search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பாஜக பிரமுகர்"

    • தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு கஞ்சா மற்றும் போதைப்பொருட்கள் சர்வ சாதாரணமாக புழக்கத்தில் உள்ளது.
    • தமிழக இளைஞர்கள், மாணவிகள், ஏழை கூலித்தொழிலாளர்கள், சிறுவர்கள் முதல் அனைவரும் போதை பழக்கத்திற்கு அடிமையாகி வருகிறார்கள்.

    மதுரை:

    தமிழகத்தில் ஒரே கட்ட மாக கடந்த 19-ந்தேதி பாராளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவு அமைதியாக நடந்து முடிந்தது. இதையொட்டி தி.மு.க. தலைமையிலான இந்தியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து 40 தொகுதிகளிலும் முதலமைச்சர் மு.க.ஸ்டான் தீவிர பிரசாரம் மேற்கொண்டார். இதையடுத்து அவர் ஓய்வு எடுப்பதற்காக தனது குடும்பத்தினருடன் கொடைக்கானல் புறப்பட்டார். சென்னையில் இருந்து மதுரை விமான நிலையம் வந்த அவருக்கு அதிகாரிகள் வரவேற்பு அளித்தனர்.

    முதலமைச்சரின் தனிப்பட்ட பயணமாக இது இருந்ததால் அவரை வரவேற்க கட்சியினர் யாருக்கும் அனுமதி வழங்கப்படவில்லை. இந்தநிலையில் விமான நிலைய வரவேற்பு பகுதியில் தனி நபராக ஒருவர் மட்டும் நின்று கொண்டிருந்தார். அப்போது அவரிடம் சென்ற அவனியாபுரம் உதவி போலீஸ் கமிஷனர் செல்வக்குமார், இன்ஸ்பெக்டர் மணிக்குமார் ஆகியோர் விசாரித்தனர். அவர் மதுரை அய்யர்பங்களாவை சேர்ந்த பா.ஜ.க. மாநில செயற்குழு உறுப்பினர் சங்கர்பாண்டி என்பது தெரியவந்தது. மேலும் அவர், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் மனு கொடுப்பதற்காக வந்திருப்பதாக தெரிவித்தார். போலீசார் அதற்கு அனுமதி கிடையாது என்று கூறினர். தொடர்ந்து வாக்குவாதத்தில் ஈடுபட்ட அவரிடம் மனுவை தருமாறு போலீசார் கேட்டனர். தரமறுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

    பின்னர் அவரிடம் இருந்து மனுவை போலீசார் கைப்பற்றினர். அந்த மனுவில் கூறியிருந்ததாவது:-

    தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு கஞ்சா மற்றும் போதைப்பொருட்கள் சர்வ சாதாரணமாக புழக்கத்தில் உள்ளது. சர்வதேச அளவில் தடை செய்யப்பட்ட போதை பொருட்களும் எளிதில் கிடைக்கிறது. இதனால் தமிழக இளைஞர்கள், மாணவிகள், ஏழை கூலித்தொழிலாளர்கள், சிறுவர்கள் முதல் அனைவரும் போதை பழக்கத்திற்கு அடிமையாகி வருகிறார்கள். இதனால் தமிழகத்தில் சமூக விரோத செயல்கள், குற்ற செயல்கள் அதிகரித்து வருகிறது. இது மிகவும் எனக்கு வேதனை அளிக்கிறது. ஆகவே தாங்கள் தமிழக மக்களின் நலன் கருதி, துரித நடவடிக்கை எடுத்து போதை பொருட்கள் புழக்கத்தை தடுக்க வேண்டும் என்று தங்களை தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.

    குறிப்பு: இத்துடன் தமிழகத்தில் எளிதில் கிடைக்கும் கஞ்சா பொட்டலம் இணைத்துள்ளேன்.

    இவ்வாறு அந்த மனுவில் அவர் கூறியிருந்தார்.

