search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பள்ளி மாணவர்கள் சாதனை"

    • அரசு பொதுத் தேர்வினை எழுதிய அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெற்று 100 சதவீதம் தேர்ச்சி பெற்ற பள்ளி என்ற பெருமையை சேர்த்துள்ளனர்.
    • தென்றலரசி என்ற மாணவி 500-க்கு 496 மதிப்பெண்கள் பெற்று மாவட்ட அளவில் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளார்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் வேளாங்கண்ணி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள், 2022-23ம் கல்வியாண்டில் 10-ம் வகுப்பு அரசு பொதுத் தேர்வினை எழுதிய அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெற்று 100 சதவீதம் தேர்ச்சி பெற்ற பள்ளி என்ற பெருமையை சேர்த்துள்ளனர்.

    இதில் தென்றலரசி என்ற மாணவி 500-க்கு 496 மதிப்பெண்கள் பெற்று மாவட்ட அளவில் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளார். இதே போல் ரித்திகாஸ்ரீ - 493 மதிப்பெண்கள் பெற்று இரண்டாம் இடத்தையும், பரமேஸ்வரி- 489 மதிப்பெண்கள் பெற்று மூன்றாமிடத்தையும், பிரேம்குமார் -488, தமிழழகி - 488 மதிப்பெண்கள் பெற்று நான்காமிடத்தையும், ஷோபிகாஸ்ரீ -487 மதிப்பெண்கள் பெற்று ஐந்தாம் இடத்தையும் பிடித்து சாதனை படைத்துள்ளனர்.

    இதே போல் 11-ம் வகுப்பு அரசு பொதுத் தேர்வில் சாதனை படைத்த மாணவர்களும் சாதனை படைத்துள்ளனர்.

    இந்த சாதனை படைத்த மாணவ, மாணவிகளை பள்ளியின் நிறுவனரும், பாராளுமன்ற முன்னாள் துணை சபாநாயகரும், ராஜ்சாப உறுப்பினருமான தம்பிதுரை எம்.பி. பாராட்டி நினைவு பரிசு வழங்கி வாழ்த்தினார்.

    இந்நிகழ்ச்சியில், முன்னாள் அமைச்சர் பாலகிருஷ்ணா ரெட்டி, பள்ளி தாளாளர் கூத்தரசன், பள்ளியின் முதல்வர் மெரினா பலராமன், தலைமை ஆசிரியர் குலசேகரபாண்டியன், பள்ளியின் பொறுப்பாளர் யுவராஜ் மற்றும் பெற்றோர்கள் கலந்துகொண்டனர். தொடர்ந்து 22 ஆண்டுகளாக இப்பள்ளி 100 சதவீதம் தேர்ச்சி பெறும் பள்ளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 

    • 2022-23-ம் கல்வியாண்டில் பயின்ற அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெற்று 100 சதவீதம் தேர்ச்சி பெற்ற பள்ளி என்ற சாதனை படைத்துள்ளனர்.
    • 30 மாணவர்கள் 400 மதிப்பெண்களுக்கு மேல் பெற்று சாதனை படைத்துள்ளனர்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி நாளந்தா இண்டர்நேஷனல் பொதுப்பள்ளியில் 12-ம் வகுப்பு மற்றும் 10ம் வகுப்பில் கடந்த 2022-23-ம் கல்வியாண்டில் பயின்ற அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெற்று 100 சதவீதம் தேர்ச்சி பெற்ற பள்ளி என்ற சாதனை படைத்துள்ளனர்.

    மேலும், இப்பள்ளியில் 12ம் வகுப்பு பயின்ற தினேஷ்ராஜ் என்ற மாணவர் 500க்கு 476 மதிப்பெண்கள் பெற்று கிருஷ்ணகிரி அளவில் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளார்.

    இதே போல் இப்பள்ளியில் 12-ம் வகுப்பு பயின்ற 10 மாணவர்கள் 500 க்கு 400 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர்.

    10-ம் வகுப்பில் பயின்ற மாணவர் ருத்ராட்சம் 500-க்கு 490 மதிப்பெண்கள் பெற்று முதலிடம் பிடித்தனர். மேலும் 30 மாணவர்கள் 400 மதிப்பெண்களுக்கு மேல் பெற்று சாதனை படைத்துள்ளனர். இந்த சாதனை படைத்து பள்ளிக்கும், பெற்றோர்களுக்கும் பெருமை சேர்த்த மாணவர்களை பள்ளியின் நிறுவனர் கொங்கரசன், தாளாளர் சாமுண்டீஸ்வரி, இயக்குனர்கள் கவுதமன், டாக்டர்.புவியரசன் மற்றும் முதல்வர்கள் நினைவுப் பரிசினை வழங்கி வாழ்த்தினர்.

