என் மலர்
நீங்கள் தேடியது "heavily intoxicated"
- மது குடித்து வந்த ராஜனுக்கு கடந்த 13-ந் தேதி உடல் நலக் குறைவு ஏற்பட்டுள்ளது.
- மேம்பாலம் அருகில் உள்ள டாஸ்மாக் கடைக்கு சென்று மீண்டும் மது குடித்துள்ளார்.
ஈரோடு, நீலகிரி மாவட்டம், கூடலூர், கோத்ராவயல் பகுதியைச் சேர்ந்தவர் ராஜன் (44). இவரது மனைவி லைலா (38). இவர்களுக்கு 17,18 வயதில் 2 பெண் குழந்தைகள் உள்ளனர்.
ராஜன், மதுவுக்கு அடிமையானதால் கருத்துவேறுபாடு ஏற்பட்டு மனைவி, குழந்தைகளைப் பிரிந்து ஈரோட்டுக்கு வந்து தனியாக வசித்து வந்துள்ளார்.
அதிக அளவில் மது குடித்ததால் ராஜனுக்கு குடல் மற்றும் உடலின் உள் உறுப்புகள் பாதிக்கப்பட்டு சிகிச்சைபெற்று வந்துள்ளார். ஆனாலும், டாக்டரின் அறிவுரையை ஏற்காமல் தொடர்ந்து மது குடித்து வந்த ராஜனுக்கு கடந்த 13-ந் தேதி உடல் நலக் குறைவு ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து, ஈரோடு அரசுத் தலைமை மருத்துவ மனையில் உள் நோயாளியாக ராஜன் சிகிச்சை பெற்று வந்தார்.
இந்த நிலையில், நேற்று முன் தினம் மருத்துவ மனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆகி வந்த ராஜன், மேம்பாலம் அருகில் உள்ள டாஸ்மாக் கடைக்கு சென்று மீண்டும் மது குடித்துள்ளார். இதை யடுத்து, அவர் அங்கேயே இறந்துவிட்டார்.
இதுகுறித்து தகவலறிந்த ராஜன் மனைவி லைலா, நேற்று ஈரோடு வந்து அவரது உடலை பெற்றுக் கொண்டார்.
இதுகுறித்து, ஈரோடு அரசு மருத்துவமனை புறக் காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
- தனக்கு மசாஜ் செய்ய வருமாறும் தொடர்ந்து வற்புறுத்தி ஆலிசாவுக்கு ஆபாசமாக பேசி மெசேஜ் அனுப்பியுள்ளார்.
- முதலில் போலீசுக்கு தகவல் தெரிவித்தும் நடவடிக்கை ஏதும் இல்லையென ஆவேசமாக பேசியுள்ளார்.
பாஜகவின் திறன் மற்றும் விளையாட்டு பிரிவு செயலாளராக இருப்பவர் ஆலிசா அப்துல்லா.
இவர், தனக்கு தொடர்ந்து ஆபாசமாக குறுஞ்செய்தி அனுப்பி வந்த நபரை அவர் இருக்கும் இடத்திற்கே நேரில் சென்று அழைத்து வந்து போலீசிடம் ஒப்படைத்து அதிரடி காட்டியுள்ளார்.
சென்னை நீலாங்கரையில் உள்ள நட்சத்திர ஓட்டல் ஒன்றில் போதையில் இருந்த அந்த நபர், அலிசாவிடம் தன்னுடன் படுக்கவும், தனக்கு மசாஜ் செய்ய வருமாறும் தொடர்ந்து வற்புறுத்தி ஆபாசமாக பேசி மெசேஜ் அனுப்பியுள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த ஆலிசா, அந்த நபர் தங்கியிருந்த ஓட்டலுக்கே சென்று, கையும் களவுமாக பிடித்து காரில் ஏற்றிக்கொண்டு காவல் நிலையத்தில் ஒப்படைத்துள்ளார்.
இதற்கிடையே, இதுதொடர்பாக வீடியோ ஒன்றையும் ஆலீசா வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில், முதலில் போலீசுக்கு தகவல் தெரிவித்தும் நடவடிக்கை ஏதும் இல்லையென ஆவேசமாக பேசியுள்ளார்.
மேலும், பெரிய கட்சியில் பதவியில் உள்ள தன்னை போன்றவர்களுக்கே இந்த நிலைமை என்றால், மற்றவர்களுக்கு என்ன நிலைமை எனவும் ஆலிசா கேள்வி எழுப்பியுள்ளார்.
இவரது வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.