    இதையடுத்து சங்கர்பாண்டியை தடுத்து நிறுத்திய போலீசார் அவரை கைது செய்து அவனியாபுரம் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்றனர். ஏற்கனவே எடப்பாடி பழனிசாமி ஆட்சியின்போது அப்போதைய சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவராக இருந்த மு.க.ஸ்டாலின், மதுரையில் ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்க வந்தபோது, அவருக்கு எதிராக கருப்புக் கொடி காட்டியவர் மற்றும் தற்போதைய பத்திரப்பதிவு மற்றும் வணிகவரித்துறை அமைச்சர் பி.மூர்த்திக்கு எதிராக முகநூல் பக்கத்தில் அவதூறு கருத்துக்களை தெரிவித்து சர்ச்சையை ஏற்படுத்தியவர் என்றும் தெரியவந்தது. இதற்கிடையே விமான நிலையம் வந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அங்கிருந்து காரில் கொடைக்கானல் புறப்பட்டு சென்றார்.

    • போலீஸ் நிலையத்தில் எவ்வாறு ‘வயர்லெஸ்’ சத்தங்கள் கேட்குமோ? அதே போன்று தண்டபாணிக்கு போனில் கேட்டது.
    • தண்டபாணியை முழுமையாக நம்ப வைத்த அந்த நபர் பின்னர் அதே நபர் தண்டபாணியை “ஸ்கைப் காலில்” பேசசொன்னார்.

    புதுச்சேரி:

    புதுச்சேரி உழவர்கரை பா.ஜனதா மாவட்ட தலைவர் தண்டபாணி. இவர் லாஸ்பேட்டை அவ்வை நகரில் வசித்து வருகிறார். இவர் ஓட்டல் உள்ளிட்ட தொழில்களையும் நடத்தி வருகிறார்.

    நேற்று காலை 8.13 மணிக்கு கர்நாடக மாநில பதிவு பெயர் கொண்ட தொலைபேசி எண்ணில் இருந்து தண்டபாணிக்கு போன் வந்தது.

    எதிர் முனையில் பேசியவர் நீங்கள் பெட்எக்ஸ் கொரியர் மூலம் அனுப்பிய போதை பொருளை மும்பையில் கைப்பற்றி சி.பி.ஐ. வழக்கு பதிவு செய்துள்ளது. உங்களுக்கு கைது வாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

    கடத்தல் மூலம் நீங்கள் எவ்வளவு பணம் பரிமாற்றம் செய்துள்ளீர்கள் என்பது எங்களுக்கு பட்டியல் வந்துள்ளது.

    எனவே நாங்கள் சொல்வது நீங்கள் கேட்டால் உங்களை வழக்கில் இருந்து விடுவிப்போம் என பேசினார். இதைக் கேட்ட பா.ஜனதா பிரமுகர் தண்டபாணி அதிர்ச்சியில் உறைந்து போனார்.

    எதிர்முனையில் பேசிய நபர் உடனே தண்டபாணியின் செல்போனுக்கு வாட்ஸ்-அப்பில் சி.பி.ஐ. எப்.ஐ.ஆர். பதிவு செய்துள்ளது போல் ஒரு கடிதத்தை அனுப்பினார்.

    அந்த எப். ஐ. ஆரில் சி.பி.ஐ. எப்படி வழக்கு பதிவு செய்திருக்குமோ அதே போல் இருந்தது.

    தொடர்ந்து மற்றொருவர் சி.பி.ஐ. அலுவலகத்தில் இருந்து அதிகாரி பேசுவதாக பேசினார்.

    அப்போது போலீஸ் நிலையத்தில் எவ்வாறு 'வயர்லெஸ்' சத்தங்கள் கேட்குமோ? அதே போன்று தண்டபாணிக்கு போனில் கேட்டது. தண்டபாணியை முழுமையாக நம்ப வைத்த அந்த நபர் பின்னர் அதே நபர் தண்டபாணியை "ஸ்கைப் காலில்" பேசசொன்னார்.

    எதிரே பேசியவரின் உருவம் ஸ்கைப் காலில் தெரியாததால் சந்தேகம் அடைந்த தண்டபாணி சுதாரித்து பதில் தர ஆரம்பித்தார். அடுத்தடுத்து சுமார் ஒன்றரை மணி நேரம் விடாமல் பேசிய அந்த நபர் தண்டபாணியின் வங்கி கணக்கு எண் அவருடைய பண பரிமாற்றம் உள்ளிட்டவையை கூறி மோசடியில் ஈடுபட முயற்சித்தார்.