    • பிளஸ்-2 பொதுத்தேர்வில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளனர்.
    • 17 மாணவர்கள் 500 மதிப்பெண்களுக்கு மேல் பெற்று சாதனை படைத்துள்ளனர்.

    பாப்பிரெட்டிப்பட்டி,

    தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப் பட்டி ஸ்டான்லி மெட்ரிக் மேல்நிலை பள்ளி மாணவர்கள், பிளஸ்-2 பொதுத்தேர்வில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளனர்.

    2022-2023-ம் ஆண்டில் நடைபெற்ற பொதுதேர்வில் ரேவதி என்னும் மாணவி 4 பாடங்களில் 100 மதிப்பெண்களுடன் 591 மதிப்பெண்கள் பெற்று சிறப்பிடம் பெற்றுள்ளார். தேஜா சீனிவாஸ் 2 பாடங்களில் 100 மதிப்பெண்களுடன் 574 மதிப்பெண்கள் பெற்று இரண்டாமிடமும், விஷ்ணு 556 மதிப்பெண்களுடன் மூன்றாமிடமும் பெற்று சாதனை படைத்துள்ளனர்.

    மேலும் 17 மாணவர்கள் 500 மதிப்பெண்களுக்கு மேல் பெற்று சாதனை படைத்துள்ளனர். சாதனை பெற உறுதுணையாக இருந்த ஆசிரியர்களுக்கும் பெற்றோர்களுக்கும் ஸ்டான்லி கல்வி நிறுவங்களின் சேர்மேன் முருகேசன் மற்றும் செயலாளர் பிரு ஆனந்த் பிரகாஷ் ஆகிேயார் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

    • யோகாவிற்கான பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன.
    • பதக்கங்களை வேளாங்கண்ணி பள்ளி மாணவர்கள் பெற்றனர்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் மாநகராட்சியில் கடந்த மாதம் 23-ம் தேதி யோகாவிற்கான பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன. போட்டிகளில் பல பள்ளிகளில் இருந்து மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.

    வேளாங்கண்ணி பப்ளிக் பள்ளி மாணவ, மாணவியர்கள் 55 பேர் பங்கேற்று தங்களது திறமைகளை வெளிப்படுத்தினார்கள்.முதல் கட்டப்போட்டியில் நடனத்துடன் கூடிய யோகா முறையில் மாணவ, மாணவியர்கள் கலந்துகொண்டு வெற்றி பெற்றனர்.

    "சாம்பியன் ஆப் சாம்பியன்" என்ற பதக்கங்களை வேளாங்கண்ணி பள்ளி மாணவர்கள் பெற்றனர். "காமன் ஆசனாஸ்" என்ற யோகாவிற்கு பதக்கமும், முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவ, மாணவியர்களுக்கும் போட்டியில் பங்கேற்ற அனைத்து மாணவர்களுக்கும் பள்ளியின் தாளாளர் கூத்தரசன் மற்றும் துணை முதல்வர் மஞ்சுளா தலைமையில் கேடயமும், பாராட்டு சான்றிதழ்களும் வழங்கி மாணவர்களை கவுரவப்படுத்தினர்.

    • மாநில அளவிலான தடகளம் மற்றும் யோகா போட்டிகள் நடைபெற்றது.
    • 1 தங்கப் பதக்கம், 2 வெள்ளிப் பதக்கம் மற்றும் 2 வெண்கலப் பதக்கங்களை வென்று சாதனை படைத்துள்ளனர்.

    மொரப்பூர்,

    நாமக்கல் மாவட்டம், திருசெங்கோடு தனியார் கல்லூரியில் மாநில அளவிலான தடகளம் மற்றும் யோகா போட்டிகள் நடைபெற்றது.

    இதில் தருமபுரி மாவட்டம், கம்பைநல்லூர் ஸ்ரீராம் பப்ளிக் பள்ளி மாணவ, மாணவியர் கலந்துக்கொண்டு 4 தங்கப் பதக்கம், 5 வெள்ளிப் பதக்கம் மற்றும் 5 வெண்கலப் பதக்கங்களை வென்று சாதனை படைத்துள்ளனர்.

