search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "புதிய மதரஸா"

    • கீழக்கரையில் புதிய மதரஸா திறப்பு விழா நடந்தது.
    • இந்த நிகழ்ச்சிக்கு சேலம் நூருல் இஸ்லாம் அரபிக் கல்லூரி பேராசிரியர் நைனார் முஹம்மது பாக்கவி ஹழ்ரத் கிப்லா தலைமையில் தாங்கினார்.

    கீழக்கரை

    கீழக்கரை பி.எஸ்.எம். பெண்கள் விளையாட்டு மைதானத்தில் ரஹ்மத் ஆயிஷா பட்டத்து சுல்த்தான் அப்துல் காதர் மரைக்காயர் அறக்கட்டளை மற்றும் ஆயிஷா ஹமீதா ஹிப்ஸ் மதரஸா, அதாயி பெண்கள் ஹிப்ஸ் மதரசா சார்பில் கிராஅத் மாநாடு - 2022 மற்றும் பெண்களுக்கான புதிய மதரஸா திறப்பு விழா நடந்தது.

    இந்த நிகழ்ச்சிக்கு சேலம் நூருல் இஸ்லாம் அரபிக் கல்லூரி பேராசிரியர் நைனார் முஹம்மது பாக்கவி ஹழ்ரத் கிப்லா தலைமையில் தாங்கினார். பி.எஸ்.எம். நிறுவனத்தின் செயல் இயக்குனர்கள் சலீம் அன்சாரி, முஹம்மது அலி ஆகியோர் பெண்களுக்கான புதிய மதரஸாவை திறந்து வைத்தனர்.

    இதை தொடர்ந்து கிராஅத் மாநாடு - 2022 தொடங்கியது. தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், பிற மாநிலங்களில் இருந்தும் வந்த ஏராளமான பேஷ் இமாம்கள் (மதகுரு) மாநாட்டில் கலந்து கொண்டு பேசினர்.

    பெங்களூர், மைசூர் பகுதியிலிருந்து குர்ஆனை முறையாக ஓதக்கூடிய காரிகள் ஏராளமானோர் கலந்து கொண்டு தங்கள் ஓதும் திறனை வெளிப்படுத்தினர்.

    சிறப்பு அழைப்பாளராக சேலம் நூருல் இஸ்லாம் அரபிக் கல்லூரி பேராசிரியர் நைனார் முஹம்மது பாக்கவி ஹழ்ரத் கிப்லா கலந்து கொண்டு பேசினார். மக்கள் சேவை அறக்கட்டளை நிறுவனர் உமர், கீழக்கரை நகர்மன்ற தலைவர் செஹனாஸ் ஆபிதா, உதவி தலைவர் வழக்கறிஞர் ஹமீது சுல்த்தான், ஜஹாங்கீர் அருஸி, கீழக்கரை டவுன் காஜி காதர் பக்ச ஹூஸைன், தில்லையேந்தல் ஊராட்சி தலைவர் கிருஷ்ணமூர்த்தி உள்பட பல முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

    விழாவிற்கான ஏற்பாடுகளை கீழக்கரை பி.எஸ்.எம். குழுமத்தின் சேர்மன் ஹபிபுல்லா கான், பி.எஸ்.எம். ஹூண்டாய் நிறுவன நிர்வாக இயக்குனர் மஹ்மூத் ஹூசைன் ஆகியோர் ஆலோசனையின் பேரில் செய்திருந்தனர்.

    ×