search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "bjp member"

    • பா.ஜ.க. நகரசபை உறுப்பினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
    • மாவட்ட போலீஸ் சூப்பிரண்டிடம் புகார் தெரிவிக்கப்பட்டது.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் நகரசபை தலைவர் ஆர்.கே.கார்மேகம் தலைமையில், நகரசபை துணைத்தலைவர் டி.ஆர்.பிரவீன் தங்கம் முன்னிலை யில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தங்கதுரையிடம் தி.மு.க. நகரசபை உறுப்பி னர்கள் புகார் மனு ஒன்றை அளித்தனர்.

    அந்த மனுவில் கூறியிருப் பதாவது:-

    ராமநாதபுரம் நகராட்சிக் குட்பட்ட வார்டு கவுன்சிலராக இருந்து வருபவர் பா.ஜ.க.வை சேர்ந்த குமார். இவர் தொடர்ந்து நகரசபை கூட்டத்திலும், பொது வெளியிலும் சகோதரத்து வத்தையும், சமூக நல்லிணக் கத்தையும் சீர்குலைத்து மதக்கலவரத்தை தூண்டும் வகையில் பேசி வருகிறார்.

    எனவே பா.ஜ.க. வார்டு கவுன்சிலர் குமார் மீது தகுந்த நடவடிக்கை எடுத்து சகோதரத்துவத்தையும், சமூக நல்லிணக்கத்தையும் நிலைநாட்ட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம்.

    இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

    இந்நிகழ்வின் போது தமிழ்நாடு ஹஜ் கமிட்டி உறுப்பினரும், மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அணி அமைப்பாளருமான கவுன்சிலர் ஜவா என்ற முகம்மது ஜஹாகீர் தி.மு.க. கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர்.

    • கைது செய்யப்பட்ட சுரேந்திரன், பா.ஜ.க.வில் இருந்து வந்த நிலையில் பல்வேறு மோசடியில் ஈடுபட்டதால் அவரை கட்சியிலிருந்து கடந்த சில மாதங்களுக்கு முன்பு நீக்கினர்.
    • தற்போதும் பா.ஜ.க.வின் முக்கிய பிரமுகர் பெயரை சொல்லி மிரட்டி, மோசடியில் ஈடுபட்டு வருவதாகவும் போலீசாருக்கு புகார்கள் வந்துள்ளன.

    சேலம்:

    சேலத்தை அடுத்த தாசநாயக்கன்பட்டி எஸ்.கே சிட்டி பகுதியை சேர்ந்தவர் கதிர்ராஜ் (வயது 52). ஜவுளி தொழில் செய்து வருகிறார். இவர் மல்லூர் அருகே உள்ள நிலவாரப்படியில் புதிதாக வீடு கட்டி வருகிறார்.

    இந்த வீட்டை கட்டிக் கொடுக்க, நாழிக்கல்பட்டியைச் சேர்ந்த சுரேந்திரன் (33) என்பவருடன் சதுர அடிக்கு ரூ.2,200 என கடந்த 2019-ம் ஆண்டு டிசம்பர் மாதம் ஒப்பந்தம் செய்து கொண்டார். அந்த ஒப்பந்தத்தின்படி வீடு கட்டுவதற்காக ஒரு கோடியே 61 லட்சத்து 54 ஆயிரத்து 347 ரூபாயை சுரேந்தினிடம், கதிர்ராஜ் கொடுத்தார்.

    இந்த பணத்தை பெற்றுக்கொண்ட சுரேந்திரன், புதிதாக வீடு கட்டி கொடுக்காமல் நிலவரப்பட்டியில் தனது மனைவி தீபா பெயரில் வீடு கட்டிக்கொண்டார். இதையடுத்து தனது பணத்தை வாங்கிக்கொண்டு ஏமாற்றி விட்டதாக கதிர்ராஜ் மல்லூர் போலீசில் புகார் கொடுத்தார்.

    போலீசார் விசாரணை நடத்தி, சுரேந்திரன் அவரது மனைவி தீபா ஆகியோர் மீது மோசடி வழக்கு பதிவு செய்தனர். ரூ.1 கோடிக்கு மேல் மோசடி நடந்திருப்பதால் இவ்வழக்கை மாவட்ட குற்றப்பிரிவு போலீஸ் விசாரணை நடத்த, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு உத்தரவிட்டார். இதையடுத்து மாவட்ட குற்றப்பிரிவு டி.எஸ்.பி இளமுருகன் தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தி, கடந்த மாதம் 14-ந் தேதி கதிர்ராஜிடம் வீடு கட்டி தருவதாக ரூ.1.61 கோடி மோசடி செய்ததாக சுரேந்திரன், தீபா மீது மோசடி வழக்கு பதிவு செய்தனர்.