    மேலும் இப்போட்டியில் முதல் மற்றும் இரண்டாம் இடம் வென்ற மாணவ, மாணவியர் தேசிய அளவிலான போட்டியில் கலந்துக்கொள்ள தேர்வு செய்யப்பட்டுள்ளனர்

    காரைக்கால் மாவட்ட ரைபிள் கிளப் மற்றும் விஆர்எஸ் ரைபிள் சூட்டிங் ஸ்போர்ட்ஸ் அகாடமி சார்பில் மாநிலங்களுக்கு இடையேயான துப்பாக்கி சுடுதல் போட்டி காரைக்காலில் சமீபத்தில் நடந்தது.

    இதில் கம்பைநல்லூர் ஸ்ரீராம் பப்ளிக் பள்ளி மாணவ மாணவியர் கலந்துக்கொண்டு 1 தங்கப் பதக்கம், 2 வெள்ளிப் பதக்கம் மற்றும் 2 வெண்கலப் பதக்கங்களை வென்று சாதனை படைத்துள்ளனர்.

    மேலும் இப்போட்டியில் முதல் மற்றும் இரண்டாம் இடம் வென்ற மாணவர்கள் தேசிய அளவிலான போட்டி யில் கலந்துக்கொள்ள தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

    சாதனை படைத்த மாணவ, மாணவியர்களை பள்ளியின் தாளாளர் வேடியப்பன், சாந்தி வேடியப்பன், நிர்வாக இயக்குநர்கள் தமிழ்மணி, பவானி தமிழ்மணி, கல்வி இயக்குநர் ஜான் இருதயராஜ், பள்ளியின் முதல்வர் வெற்றிவேல் செல்வம், ஒருங்கிணைப்பாளர்கள் ராஜ்குமார், ஏஞ்சலினா மனோன்மணி, சந்தியா, உடற்பயிற்சி ஆசிரியர்கள் கோகுல், கண்மணி மற்றும் ஆசிரியர்கள் பாராட்டி உள்ளனர்.

    • கரூர் பரணி பார்க் கல்வி குழுமம் குரோத் அகாடமி போட்டி தேர்வு பயிற்சி மையத்துடன் இணைந்து 11 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு நீட், ஜே.இ.இ. தேர்வுக்கான பயிற்சியை பள்ளியிலேயே நடத்தி வருகிறது.
    • விழாவிற்கு பரணி பார்க் கல்வி குழும தாளாளர் மோகனரெங்கன் தலைமை தாங்கினார்.

    கரூர் :

    கரூர் பரணி பார்க் கல்வி குழுமம் குரோத் அகாடமி போட்டி தேர்வு பயிற்சி மையத்துடன் இணைந்து 11 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு நீட், ஜே.இ.இ. தேர்வுக்கான பயிற்சியை பள்ளியிலேயே நடத்தி வருகிறது. இதன் ஒரு பகுதியாக கடந்த ஜூலை மாதம் நடைபெற்ற நீட் தேர்வில் பரணி வித்யாலயா பள்ளி மாணவர் முகேஷ் 99.6 சதவீதமும், 636 மதிப்பெண்ணும் பெற்றுள்ளார்.

    மாணவி சிந்துஜா 99.5 சதவீதமும், 630 மதிப்பெண்ணும் பெற்றுள்ளார். தேசிய தரவரிசை பட்டியலில் இடம் பெற்ற மாணவர்களை பாராட்டி பள்ளியில் பாராட்டு விழா நடைபெற்றது. இவ்விழாவிற்கு பரணி பார்க் கல்வி குழும தாளாளர் மோகனரெங்கன் தலைமை தாங்கினார். செயலாளர் பத்மாவதி மோகனரெங்கன் முன்னிலை வகித்தார்.

    நீட் தேர்வில் தேசிய அளவில் அபார சாதனை படைத்த மாணவர் முகேஷ், மாணவி சிந்துஜாவின் சாதனைக்கு உறுதுணையாக இருந்த பெற்றோர்கள் மற்றும் குரோத் அகாடமி பயிற்சி மைய ஆசிரியர்கள் ஆகியோரை பரணி பார்க் கல்வி குழுமத்தின் முதன்மை முதல்வர் ராமசுப்பிரமணியன், நிர்வாகக்குழு உறுப்பினர் சுபாஷினி, பரணி வித்யாலயா முதல்வர் சுதாதேவி, பரணி பார்க் முதல்வர் சேகர், குரோத் அகாடமியின் தலைமை பயிற்சியாளர் கவிதா ராமசுப்பிரமணியன், துணை முதல்வர் பிரியா மற்றும் இருபால் ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் பாராட்டி வாழ்த்தினர்.

    ×