    பின்னர் சுதாரித்துக்கொண்ட தண்டபாணி போனை துண்டித்து இதுகுறித்து கோரிமேட்டில் உள்ள சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து சி.பி.ஐ. அதிகாரி என பேசிய போலி நபரின் விவரங்களை சேகரித்து வருகின்றனர். புதுவையில் பா.ஜனதா எம்.எல்.ஏ.க்கள் மற்றும் பிரமுகர்களை குறி வைத்து அமலாக்கத்துறை அதிகாரி, சி.பி.ஐ. அதிகாரி என கூறி போலி ஆசாமிகள் தொடர்ந்து மிரட்டி வருவதால் பா.ஜனதாவினர் கலக்கத்தில் உள்ளனர்.

    ஏற்கனவே அமலாக்கத்துறை அதிகாரி என கூறி கல்யாணசுந்தரம், சிவசங்கர் எம்.எல்.ஏ.விடம் சிக்கிய போலி அமலாக்கத்துறை அதிகாரியை போலீசார் கைது செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    • இதுதான் பழங்குடியினர் மீதான உங்கள் அன்பா? என காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் கேள்வி.
    • வீடியோவை பார்த்த பலரும் பாஜக பிரமுகரின் செயலை வன்மையாக கண்டித்தனர்.

    மத்திய பிரதேச மாநிலம் சித்தி தொகுதியின் பாஜக எம்எல்ஏ கேதார் நாத் சுக்லாவின் பிரதிநிதியான பிரவேஷ் சுக்லா என்பவர் மதுபோதையில், பழங்குடியினத்தைச் சேர்ந்த ஒருவர் மீது சிறுநீர் கழித்துள்ளார். அந்த நபர் மனநலம் பாதிக்கப்பட்டிருந்தார். இதுதொடர்பான வீடியோ வைரலாகி வருகிறது. கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு இந்த சம்பவம் நடந்ததாக கூறப்படுகிறது. சம்பந்தப்பட்ட நபர் பாஜக எம்எல்ஏவின் பிரதிநிதி என்பதால் பாதிக்கப்பட்டவரின் குடும்பத்தினர் பயத்தில் போலீசில் புகார் அளிக்காமல் இருந்துள்ளனர். வீடியோ வைரலான நிலையில் தற்போது இந்த சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

    இந்த வீடியோவை காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் அப்பாஸ் ஹபீஸ் தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்து, கண்டனம் தெரிவித்துள்ளார். பழங்குடியினர் நலன் குறித்து பொய் பேசும் பாஜக தலைவர், பழங்குடியின ஏழை மீது இப்படி சிறுநீர் கழிக்கிறார். இது மிகவும் கண்டிக்கத்தக்க செயல் என அவர் கூறியுள்ளார்.

    மேலும், முதல்வர் சிவராஜ் சிங் சவுகானையும் டேக் செய்துள்ள அவர், "இது தான் பழங்குடியினர் மீதான உங்கள் அன்பா? இதை காட்டு தர்பார் என்று அழைக்கவேண்டும். ஏன் பாஜக தலைவரை கைது செய்யவில்லை?" என கேள்வி எழுப்பியிருந்தார்.

    இதேபோல் பிரவேஷ் சுக்லா பாஜக எம்எல்ஏக்களுடன் இருந்த புகைப்படங்களை மற்றொரு டுவிட்டர் பதிவில் ஷேர் செய்திருந்தார்.

    டெல்லியைச் சேர்ந்த ஆம் ஆத்மி கட்சி எம்எல்ஏ நரேஷ் பால்யனும், முதல்வர் சிவராஜ் சிங் சவுகானை டேக் செய்து இந்த வீடியோவை ஷேர் செய்திருந்தார்.

    வீடியோவை பார்த்த பலரும் பாஜக பிரமுகரின் செயலை வன்மையாக கண்டித்ததுடன், அவர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கவேண்டும் என வலியுறுத்தினர்.

    வீடியோ வைரலாக பரவிய நிலையில், எஸ்சி, எஸ்டி வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்பட பல பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். இந்த குற்றச்செயலில் ஈடுபட்டவர் மீது தேசிய பாதுகாப்பு சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்கும்படி மாநில முதலமைச்சர் சவுகான் உத்தரவு பிறப்பித்துள்ளார். 

