search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பாகிஸ்தான் இளம்பெண்"

    • அறுவை சிகிச்சைக்கான செலவு ரூ.35 லட்சம் வரை ஆகலாம் என்று கூறியிருக்கிறார்கள்.
    • இதய தானத்துக்காக விண்ணப்பித்து விட்டு சுமார் 18 மாதங்களாக இந்தியாவிலேயே தங்கி இருந்துள்ளார்.

    சென்னை:

    எல்லை தாண்டி இரக்கமற்று இந்தியர்களை கொன்று குவிக்கும் பாகிஸ்தானியர்கள் மீது ஆத்திரமும் கோபமும் இருந்தாலும் என்னை காப்பாற்றுங்கள் என்று வந்தால் எல்லைகளை கடந்து உயிர் கொடுத்தும் காப்பவர்கள் இந்தியர்கள் என்பதற்கு மேலும் ஒரு சாட்சிதான் இந்த சம்பவம்.

    பாகிஸ்தானை சேர்ந்தவர் ஆயிஷா ரஷான் (19). இந்த இளம்பெண் இதய நோயால் பாதிக்கப்பட்டு கடந்த 2019-ம் ஆண்டு சிகிச்சைக்காக இந்தியா வந்திருக்கிறார். அப்போது அடையார் மலர் ஆஸ்பத்திரியில் இதயவியல் நிபுணராக இருந்த டாக்டர் கே.ஆர்.பாலகிருஷ்ணன் அவரது இதயம் செயலிழந்ததை உறுதிப்படுத்திய மருத்துவ குழுவினர் அவருக்கு அறுவை சிகிச்சை செய்து இதயத்தில் ஒரு பம்பை பொருத்துகிறார்கள். சிகிச்சைக்கு பிறகு பாகிஸ்தான் திரும்பிய ஆயிஷா தனது பள்ளிப்படிப்பை தொடர்ந்தார்.

    இந்த நிலையில் கடந்த ஆண்டு மீண்டும் உடல் நலக்குறைவு ஏற்பட்டதால் மீண்டும் தமிழ்நாட்டுக்கு வந்திருக்கிறார்.

    எம்.ஜி.எம். மருத்துவமனையில் பணியாற்றி கொண்டிருந்த டாக்டர் பால கிருஷ்ணனை அணுகி பரிசோதனை செய்துள்ளார். அப்போது ஆயிஷாவின் இதய பம்பில் ரத்த கசிவு ஏற்பட்டுள்ளதால் இதய மாற்று அறுவை சிகிச்சை செய்தால்தான் காப்பாற்ற முடியும் என்று கூறியிருக்கிறார்கள்.

    இதையடுத்து இதய தானத்துக்காக விண்ணப்பித்து விட்டு சுமார் 18 மாதங்களாக இந்தியாவிலேயே தங்கி இருந்துள்ளார்.

    இந்த சூழ்நிலையில் கடந்த ஜனவரி 31-ந்தேதி டெல்லியில் மூளைச்சாவு அடைந்த 69 வயதானவரின் இதயம் தானத்துக்கு கிடைத்து இருப்பதாகவும் சிகிச்சை பெற வரும்படியும் அழைத்துள்ளார்கள்.

    ஆனால் இந்த அறுவை சிகிச்சைக்கான செலவு ரூ.35 லட்சம் வரை ஆகலாம் என்று கூறியிருக்கிறார்கள். அவ்வளவு பணத்துக்கு எங்கே போவது என்று தவித்துள்ளர்கள். கடைசியில் ஐஸ்வர்யா டிரஸ்டு மூலம் பண உதவியும் கிடைத்துள்ளது.

    இதையடுத்து சென்னையில் எம்.ஜி.எம். ஆஸ்பத்திரியில் அறுவை சிசிக்சை வெற்றிகரமாக முடிந்தது.

