search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பயோ மைனிங்"

    • ரூ.10 கோடி செலவில் குப்பையை அகற்றும் பணி நடந்து வருகிறது.
    • மேயர் மகேஷ் தகவல்

    நாகர்கோவில்:

    நாகர்கோவில் மாநகராட்சி மேயர் மகேஷ் நிருபர்களிடம் கூறியதாவது:-

    நாகர்கோவில் மாநக ராட்சிக்கு தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ரூ.74.54 கோடி வளர்ச்சி திட்டங்களை தந்துள்ளார் கள். நாகர்கோவில் மாநக ராட்சி பகுதியில் ஒருவருக்கு தினமும் 135 லிட்டர் குடிநீர் கிடைக்கும் வகையில் ஆம்ரூத் திட்டத்தின் கீழ் ரூ.296 கோடியில் வேலை நடந்து வருகிறது.

    அந்தப் பணியும் முடியும் தருவாயில் உள்ளது. பாதாள சாக்கடை பணி 17 வார்டு பகுதிகளில் முடிந்துள்ளது. மற்ற வார்டுகளில் பணிகள் நடந்து வருகிறது.

    நகர்ப்புற சாலை மேம்பாட்டு திட்டத்தின் கீழ் மாநகரப் பகுதியில் கோர்ட்டு ரோடு, பெண்கள் கிறிஸ்தவ கல்லூரி சாலைகள் ரூ.3.50 கோடியில் அழகுப்படுத்தும் பணி தொடங்கப்பட்டுள்ளது. கோணம் தொழில்கல்வி நிலையம் அருகே ரூ.2.50 கோடி செலவில் நவீன படிப்பகம் அமைக்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது.

    நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் 8 பூங்காக்கள் ரூ.1 கோடி செலவில் பணிகள் தொடர்ந்து நடந்து வருகிறது.

    அதேபோல் சுகாதாரத் துறையில் தொல்லைவிளை, கிருஷ்ணன் கோவில் ஆகிய இரண்டு ஆரம்ப சுகாதார நிலையம் ரூ.3 கோடியில் நவீனப்படுத்தப்பட்டு வருகிறது. அதுபோல் 10 இடங்களில் நலவாழ்வு மையங்கள் ரூ.2.50கோடியில் அமைக்கப்பட்டு வருகிறது. இதில் இரண்டு இடங்களில் பணி முடியும் தருவாயில் உள்ளது.

    சரலூர் மீன் சந்தையில் ரூ.1.5 கோடி செலவில் நவீன வணிக வளாகம் அமைக்கப்பட உள்ளது. வடசேரி கிறிஸ்டோபர் பஸ் நிலையம், வடசேரி ஆம்னி பஸ் நிலையம், அண்ணா பஸ் நிலையம் ஆகிய 3 பஸ் நிலையங் களும் ரூ.8.35 கோடியில் நவீனப்படுத்தப்பட உள்ளது. வீடு இல்லாமல் சாலையோரம் தூங்கு பவர்கள் தூங்கும் வகையில் ரூ.50 லட்சம் செலவில் செட் அமைக்கப்பட உள்ளது.

    வலம்புரிவிளையில் உள்ள உரக்கிடங்கு பயோ மைனிங் முறையில் ரூ.10 கோடி செலவில் குப்பையை அகற்றும் பணி நடந்து வருகிறது. இந்த வருட இறுதிக்குள் இந்த பணிகள் முடிந்து விடும். ரூ.10.50 கோடி செலவில் மாநகராட்சி புதிய அலுவலகம் கட்டப் பட்டுள்ளது. அது விரைவில் திறக்கப்பட உள்ளது.

    கலெக்டர் அலுவலக சந்திப்பில் அமைக்கப்படும் ரவுண்டாவினை தொடர்ந்து செட்டி குளத்திலும் ரவுண் டான அமைக்கப்பட உள்ளது. மாநகரப் பகுதியில் உள்ள ஆக்கிரமிப்பு எந்த வித பாரபட்சமின்றி அகற் றப்படும். மாநகர பகுதி யில் உள்ளச் சாலை கள் அனைத்தும் இரு வழிச்சாலை களாக ஆக்கி னால் மட்டுமே போக்கு வரத்து நெருக்கடி குறையும்.

    முதற்கட்டமாக செட்டிகுளம் முதல் சவேரி யார் கோவில் சந்திப்பு வரை இருவழிப்பாதையாக ஆக்கப்பட உள்ளது.இதை தொடர்ந்து மணிமேடை சந்திப்பு முதல் வடசேரி வரையும் இருவழிப்பாதை ஆக்கப்பட உள்ளது. நாகர்கோவில் மாநகரத்தை மாசில்லா மாநகரமாக மாற்றும் பணி தொடங்கப்பட உள்ளது.

    குப்பைகளை தரம் பிரித்து வழங்குவது குறித்து பள்ளி மாணவர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப் பட்டு வருகிறது. இதனை தொடர்ந்து கல்லூரி மாண வர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த உள்ளோம். மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்ட பிறகு மக்கள் அதனை பின்பற்ற வில்லை என்றால் அபராதம் விதிக்கப்படும்.

    கோட்டார் ரோடு ரூ.20.60 லட்சம் செலவில் சாலை போடப்பட உள்ளது. மாநகர பகுதியில் வாகனம் நிறுத்தும் வகையில் நவீன வாகனங்கள் நிறுத்தம் அமைக்கப்படும். தமிழக அரசு பல திட்டங்களை குமரிக்கு வழங்கி வரு கிறது. அந்த வகையில் அற நிலையத்துறை கோவில் களை மராமத்து செய்ய ரூ.5.61 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பேட்டியின் போது ஆணையர் ஆனந்த் மோகன், பொறியாளர் பாலசுப்பிரமணியன் ஆகியோர் உடன் இருந்தனர்.

    ×