    • 6 பேர் கொண்ட மர்ம கும்பல் திடீரென அவர் மீது வெடிகுண்டு வீசியும், கத்தியால் தாக்கியும் கொலை.
    • தப்பி சென்ற மர்ம நபர்கள் தொடர்பாக சம்பவம் நடந்த இடத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    புதுச்சேரி வில்லியனூரில் வெடிகுண்டு வீசி பாஜக பிரமுகர் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    பாஜக பிரமுகரான செந்தில் என்பவர் அங்குள்ள பேக்கரி கடையில் நின்றுக் கொண்டிருந்தபோது 6 பேர் கொண்ட மர்ம கும்பல் திடீரென அவர் மீது வெடிகுண்டு வீசியும், கத்தியால் தாக்கியும் கொலை செய்துவிட்டு தப்பி ஓடியுள்ளனர்.

    இதுகுறித்து தகவல் அறிந்து விரைந்த போலீசார் தப்பி சென்ற மர்ம நபர்கள் தொடர்பாக சம்பவம் நடந்த இடத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கைது செய்யப்பட்ட சுரேந்திரன், பா.ஜ.க.வில் இருந்து வந்த நிலையில் பல்வேறு மோசடியில் ஈடுபட்டதால் அவரை கட்சியிலிருந்து கடந்த சில மாதங்களுக்கு முன்பு நீக்கினர்.
    • தற்போதும் பா.ஜ.க.வின் முக்கிய பிரமுகர் பெயரை சொல்லி மிரட்டி, மோசடியில் ஈடுபட்டு வருவதாகவும் போலீசாருக்கு புகார்கள் வந்துள்ளன.

    சேலம்:

    சேலத்தை அடுத்த தாசநாயக்கன்பட்டி எஸ்.கே சிட்டி பகுதியை சேர்ந்தவர் கதிர்ராஜ் (வயது 52). ஜவுளி தொழில் செய்து வருகிறார். இவர் மல்லூர் அருகே உள்ள நிலவாரப்படியில் புதிதாக வீடு கட்டி வருகிறார்.

    இந்த வீட்டை கட்டிக் கொடுக்க, நாழிக்கல்பட்டியைச் சேர்ந்த சுரேந்திரன் (33) என்பவருடன் சதுர அடிக்கு ரூ.2,200 என கடந்த 2019-ம் ஆண்டு டிசம்பர் மாதம் ஒப்பந்தம் செய்து கொண்டார். அந்த ஒப்பந்தத்தின்படி வீடு கட்டுவதற்காக ஒரு கோடியே 61 லட்சத்து 54 ஆயிரத்து 347 ரூபாயை சுரேந்தினிடம், கதிர்ராஜ் கொடுத்தார்.

    இந்த பணத்தை பெற்றுக்கொண்ட சுரேந்திரன், புதிதாக வீடு கட்டி கொடுக்காமல் நிலவரப்பட்டியில் தனது மனைவி தீபா பெயரில் வீடு கட்டிக்கொண்டார். இதையடுத்து தனது பணத்தை வாங்கிக்கொண்டு ஏமாற்றி விட்டதாக கதிர்ராஜ் மல்லூர் போலீசில் புகார் கொடுத்தார்.

    போலீசார் விசாரணை நடத்தி, சுரேந்திரன் அவரது மனைவி தீபா ஆகியோர் மீது மோசடி வழக்கு பதிவு செய்தனர். ரூ.1 கோடிக்கு மேல் மோசடி நடந்திருப்பதால் இவ்வழக்கை மாவட்ட குற்றப்பிரிவு போலீஸ் விசாரணை நடத்த, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு உத்தரவிட்டார். இதையடுத்து மாவட்ட குற்றப்பிரிவு டி.எஸ்.பி இளமுருகன் தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தி, கடந்த மாதம் 14-ந் தேதி கதிர்ராஜிடம் வீடு கட்டி தருவதாக ரூ.1.61 கோடி மோசடி செய்ததாக சுரேந்திரன், தீபா மீது மோசடி வழக்கு பதிவு செய்தனர்.

