search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "புதிய குடியிருப்புகள்"

    • முகாம்வாழ் தமிழர்களுக்கு புதிய குடியிருப்புகளை அமைச்சர் தொடங்கி வைத்தார்.
    • நகராட்சி துணைத்தலைவர் பாலசுந்தரம் நகர்செயலாளர் பொன்னுசாமி ஆகியோர் கலந்து கொண்டனர்.

    மானாமதுரை

    மான மானாமதுரை ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட மூங்கிலூரணி பகுதியில் ரூ.10.55 கோடி மதிப்பீட்டில் 188 முகாம் வாழ் தமிழர்களுக்கு குடியிருப்புக்கள் கட்டும் பணிக்கான பூமிபூஜை நடந்தது. கலெக்டர் ஆஷா அஜீத் தலைமை தாங்கினார். தமிழரசி எம்.எல்.ஏ. முன்னிலை வகித்தார்.

    அமைச்சர் பெரிய கருப்பன் கலந்து கொண்டு புதிய குடியிருப்புகள் கட்டும் பணிகளை தொடங்கி வைத்தார்.

    பின்னர் அமைச்சர் பேசியதாவது:-

    சிவகங்கை மாவட்டத்தில் தாயமங்கலம், காரையூர், மூங்கிலூரணி, சென்னாலக் குடி, ஒக்கூர், தாழையூர் ஆகிய 6 பகுதிகளில் முகாம் வாழ் தமிழர்கள் வாழும் பகுதிகள் உள்ளது. இங்கு மொத்தம் 1,087 குடும்பங் களை சார்ந்த 3,206 நபர்கள் உள்ளனர்.

    அதில், ஒக்கூர் ஊராட்சி யில் 235 குடும்பங்களைச் சார்ந்த 669 நபர்கள் பயன்பெறும் வகையில், 88 தொகுப்பு வீடுகளும், 2 தனி வீடுகளும் மொத்தம் 90 வீடுகள் கட்டி முடிக்கப்பட்டு, தமிழக முதல்-அமைச்சரால் கடந்த 17-ந்தேதி காணொலி காட்சி வாயிலாக திறந்து வைக்கப்பட்டது.

    மீதமுள்ள 5 பகுதிகளிலும் மொத்தம் 372 வீடுகள் கட்டித்தர திட்டமிடப்பட்டு, ஊரக வளர்ச்சித் துறையின் சார்பில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. அதன் தொடர்ச்சியாக மானாமதுரை ஊராட்சி ஒன்றியம், மாங்குளம் ஊராட்சிக்குட்பட்ட மூங்கி லூரணி பகுதியில் உள்ள இலங்கை மறுவாழ்வு முகா மில் குடியிருக்கும் 188 குடும்பங்கள் பயன்பெறும் வகையில், இலங்கை மறு வாழ்வு திட்டத்தின் கீழ், தலா ரூ.5.61 லட்சம் வீதம் மொத்தம் ரூ.1,054.68 லட்சம் மதிப்பீட்டில் 4 வீடுகளாக வடிவமைத்து மொத்தம் 47 தொகுப்பு வீடுகளை கட்டு வதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது. அதற்கான கட்டுமான பணிகளுக்கு அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் பேசினார்.

    நிகழ்ச்சியில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர் சிவராமன், மானாமதுரை நகராட்சி தலைவர் மாரியப்பன் கென்னடி, மானாமதுரை ஊராட்சி ஒன்றியக்குழுத் தலைவர் லதா அண்ணா துரை, மாங்குளம் ஊராட்சி மன்றத்தலைவர் முருக வள்ளி தேசிங்கு ராஜா, நகராட்சி துணைத்தலைவர் பாலசுந்தரம் நகர்செயலாளர் பொன்னுசாமி ஆகியோர் கலந்து கொண்டனர்.

    • விருதுநகர் அருகே இலங்கை தமிழர் முகாம்களில் குடியிருப்புகள் கட்டப்பட்டன.
    • சாவியினையும், வீட்டு உபயோக பொருட்களையும் பயனாளிகளுக்கு கலெக்டர் வழங்கினார்.

    விருதுநகர்

    முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பொது மற்றும் மறுவாழ்வுத்துறை சார்பில் 13 மாவட்டங்களில் உள்ள 19 இலங்கை தமிழர் மறுவாழ்வு மையங்களில் கட்டப்பட்டுள்ள ரூ.79.70 கோடி மதிப்பில் 1591 புதிய வீடுகளை காணொலி காட்சி வாயிலாக திறந்து வைத்தார்.

    விருதுநகர் மாவட்டம் சிவகாசி செவலூரில் ரூ.3.11 கோடி மதிப்பில் 62 வீடுகள், அனுப்பன்குளம் மையத்தில் ரூ.40 லட்சம் மதிப்பில் 8 வீடுகள், குல்லூர்சந்தை மையத்தில் ரூ.3.51 கோடி மதிப்பில் 70 வீடுகள் என மொத்தம் ரூ.7.2 கோடி மதிப்பில் 140 வீடுகள் திறந்து வைக்கப்பட்டன.

    இதற்கான நிகழ்ச்சி சிவகாசி செவலூர் இலங்கை தமிழர் மறுவாழ்வு மையத்தில் நடந்தது. மாவட்ட கலெக்டர் ஜெயசீலன் தலைமை வகித்தார். சீனிவாசன் எம்.எல்.ஏ. முன்னிலை வகித்தார். பின்னர் புதிய வீடுகளை பார்வையிட்டு கலெக்டர் குத்துவிளக்கேற்றி னார். புதிய வீடுகளுக்கான சாவியினையும், 8 வகையான வீட்டு உபயோக பொருட்க ளையும் பயனாளிகளுக்கு கலெக்டர் வழங்கினார்.

    இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் ரவி குமார், திட்ட இயக்குநர் (மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை) தண்டபாணி, வருவாய் கோட்டாட்சியர்கள் விஸ்வநாதன், சிவக்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    ×