search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பனை ஓலை குருத்துகள்"

    • சொக்கப்பனை கொளுத்தும் நிகழ்ச்சி யில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொள்வார்கள்.
    • பல்வேறு பகுதிகளிலும் பனை ஓலை குருத்துகள், திரளி இலைகள் விற்பனையும் விறுவிறுப்பாக நடை பெற்றது.

    நாகர்கோவில் :

    கார்த்திகை தீபத் திருவிழா இன்று (26-ந்தேதி) கோலாகலமாக கொண்டா டப்படுகிறது. இதையொட்டி குமரி மாவட்டத்தில் உள்ள அனைத்து கோவில்களிலும் கார்த்திகை தீபம் ஏற்றி சிறப்பு வழிபாடுகள் நடை பெறும்.

    கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில், சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோவில், நாகர்கோவில் நாகராஜா கோவில், வடி வீஸ்வரம் அழகம்மன் கோ வில், கிருஷ்ணன்கோவில் கிருஷ்ணசுவாமி கோவில், பறக்கை மதுசூதன பெரு மாள் கோவில், களியல் மகாதேவர் கோவில் ஆகிய 7 கோவில்களில் இரவு 9 மணிக்கு சொக்கப்பனை கொளுத்தும் நிகழ்ச்சி நடக்கிறது.

    இதற்காக பனந்தோப்பு களில் இருந்து பனைமரம் வெட்டி எடுத்து வரப்பட்டு கோவில் முன்பு உள்ள வீதியில் நடப்படும். அந்த பனை மரத்தை சுற்றி பனை ஓலைகளால் வேயப்படும். இன்று இரவு கோவில் அர்ச்சகர் அந்தப்பனை மரத்தின் உச்சியில் ஏறி பூஜை செய்து தீபம்ஏற்றி விட்டு கீழே இறங்கி வந்து விடுவார். இந்த சொக்கப்பனை கொளுத்தும் நிகழ்ச்சி யில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொள்வார்கள்.

    கார்த்திகை தீப திருவிழா வையொட்டி வீடுகளில் அகல் விளக்குகள் ஏற்று வார்கள். இதற்காக குமரி மாவட்டத்தில் அகல் விளக்குகள் விற்பனை விறுவிறுப்பாக நடை பெற்றது. தள்ளு வண்டி களிலும், சாலையோரங்களி லும் ஏராளமான வியாபாரி கள் அகல் விளக்குகளை குவித்து வைத்து விற்பனை செய்தனர். பொதுமக்கள் ஆர்வத்துடன் அகல் விளக்கு களை வாங்கிச் சென்றனர்.

    மேலும் சுவாமிக்கு கொழுக்கட்டை அவித்து வழிபடுவார்கள். கொழுக் கட்டை தயாரிப்ப தற்காக கட்டபொம்மன் சந்திப்பு, வடசேரி உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் பனை ஓலை குருத்துகள், திரளி இலைகள் விற்பனையும் விறுவிறுப்பாக நடை பெற்றது. மேலும் பூக்களின் விற்பனையும் தீவிரமாக நடந்து வருகிறது. இதனால் பூக்களின் விலையும் உயர்ந்து காணப்படுகிறது.

    ×