search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பிடெக் படிப்பு"

    • 1 லட்சத்துக்கு மேல் உள்ளவர்களுக்கு வி.ஐ.டி. ஆந்திர பிரதேசம் மற்றும் போபாலில் மட்டுமே இடம் கிடைக்கும்.
    • உணவு மற்றும் விடுதி வசதியுடன் வி.ஐ.டி. பல்கலைக்கழகத்தில் இலவச சேர்க்கை வழங்கப்படுகிறது.

    வேலூர்:

    வி.ஐ.டி.யில் பி.டெக் பட்டப்படிப்பில் சேருவதற்கான நுழைவுத்தேர்வு நேற்று தொடங்கியது. வருகிற 22-ந் தேதி வரை வெளிநாடுகள் மற்றும் உள்நாட்டிலுமாக 125 மையங்களில் இந்த நுழைவுத்தேர்வு கணினி முறையில் நடைபெறுகிறது.

    நுழைவுத்தேர்வு முடிவுகள் வருகிற 26-ந் தேதி அன்று www.vit.ac.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டு, அன்றைய தினமே ஆன்லைன் கலந்தாய்வு தொடங்குகிறது.

    வி.ஐ.டி. வேலூர் வளாகத்தில் நடைபெற்ற நுழைவுத் தேர்வினை வேந்தர் ஜி.விசுவநாதன் பார்வையிட்டார். துணைத்தலைவர் சங்கர் விசுவநாதன் பெங்களூரு மையத்தில் நடைபெற்ற நுழைவுத்தேர்வினை பார்வையிட்டார். முதல்கட்ட கலந்தாய்வு 26-4-2023 முதல் 30-4-2023 ரேங்க் 1 முதல் 20,000 வரை, 2-ம் கட்ட கலந்தாய்வு (9-5-2023-11-5-2023) ரேங்க் 20,001 முதல் 45,000 வரை, 3-ம் கட்ட கலந்தாய்வு (20-5-2023-22-5-2023) ரேங்க் 45,001 முதல் 70,000 வரை, 4-ம் கட்ட கலந்தாய்வு (31-5-2023-2-6-2023) ரேங்க் 70,001 முதல் 1,00,000 வரை, 5-ம் கட்ட கலந்தாய்வு (12-6-2023-14-6-2023) ரேங்க் 1,00,000-க்கு மேல் ரேங்க் வரை நடக்கிறது.

    1 லட்சத்துக்கு மேல் உள்ளவர்களுக்கு வி.ஐ.டி. ஆந்திர பிரதேசம் மற்றும் போபாலில் மட்டுமே இடம் கிடைக்கும்.

    மத்திய, மாநில கல்வி வாரியம் நடத்தும் பிளஸ்-2 தேர்வில் மாநில அளவில் முதலிடம் பெறும் மாணவ, மாணவியருக்கு வி.ஐ.டி. பல்கலைக்கழகத்தின் ஜி.வி. பள்ளி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் பி.டெக். படிப்பு பயிலும் 4 ஆண்டுகாலம் முழுவதும் 100சதவீத படிப்பு கட்டண சலுகை வழங்கப்படுகிறது.

    வி.ஐ.டி நுழைவுத்தேர்வில் 1 முதல் 50 ரேங்குக்குள்ளாக தகுதி பெறும் மாணவ, மாணவியருக்கு 75 சதவீத படிப்பு கட்டண சலுகையும், 51 முதல் 100 ரேங்குக்குள்ளாக தகுதி பெறுபவர்களுக்கு 50 சதவீத படிப்பு கட்டண சலுகையும், 101 முதல் 1,000 ரேங்குக்குள்ளாக தகுதி பெறுபவர்களுக்கு 25 சதவீத படிப்பு கட்டண சலுகையும் 4 ஆண்டுகள் வழங்கப்படுகிறது.

    தமிழ்நாடு, ஆந்திரா மற்றும் மத்திய பிரதேசத்தில் உள்ள கிராமப் பகுதிகளை சேர்ந்த ஏழை எளிய மாணவ, மாணவிகளும் வி.ஐ.டி. பல்கலைக்கழகத்தில் உயர்கல்வி பயிலும் வகையில் செயல்படுத்தப்பட்டு வரும் ஸ்டார்ஸ் திட்டத்தின்கீழ் ஒவ்வொரு மாவட்டத்திலும் மாவட்ட அளவில் பிளஸ்-2 தேர்வில் முதலிடம் பெறும் மாணவ, மாணவியருக்கு 100 சதவீத படிப்பு கட்டண சலுகையுடன், அவர்களுக்கு உணவு மற்றும் விடுதி வசதியுடன் வி.ஐ.டி. பல்கலைக்கழகத்தில் இலவச சேர்க்கை வழங்கப்படுகிறது.

    ×