    தொடர்ந்து 2 பேரையும் குற்றப்பிரிவு போலீசார் தேடி வந்தனர். இந்த நிலையில் நேற்று டி.எஸ்.பி இளமுருகன், எஸ்.ஐ சந்திரன் தலைமையிலான போலீசார் சுரேந்திரனை கைது செய்தனர். பின்னர் அவரை சேலம் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சேலம் மத்திய சிறையில் அடைத்தனர். தொடர்ந்து அவரது மனைவி தீபாவை போலீசார் தேடி வருகிறார்கள்.

    கைது செய்யப்பட்ட சுரேந்திரன், பா.ஜ.க.வில் இருந்து வந்த நிலையில் பல்வேறு மோசடியில் ஈடுபட்டதால் அவரை கட்சியிலிருந்து கடந்த சில மாதங்களுக்கு முன்பு நீக்கினர். தற்போதும் பா.ஜ.க.வின் முக்கிய பிரமுகர் பெயரை சொல்லி மிரட்டி, மோசடியில் ஈடுபட்டு வருவதாகவும் போலீசாருக்கு புகார்கள் வந்துள்ளன. இது குறித்தும் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • பாஜக கோட்டப் பொறுப்பாளராகப் பொறுப்பு வகித்து வருபவா் பாலகுமாா் இவா் வாடகை வீட்டில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பாகக் குடியிருந்து வந்துள்ளாா்
    • மா்ம நபா்கள் கடந்த சனிக்கிழமை இரவு பெட்ரோல் குண்டுகளை வீசிவிட்டு மாயமாகினர்

    திருப்பூர் :

    பாஜக கோட்டப் பொறுப்பாளராகப் பொறுப்பு வகித்து வருபவா் பாலகுமாா். இவா் அங்கேரிபாளையம் ஏவிபி லே அவுட் 3 ஆவது வீதியில் உள்ள வாடகை வீட்டில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பாகக் குடியிருந்து வந்துள்ளாா். அதன் பின்னா் வேறு பகுதிக்கு குடிபெயா்ந்துள்ளாா். இதனிடையே, பாலகுமாா் முன்பு குடியிருந்த வீட்டின் மீது மா்ம நபா்கள் கடந்த சனிக்கிழமை இரவு பெட்ரோல் குண்டுகளை வீசி விட்டு மாயமாகினர்எனினும் குண்டை பற்றவைக்காமல் வீசியதால் பெரும் அசம்பாவிதம் தடுக்கப்பட்டது.இது குறித்து வீட்டின் உரிமையாளா் கொடுத்த புகாரின் பேரில் அனுப்பா்பாளையம் காவல் துறையினா் விசாரணை நடத்தி வந்த நிலையில் இன்று சையது இப்ராஹீம் 20, கேரளாவை சேர்ந்த பெரோஸ் காண் 32 ஆகிய இருவர் கைதாகி உள்ளனர் அவர்களிடம் போலீசார் ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்

    • கோவில் விழாவில் தி.மு.க.வினரும் பா.ஜ.க.வினரும் பேனர் வைத்துக் கொண்டிருந்தனர்.
    • அப்போது இரு கட்சியினர் இடையே தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

    வாணியம்பாடி:

    வாணியம்பாடி நியூ டவுன் பகுதியில் மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவில் திருவிழா நடந்து வருகிறது. நேற்று மாரியம்மன் கோவில் அருகே நடன நிகழ்ச்சி நடைபெற்றது.

    இதற்காக தி.மு.க.வினரும் பா.ஜ.க.வினரும் பேனர் வைத்துக் கொண்டிருந்தனர். அப்போது இரு கட்சியினர் இடையே தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

    இதில் ஆத்திரமடைந்த தி.மு.க.வை சேர்ந்த ஒருவர் பா.ஜ.க.வை சேர்ந்த ஜனார்த்தனன் (வயது 26) என்பவரை சரமாரியாக கத்தியால் வெட்டினார். இதில் ஜனார்த்தனன் படுகாயம் அடைந்து ரத்த வெள்ளத்தில் சரிந்தார். ஜனார்த்தனனை மீட்டு வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    பா.ஜ.க.வை சேர்ந்தவர்கள் வாணியம்பாடி டவுன் போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டனர். குற்றவாளிகளை கைது செய்யக்கோரி வலியுறுத்தினர். இதனால் அங்கு பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டது.

    ×