    விரைவில் தாயகம் திரும்பவிருக்கும் ஆயிஷா தனது தாய் சனோபருடன் நிருபர்களை சந்தித்தார். அப்போது சனோபர் கூறியதாவது:-

    "வெளிப்படையாகச் சொல்வதென்றால், இந்தியாவுடன் ஒப்பிடும்போது பாகிஸ்தானில் நல்ல மருத்துவ வசதிகள் இல்லை. இந்தியா மிகவும் நட்பாக இருப்பதாக உணர்கிறேன். இந்தியாவுக்கு வந்தபோது கிட்டதட்ட உயிர் போகும் நிலையில் தான் இருந்தது. இதய மாற்று அறுவை சிகிச்சை செய்ய வசதி இல்லை என்று பாகிஸ்தானில் மருத்துவர்கள் கூறியபோது, நாங்கள் டாக்டர் கே.ஆர்.பாலகிருஷ்ணனை அணுகினோம். இதற்காக இந்தியாவுக்கும் மற்றும் மருத்துவர்களுக்கும் நன்றி என்றார்.

    ஆயிஷா கூறும்போது கராச்சி திரும்பியதும் பள்ளி படிப்பை தொடர போவதாகவும், ஆடை வடிவமைப்பாளராக வர வேண்டும் என்பதே தனது ஆசை என்றும் குறிப்பிட்டார்.

    • பாகிஸ்தான் பெண்ணுக்கு அவர் ரகசிய தகவல்களை அனுப்பி இருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் புகார் அளித்தனர்.
    • சமூக ஊடகங்களில் பாகிஸ்தானை சேர்ந்த இளம் பெண்களுடன் தொடர்பு வைக்க வேண்டாம் என போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

    திருப்பதி:

    ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் எக்கு ஆலை பாதுகாப்பு படை பிரிவில் சி.ஐ.எஸ்.எப். வீரர் கபில்குமார் என்பவர் பணியாற்றி வருகிறார். இவருக்கு சமூக ஊடகங்கள் மூலம் பாகிஸ்தானை சேர்ந்த தமிஷா என்ற பெண்ணுடன் நட்பு ஏற்பட்டது.

    இளம் பெண்ணுடன் அவர் நீண்ட நாட்களாக தொடர்பில் இருந்ததாக கூறப்படுகிறது.

    அவரது நடமாட்டத்தில் அதிகாரிகளுக்கு சந்தேகம் எழுந்தது. இதனைத் தொடர்ந்து அவரது செல்போனை கைப்பற்றி தடயவியல் ஆய்வுக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் பாகிஸ்தான் பெண்ணுக்கு அவர் ரகசிய தகவல்களை அனுப்பி இருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் புகார் அளித்தனர்.

    இதைத் தொடர்ந்து சி.ஐ.எஸ்.எப். வீரர் கபில் குமாரின் 3 செல்போன்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    கபில்குமாருடன் தொடர்பில் இருந்த பாகிஸ்தான இளம் பெண் தமிசா (பி. ஐ.ஓ) பாகிஸ்தான் உளவுத்துறை அதிகாரியாக இருக்கலாம் என்று சந்தேகம் எழுந்துள்ளது.

    இது தொடர்பாக சி.ஐ.எஸ்.எப். வீரர் கபில்குமார் மீது 9 பிரிவுகளில் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். பாகிஸ்தான் பெண்ணுக்கு அவர் ஏதாவது முக்கிய தகவலை அளித்தாரா என்பதை கண்டறிய அவரிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டது.

    தொடர்ந்து அவரது செல்போன் மூலம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கபில்குமாரின் செல்போன்களை சரிபார்த்த போது அவரது சமூக ஊடக கணக்குகளில் உள்ள அனைத்து செய்திகளும் நீக்கப்பட்டு இருந்தன.

    அவர் முக்கியமான தகவல்களை பகிர்ந்து கொண்டிருக்கலாம் என்று சந்தேகம் ஏற்பட்டுள்ளது. நாங்கள் 3 செல்போன்களை பறிமுதல் செய்து தடயவியல் ஆய்வகத்திற்கு அனுப்பி உள்ளோம்.

    இதுவரை எந்த ஆதாரமும் இல்லாததால் அவர் கைது செய்யப்படவில்லை. தடயவியல் ஆய்வுக்குப் பிறகு அவர் கைது செய்யப்பட வாய்ப்பு உள்ளது என்றனர்.

    கடந்த சில மாதங்களாக பாகிஸ்தானை சேர்ந்த இளம் பெண்கள் எல்லை தாண்டி காதல் வலை வீசி வருகின்றனர். இதன் மூலம் சதி திட்டம் திட்ட வாய்ப்புள்ளது.

    சமூக ஊடகங்களில் பாகிஸ்தானை சேர்ந்த இளம் பெண்களுடன் தொடர்பு வைக்க வேண்டாம் என போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

    ×