search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பாயாச பண்டிகை"

    • சுமார் 100 ஆண்டுகளுக்கு முன்பு மேட்டூர், ஆசீர்வாதபுரம் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த ஏராளமானோர் கொடிய காலரா நோய்க்கு பலியாகி உள்ளனர்.
    • ஒவ்வொரு ஆலயத்திலும் ஆண்கள் மட்டுமே கலந்து கொண்டு சுமார் 20-க்கும் மேற்பட்ட அண்டாக்களில் பாயாசத்தை ஆர்வமுடன் தயார் செய்து பொதுமக்களுக்கு வழங்கினர்.

    கடையம்:

    தென்காசி மாவட்டம் கடையம் அருகே உள்ள மேட்டூர், ஆசீர்வாதபுரம் உள்பட சுமார் 5 சி.எஸ்.ஐ. கிறிஸ்தவ ஆலயங்களில் ஆண்டுதோறும் கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு முந்தைய நாள் ஆண்கள் மட்டுமே நடத்தும் பாயாச பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது.

    சுமார் 100 ஆண்டுகளுக்கு முன்பு மேட்டூர், ஆசீர்வாதபுரம் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த ஏராளமானோர் கொடிய காலரா நோய்க்கு பலியாகி உள்ளனர். இதனால் அரிசி, தேங்காய் உள்ளிட்ட பாயாசத்துக்கு தேவையான பொருட்களை நேர்ச்சையாக வீடு வீடாக சென்று வாங்கி வருவார்கள்.

    பின்னர் குடங்களில் தண்ணீர் சுமந்து வந்து ஆண்கள் பாயாசம் தயார் செய்து பொதுமக்களுக்கு வழங்கியதாகவும், அதன்பின் நோயின் தாக்கம் குறைந்ததாகவும் கூறப்படுகிறது.

    அதனை நினைவு கூரும் வகையில், ஆண்டுதோறும் இந்த பாயாச பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டும் ஆண்கள் மட்டுமே நடத்திய பாயாச பண்டிகை கடையம் சுற்றுவட்டார கிறிஸ்தவ ஆலயங்களில் கொண்டாடப்பட்டது.

    ஒவ்வொரு ஆலயத்திலும் ஆண்கள் மட்டுமே கலந்து கொண்டு சுமார் 20-க்கும் மேற்பட்ட அண்டாக்களில் பாயாசத்தை ஆர்வமுடன் தயார் செய்து பொதுமக்களுக்கு வழங்கினர்.

    மேட்டூரில் பரி.திரித்துவ ஆலயத்தில் சேகர உதவிகுரு ஜோயல் சாம் மெர்வின் ஜெபம் செய்து தொடங்கி வைத்தார். இதில் 100-க்கும் மேற்பட்ட ஆண்கள் கலந்து கொண்டனர்.

    ×