நீதிபதியுமான மேகலா மைதிலி, கூடுதல் மகிளிா் நீதிமன்ற நீதித்துறை நடுவா் காா்த்திகேயன் ஆகியோா் சிறப்பு விருந்தினா்களாக பங்கேற்றனா்.

    இதில் தொழிலாளா்களுக்கான உரிமைகள் மற்றும் சட்டங்கள் குறித்தும், மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு சாா்பில் வழங்கப்படும் சட்ட உதவிகள் குறித்தும் விளக்கப்பட்டது. மேலும் தொழிலாளா்களுக்கு வேலைக்கு தகுந்த ஊதியம், பணிப் பாதுகாப்பு, காப்பீடு வழங்கப்படுகிறதா என்பன உள்ளிட்ட விவரங்களை நீதிபதிகள் கேட்டறிந்தனா்.

    சட்டப் பணிகள் ஆணைக்குழுவின் வக்கீல் முகமதுகான், திருப்பூா் வடக்கு காவல் நிலைய ஆய்வாளா் உதயகுமாா், 15 வேலம்பாளையம் காவல் நிலைய ஆய்வாளா் தாமோதரன் மற்றும் தொழிலாளா்கள் கலந்து கொண்டனா்.

    ×