search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பலருக்கும்"

    • கேரளாவில் நண்பர் வீட்டில் பதுங்கல்-தனிப்படை போலீசார் விரைந்தனர்.
    • இளம்பெண்களுக்கு பாலியல் தொல்லை.

    நாகர்கோவில்:

    குமரி மேற்கு  மாவட்டம் கொல்லங்கோடு அருகே பாத்திமா நகரை சேர்ந்தவர் பெனடிக்ட் ஆன்றோ (வயது 29).

    பெனடிக்ட் ஆன்றோ தக்கலை பகுதியில் உள்ள ஒரு ஆலயத்தில் பாதிரியராக இருந்தார்.அப்போது ஆலயத்துக்கு வரும் இளம்பெண்களுக்கு அவர் பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் எழுந்தது.

    இந்த நிலையில் அவர் பெண்களுடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் வெளியானது. இது தமிழ்நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    இது தொடர்பாக போலீஸ் உயர் அதிகாரிகள் கூறும்போது, பாதிரியார் மீது புகார் கொடுத்தால் அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தனர்.

    இந்த நிலையில் நர்சிங் மாணவி ஒருவர் பாதிரியார் மீது எஸ்.பி.அலுவலகத்தில் புகார் கொடுத்தார். அதில்  ஆலயத்துக்கு சென்ற போது பாதிரியார் தன்னிடம் பாலியல் ரீதியாக பேசி தொல்லை கொடுத்ததாக கூறியிருந்தார்.மேலும் தன்னை  வாட்ஸ்-அப்பில் தொடர்பு கொண்டு ஆபாசமாக பேசியதாகவும் குறிப்பிட்டு இருந்தார்.

    இதற்கிடையே  சமூக வலைதளத்தில் வெளியான ஆபாச படங்களில் பாதிரியார் பெனடிக்ட் ஆன்றோவுடன் நெருக்கமாக இருந்த பெண்களில் ஒருவர் சென்னையை சேர்ந்தவர்  என தெரியவந்தது.

    தற்போது அந்த படம் வைரலானதை தொடர்ந்து  அவரும் குமரி மாவட்ட சைபர் கிரைம் போலீசாரை தொடர்பு கொண்டு அந்த படங்களை சமூக வலைதளத்தில் இருந்து நீக்க வேண்டும் என கூறியிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

    பாதிரியார் பெனடிக்ட் ஆன்றோ மீது அடுத்தடுத்து புகார்கள் வெளிவந்த நிலையில் குமரி மாவட்ட போலீசார் தற்போது இந்த விவகாரம் தொடர்பான விசாரணையை முடுக்கி விட்டுள்ளனர்.

    முதற்கட்டமாக பாதிரியார் பெனடிக்ட் ஆன்றோ மீது பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டம் உள்பட 5 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

    போலீசார் வழக்கு பதிவு செய்த விபரம் தெரியவந்ததும் பாதிரியார் பெனடிக்ட் ஆன்றோ தலைமறைவாகி விட்டார். அவரை பிடிக்க  தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.

    பாதிரியார் பெனடிக்ட் ஆன்றோ  தற்போது கேரளாவில் உள்ள தனது நண்பர் வீட்டில் தங்கி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இதையடுத்து அவரை பிடிக்க போலீசார் கேரளா விரைந்துள்ளனர்.

    பாதிரியார் பெனடிக்ட் ஆன்றோவால் பாதிக்க ப்பட்ட பெண்கள் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் அளிக்கலாம் என்று விசாரணை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    புகார் அளிக்கும் பெ ண்களின் விபரங்கள் ரகசியமாக வைக்கப்படும் என்றும் அவர்கள் தைரி யமாக முன்வந்து புகார் அளிக்கலாம் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

    ×