search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "புகுந்த வாலிபர்"

    • ராமர் (வயது 28). இவர் நேற்று இரவு சேலம் புதிய பஸ் நிலையம் அருகில் குடிபோதையில் மோட்டார் சைக்கிளில் சுற்றித்திரிந்தார்.
    • நள்ளிரவில் பஸ் நிலையப் பகுதியில் உள்ள பள்ளப்பட்டி போலீஸ் நிலையத்திற்குள், ராமர் தனது மோட்டார் சைக்கிளை ஓட்டிச் சென்றார்.

    சேலம்:

    சேலம் மாவட்டம் ஏற்காடு செம்மநத்தம் பகுதியை சேர்ந்தவர் ராமர் (வயது 28). இவர் நேற்று இரவு சேலம் புதிய பஸ் நிலையம் அருகில் குடிபோதையில் மோட்டார் சைக்கிளில் சுற்றித்திரிந்தார்.

    பின்னர், நள்ளிரவில் பஸ் நிலையப் பகுதியில் உள்ள பள்ளப்பட்டி போலீஸ் நிலையத்திற்குள், ராமர் தனது மோட்டார் சைக்கிளை ஓட்டிச் சென் றார் . அப்போது போலீஸ் நிலையத்தில் இருந்த போலீ சாரிடம் என் மோட்டார் சைக்கிளை பாதுகாக்காமல் உங்களுக்கு என்ன வேலை என்று கேட்டபடி தகராறில் ஈடுபட்டார். இதனால் அங்கு பரபரப்பு நிலவியது.

    இதை அடுத்து போலீசார் அவரை பிடித்து விசாரணை நடத்தி, வாகனத்திற்கான ஆவணங்களை எடுத்து வரு மாறு கூறி அனுப்பி வைத்தனர்.

    இதற்கு இடையே கலெக்டர் அலுவலகம் வந்த அவர், பெட்ரோலை உடலில் ஊற்றி தீக்குளிக்க முயன்றார். இதனை பார்த்த அங்கிருந்த போலீசார், ராமரை தடுத்து நிறுத்தி விசாரித்தனர். பின்னர் அவரை பள்ளப் பட்டி போலீசாரிடம் ஒப்படைத்த னர். அவர்கள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகி றார்கள். இந்த சம்பவம் நேற்று இரவு சேலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    ×