search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பீரோ உடைப்பு"

    • கடந்த 2 நாட்களுக்கு முன்பு வீட்டை பூட்டிவிட்டு தயாயும், மகனும் கண்ணியா குமரிக்கு உறவினர்களுடன் சுற்றுலா சென்றனர்.
    • செல்போன் மூலம் சீனிவா சனின் மனைவி கவுரிக்கு தகவல் தெரிவித்தார்.

    கடலூர்:

    கடலூர் மாவட்டம் பண்ருட்டி லிங்காரெட்டி பாளையத்ைத சேர்ந்தவர் சீனுவாசன் (வயது 50). இவர் துபாயில் உள்ள தனி யார் கம்பெனியில் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி கவுரி, மகன் பாலகிருஷ்ணன் ஆகியோர் லிங்காரெட்டி பாளையத்தில் வசித்து வருகிறார்கள். கடந்த 2 நாட்களுக்கு முன்பு வீட்டை பூட்டிவிட்டு தயாயும், மகனும் கண்ணியா குமரிக்கு உறவினர்களுடன் சுற்றுலா  சென்றனர். வீட்டில் வளர்த்து வந்த நாயை பக்கத்துவீட்டை சேர்ந்த வரிடம் பார்த்து கொள்ளு மாறு சொல்லி விட்டு சென்றனர். இந்த சந்தர்ப்பத்தை பயன் படுத்திய மர்ம நபர்கள் வீட்டின் பின்பக்க கதவை உடைத்து உள்ளே புகுந்தனர். பின்னர் பீரோ வை உடைத்து அதில் இருந்த நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்து சென்ற னர். அப்போது நாய்க்கு உணவு வைப்ப தற்காக பக்கத்து வீட்டை சேர்ந்த வர் அங்கு வந்தார். அப்போது வீடு திறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். 

    இதுகுறத்து அவர் செல்போன் மூலம் சீனிவா சனின் மனைவி கவுரிக்கு தகவல் தெரிவித்தார். அதிர்ச்சியடைந்த அவர் உடனே ஊருக்கு திரும்பி னார். அப்போது பீரோவில் இருந்த 50 பவுன் நகை, ரூ.10 லட்சம் ரொக்கப்பணம் ஆகியவை கொள்ளை போனதை கண்டு அதிர்ச்சி யடைந்தார். இதுகுறித்து உடனடியாக பண்ருட்டி போலீசில் புகார் செய்யப்பட்டது. தகவல் அறிந்த போலீஸ் டி.எஸ்.பி. சபிபுல்லா, இன்ஸ்பெக்டர் நந்தகுமார் ஆகியோர் அங்கு விரைந்தனர். அங்குள்ள கண்காணிப்பு கேமராவை பார்த்தபோது அது உடைக்கப்பட்டு டிஸ்க் திருடுபோய் இருந்தது. 

    கொள்ளையர்கள் பற்றி துப்புதுலக்க மோப்பநாய் கடலூரில் இருந்து வர வழைக்கப்பட்டது. அது வீட்டை சுற்றி ஓடி சாலை யோரம் நின்றது. உடனே போலீசார் கொள்ளை நடந்த வீட்டின் வெளிபுற பகுதி யில் உள்ள கண்கா ணிப்பு கேமராவை ஆய்வு செய்தபோது 4 பேர் ஆம்னி வேனில் சென்றது கண்டு பிடிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து தனிப்படை போலீசார் ஆம்னிவேனில் சென்ற 4 பேரை பிடித்து விசா ரணை நடத்தி வருகிறா ர்கள். கொள்ளை நடந்த வீட்டில் உள்ள நாய் யாரைக்கண்டாலும் துடிப்பாக கவ்வி பிடிக்கும். ஆனால் கொள்ளை நடந்த அன்று நாய் அமைதியாக இருந்துள்ளது. எனவே இந்த நாய்க்கு உணவு அளித்தவர் மீதும் போலீசாருக்கு சந்தேகம் எழுந்துள்ளது. எனவே அவரிடமும், கவுரியின் உறவினரிடமும் தனிப்படை போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ×