search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பலசரக்கு கடை"

    • வடசேரி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து வழக்குப்பதிவு செய்து விசாரணை
    • சி.சி.டி.வி. கேமரா காட்சிகளை கைப்பற்றி ஆய்வு

    நாகர்கோவில்:

    நாகர்கோவில் அருகே பார்வதிபுரத்தைச் சேர்ந்தவர் ஜாண் செல்வன் (வயது 58).

    இவர் பார்வதிபுரத்தி லிருந்து அழகம்பாறை செல்லும் சாலையில் பல சரக்கு கடை வைத்துள்ளார். நேற்று இரவு வழக்கம்போல் கடையை பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்றார்.இன்று காலையில் ஜாண் செல்வன் கடையை திறக்க வந்தார். அப்போது கடையின் பின் பக்க சுவரில் துளை போடப் பட்டு இருந்தது.

    இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர் கடையின் ஷட்டரை திறந்து உள்ளே சென்று பார்த்தபோது மேஜையில் இருந்த பணம் மற்றும் பொருட்கள் திருடப்பட்டு இருந்தது. இதுகுறித்து வடசேரி போலீசுக்கு தகவல் தெரிவித்தார்.

    போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினார்கள். கடையில் இருந்த ரூ.20 ஆயிரம் மற்றும் பல சரக்கு பொருட்கள் கொள்ளை போயிருப்பதாக ஜாண் செல்வன் தெரிவித்தார். அப்போது பக்கத்தில் உள்ள வெல்டிங் கடை ஒன்றில் இருந்து குத்து விளக்கை மர்மநபர்கள் திருடி இருந்தது தெரிய வந்தது. அந்த குத்து விளக்கு அந்தப் பகுதியில் கிடந்ததை போலீசார் கைப்பற்றினார்கள்.

    மேலும் வெல்டிங் கடையில் இருந்து ட்ரில்லிங் மெஷின் ஒன்றை எடுத்து வந்து பல சரக்கு கடையில் பின்பக்க சுவரில் துளை போட்டு உள்ளே புகுந்து கொள்ளையடித்து உள்ளனர்.

    இந்த கொள்ளை சம்பவம் குறித்து வடசேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். அந்த பகுதி யில் உள்ள சி.சி.டி.வி. கேமராவின் காட்சிகளையும் கைப்பற்றி ஆய்வு செய்து வருகிறார்கள்.

    • தென்தாமரை குளம் போலீசார் வழக்கு பதிவு செய்து திருட்டில் ஈடு பட்ட மர்ம நபர்கள் குறித்து விசாரணை
    • இந்த 2 திருட்டு சம்பவத்திலும் ஈடுபட்டது ஒரு சிறுவன்

    கன்னியாகுமரி:

    குமரி மாவட்டம் வடக்கு தாமரை குளம் பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் நீலகண்ட பிள்ளை (வயது 42). இவர் பாறை குளத்தில் ஓட்டல் நடத்தி வருகிறார்.

    சம்பவத்தன்று இரவு நீலகண்ட பிள்ளை ஓட்டலை அடைத்துச் சென்றார். மறு நாள் காலை அவர் வந்த போது ஓட்டலின் பின்பக்க கதவு திறந்து கிடந்து உள்ளது.

    இதனால் அதிர்ச்சி அடைந்த அவர், உள்ளே சென்று பார்த்த போது அங்கு உண்டியலில் இருந்த ரூ.600 திருட்டுப் போயி ருந்தது தெரியவந்தது. இது குறித்து தென்தாமரை குளம் போலீசில் நீலகண்ட பிள்ளை புகார் அளித்தார்.

    இதேபோல் வடக்கு தாமரை குளம் வடக்கு தெருவை சேர்ந்தவர் ராஜப்பன் (63). பாறை குளத்தில் பலசரக்கு கடை நடத்தி வருகிறார்.இவர் சம்பவத்தன்று இரவு கடையை அடைத்து விட்டு அடுத்த நாள் காலை கடையை திறக்க வரும் பொழுது கடையின் முன்பக்க பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது.

    கடைக்குள் உள்ளே சென்று பார்த்த போது மேஜை டிராயரில் இருந்த ரூ. 5 ஆயிரம் மற்றும் 12 கிராம் எடையுள்ள தங்க மோதிரம் திருட்டுப் போயிருந்தது.

    இது குறித்து அவரும் போலீசில் புகார் அளித்தார். இதையடுத்து தென்தாமரை குளம் போலீசார் வழக்கு பதிவு செய்து திருட்டில் ஈடு பட்ட மர்ம நபர்கள் குறித்து விசாரணை நடத்தியதில் இந்த 2 திருட்டு சம்பவத்திலும் ஈடுபட்டது ஒரு சிறுவன் என தெரிய வந்தது. இதுகுறித்து போலீசார் மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×