    தொடர்ந்து 2 பேரையும் குற்றப்பிரிவு போலீசார் தேடி வந்தனர். இந்த நிலையில் நேற்று டி.எஸ்.பி இளமுருகன், எஸ்.ஐ சந்திரன் தலைமையிலான போலீசார் சுரேந்திரனை கைது செய்தனர். பின்னர் அவரை சேலம் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சேலம் மத்திய சிறையில் அடைத்தனர். தொடர்ந்து அவரது மனைவி தீபாவை போலீசார் தேடி வருகிறார்கள்.

    கைது செய்யப்பட்ட சுரேந்திரன், பா.ஜ.க.வில் இருந்து வந்த நிலையில் பல்வேறு மோசடியில் ஈடுபட்டதால் அவரை கட்சியிலிருந்து கடந்த சில மாதங்களுக்கு முன்பு நீக்கினர். தற்போதும் பா.ஜ.க.வின் முக்கிய பிரமுகர் பெயரை சொல்லி மிரட்டி, மோசடியில் ஈடுபட்டு வருவதாகவும் போலீசாருக்கு புகார்கள் வந்துள்ளன. இது குறித்தும் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • கோவில் விழாவில் தி.மு.க.வினரும் பா.ஜ.க.வினரும் பேனர் வைத்துக் கொண்டிருந்தனர்.
    • அப்போது இரு கட்சியினர் இடையே தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

    வாணியம்பாடி:

    வாணியம்பாடி நியூ டவுன் பகுதியில் மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவில் திருவிழா நடந்து வருகிறது. நேற்று மாரியம்மன் கோவில் அருகே நடன நிகழ்ச்சி நடைபெற்றது.

    இதற்காக தி.மு.க.வினரும் பா.ஜ.க.வினரும் பேனர் வைத்துக் கொண்டிருந்தனர். அப்போது இரு கட்சியினர் இடையே தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

    இதில் ஆத்திரமடைந்த தி.மு.க.வை சேர்ந்த ஒருவர் பா.ஜ.க.வை சேர்ந்த ஜனார்த்தனன் (வயது 26) என்பவரை சரமாரியாக கத்தியால் வெட்டினார். இதில் ஜனார்த்தனன் படுகாயம் அடைந்து ரத்த வெள்ளத்தில் சரிந்தார். ஜனார்த்தனனை மீட்டு வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    பா.ஜ.க.வை சேர்ந்தவர்கள் வாணியம்பாடி டவுன் போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டனர். குற்றவாளிகளை கைது செய்யக்கோரி வலியுறுத்தினர். இதனால் அங்கு பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டது.

    மணல் கடத்தல் குறித்து புகார் அளித்த பா.ஜனதா பிரமுகரை அரிவாளால் வெட்டி சம்பவம் குத்தாலம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    குத்தாலம்:

    நாகை மாவட்டம் குத்தாலம் விளாவடி காலனியை சேர்ந்தவர் புகழேந்தி. பா.ஜனதா கட்சியில் எஸ்.சி, அணியின் குத்தாலம் நகர பொதுச் செயலாளராக உள்ளார். மயிலாடுதுறை சீனிவாசபுரத்தை சேர்ந்த வேளாண்மை பொறியியல் துறையைச் சேர்ந்த உதவி என்ஜினீயர் பாஸ்கரன் என்பவர் மீது, விளாவடி காலனி பகுதியில் பிளாட் போடுவதாக கூறி அரசு அனுமதியின்றி அளவுக்கு அதிகமாக மண் எடுத்ததாக, குத்தாலம் தாசில்தார் மற்றும் போலீசில் புகழேந்தி புகார் அளித்துள்ளார்.

    இந்நிலையில் நேற்று குத்தாலம் விளாவடி காலனிக்கு கார் மற்றும் மோட்டார் சைக்கிள்களில் வந்த மர்மநபர்கள் கத்தி மற்றும் அரிவாளால் புகழேந்தியை சரமாரியாக வெட்டியுள்ளனர். இதில் அவர் படுகாயமடைந்தார்.

    இதைக்கண்ட அப்பகுதி மக்கள் புகழேந்தியை மீட்டு, மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இதுகுறித்து என்ஜினியர் பாஸ்கரன் மீது குத்தாலம் போலீசில் புகழேந்தி புகார் அளித்தார். போலீசார் சம்பவம் பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மணல் கடத்தல் குறித்து புகார் அளித்த பா.ஜனதா பிரமுகரை அரிவாளால் வெட்டி சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    ×