search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பிரான்ஸ் பயணம்"

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • பாஸ்டில் தின அணிவகுப்பில் பிரதமர் நரேந்திர மோடி மற்ற முக்கிய பிரமுகர்களை சந்தித்தார்.
    • இந்தியாவின் முப்படை வீரர்களின் அணிவகுப்பு மரியாதை நடைபெறுகிறது.

    பிரான்ஸ் நாட்டின் அதிபர் இமானுவேல் மேக்ரான் பிரதமர் மோடிக்கு அழைப்பு விடுத்ததை அடுத்து, அவர் இரண்டு நாள் சுற்றுப்பயணமான பிரான்ஸ் சென்றார்.

    பிரான்ஸ் தலைநகர் பாரீசில் இறங்கிய பிரதமர் மோடியை அந்நாட்டின் பிரதமர் எலிசபெத் போர்ன் நேரில் வறவேற்றார்.

    மேலும், பிரதமர் மோடிக்கு இந்திய வம்சாவளியினர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

    பிரான்ஸ் நாட்டில் இன்று தேசிய தினம் பாஸ்டில் டே கொண்டாடப்படும் நிலையில், பிரதமர் மோடி சிறப்பு விருந்தினராக கலந்துக் கொண்டார்.

    இந்த விழாவில், பிரதமர் நரேந்திர மோடியை பிரான்ஸ் நாட்டின் முதல் பெண்மணி பிரிஜிட் மேக்ரான் மற்றும் பிரான்ஸ் பிரதமர் எலிசபெத் போர்ன் ஆகியோர் வரவேற்றனர்.

    பின்னர், பாஸ்டில் தின அணிவகுப்பில் பிரதமர் நரேந்திர மோடி மற்ற முக்கிய பிரமுகர்களை சந்தித்தார்.

    தேசிய தின விழாவில் பிரம்மாண்ட அணி வகுப்பு தொடங்கியது. இதில், பிளைபாஸ்ட் மூலம் பிரான்ஸ் தேசியக் கொடியின் வண்ணங்களில் வானத்தில் பறக்கவிட்டனர்.

    இந்த அணிவகுப்பு விழாவில், இந்தியாவின் முப்படை வீரர்களின் அணிவகுப்பு மரியாதை நடைபெறுகிறது. பிரான்ஸ் படை வீரர்களுடன் சேர்ந்து இந்திய படை வீரர்களும் அணிவகுப்பு நடத்துகிறது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • இந்திய கப்பல் படைக்கு ஸ்கார்பீன் வகையைச் சேர்ந்த மேலும் கூடுதல் நீர்மூழ்கி கப்பல்.
    • இந்தியா, பிரான்ஸில் இருந்து 36 ரபேல் விமானங்களை வாங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

    பிரான்ஸ் நாட்டின் தேசிய தினம் கொண்டாட்டத்தில் இந்திய பிரதமர் மோடி சிறப்பு விருந்தினராக கலந்து கொள்வதற்காக இரண்டு நாள் பயணமாக இன்று பிரான்ஸ் சென்றுள்ளார்.

    அங்கு பிரதமர் மோடி, பிரான்ஸ் அதிபர் மேக்ரானை சந்தித்து ஆக்கப்பூர்வமான ஆலோசனை நடத்த உள்ளார். அப்போது, இந்தியா 26 ரபேல் விமானங்கள், 3 ஸ்கார்பீன் நீர்மூழ்கி கப்பல்களை வாங்குவதற்கான ஒப்பந்தம் கையெழுத்தாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    பாதுகாப்புப்படைகளால் இந்திய பாதுகாப்பு அமைச்சகத்திடம் இதற்கான முன்மொழிவு வைக்கப்பட்டது.

    இந்நிலையில், பிரான்ஸில் இருந்து 26 ரபேல் போர் விமானங்களை வாங்குவதற்கு இந்திய பாதுகாப்பு கையகப்படுத்தும் கவுன்சில் ஒப்புதல் அளித்துள்ளது.

    இதேபோல், இந்திய கப்பல் படைக்கு ஸ்கார்பீன் வகையைச் சேர்ந்த மூன்று நீர்மூழ்கி கப்பல் வாங்கவும் அனுமதிக்கப்பட்டுள்ளது.

    ஏற்கனவே இந்தியா, பிரான்ஸில் இருந்து 36 ரபேல் விமானங்களை வாங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

    ×