search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பாசன கால்வாய் தூர்வாரும் பணிகள்"

    • கோவை மாவட்ட கலெக்டர் கிராந்திகுமார் நேரில் பார்வையிட்டார்
    • பணிகளை விரைவாகவும் தரமாகவும் முடிக்க அதிகாரிகளுக்கு அறிவுரை

    கோவை,

    கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பரம்பிக்குளம்-ஆழியார் வடிநில கோட்டப்பகுதியில் மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலைஉறுதி திட்டத்தின்கீழ் புதிய ஆயக்கட்டு பாசனப்ப ரப்பு கிளை கால்வாய்களை தூர்வாரும் பணிகள் நடந்து வருகின்றன.

    இதன்ஒருபகுதியாக ஆனைமலை வட்டாரத்தில் தென்சங்கம்பாளையம், சோமந்துரை, பெத்த நாயக்கனூர், அங்க லக்குறிச்சி, ஜல்லிப்பட்டி, கரியஞ்செட்டிபாளையம், ஆத்துப்பொள்ளாச்சி ஆகிய இடங்களில் ரூ.21.33 லட்சம் மதிப்பிலும், பொள்ளாச்சி தெற்கு வட்டாரத்தில் மக்கினாம்பட்டி, ஊஞ்ச வேலம்பட்டி, ஜமீன் கோட்டம்பட்டி, சோள பாளையம், கோலார்பட்டி, கூலநாயக்கன்பட்டி, கஞ்சம்பட்டி, தென்குமார பாளையம், எஸ்.மலை யாண்டிபட்டிணம், பாலவூர், நாட்டுக்கல்பாளையம், சிங்காநல்லூர், ஆம்பாரம்பாளையம் ஆகிய பகுதிகளில் ரூ.11.89 லட்சம் மதிப்பிலும், பொள்ளாச்சி வடக்கு வட்டாரத்தில் அய்யம்பாளையம், போடிபாளையம், மண்ணூர், திம்மங்குத்து, நல்லுத்துக்குளி ஆகிய பகுதிகளில் ரூ.4.83 லட்சம் மதிப்பிலும், சுல்தான் பேட்டை வட்டாரத்தில் செஞ்ரிசேரிப்புதூர், கம்மாளப்பட்டி, தாளக்கரை ஆகிய பகுதிகளில் ரூ.5.41 லட்சம் மதிப்பிலும் என ஒட்டுமொத்தமாக ரூ.43.46 லட்சம் மதிப்பீட்டில் புதிய ஆயக்கட்டு பாசனப்பரப்பு கிளைக்கால்வாய்களை தூர்வாரும் பணிகள் நடந்து வருகின்றன.

    இந்த நிலையில் கோவை மாவட்ட கலெக்டர் நேற்று பொள்ளாச்சி பகுதிக்கு வந்திருந்தார். அப்போது அவர் அங்கு நடக்கும் புதிய ஆயக்கட்டு பாசனப்பரப்பு கிளைக்கால்வாய் தூர்வாரும் பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார். அங்கு பணிகளை விரைவாகவும் தரமாகவும் முடித்து பொதுமக்கள் பயன் பாட்டுக்கு ஒப்படைக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு அறிவுரை கூறினார்.

    மாவட்ட கலெக்டருடன் ஆய்வின்போது வடடார வளர்ச்சி அதிகாரிகள் பாலசுப்பிரமணியன், லதா மற்றும் அரசு அலுவலர்கள் உடன் இருந்தனர். 

    ×