search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பணியில் ஈடுபட்டனர்"

    • கணக்கெடுப்பு நிறைவில் தகவல்
    • குமரி மாவட்டத்தில் 80 வனப்பணியாளர்கள், 20 தன்னார்வலர்கள் கணக்கெடுப்பு பணியில் ஈடுபட்டனர்.

    கன்னியாகுமரி:

    தமிழ்நாடு, கேரளா மற்றும் கர்நாடகா உள்ளிட்ட தென்னிந்திய மாநிலங்களில் ஒருங்கிணைந்த யானைகள் கணக்கெடுப்பு பணிகள் நடத்தப்பட்டன. கடந்த 17-ந்தேதி முதல் 3 நாட்கள் இந்த பணிகள் நடந்தன.

    குமரி மாவட்டத்தில் 80 வனப்பணியாளர்கள், 20 தன்னார்வலர்கள் கணக்கெடுப்பு பணியில் ஈடுபட்டனர். வண்ணாத்திப்பாறை, களியல், கோதையார், மாறாமலை, தாடகை மலை, அசம்பு உள்ளிட்ட பல்வேறு வனப்பகுதிகளில் இந்த கணக்கெடுப்பு பணி நடந் தது.

    முதல் நாள் யானைகளை நேரில் பார்த்து கணக்கெடுக்கப்பட்டது. இதில் 3 யானைகள் வனத்தில் கண்டறியப்பட்டது. 2-வது நாள் சாணம் மற்றும் லத்தி மூலம் கணக்கெடுப்பு பணி நடைபெற்றது. 3-வது நாளான நேற்று நீர்நிலை பகுதிகளில் யானைகள் வருவதை பார்த்து கணக்கெடுக்கும் பணி நடைபெற்றது. பணியில் ஈடுபட்டவர்கள், பைனாகுலர் மூலம் யானைகளை பார்த்து கணக்கெடுத்தனர்.

    அப்போது வனப்ப குதிக்குள் யானைகள் கூட்டம் கூட்டமாக இருப்பது தெரியவந்துள்ளது. அசம்பு வனத்தில் 7 யானை கள் கூட்டமாக நின்றதை கணக்கெடுத்துள்ளனர். இதேபோல வேறு சில பகுதிகளிலும் யானைகள் கூட்டமாக நின்றுள்ளது. கணக்கெடுப்பின் மூலம் குமரி மாவட்ட வனப்பகுதியில் 15 யானைகள் இருப்பது தெரியவந்துள்ளது.

    இதுகுறித்து மாவட்ட வன அதிகாரி இளையராஜா கூறுகையில், 3 நாட்கள் நடைபெற்ற யானைகள் கணக்கெடுப்பு பணி நிறைவு பெற்றுள்ளது. இதில் 15 யானைகள் வனத்தில் இருப்பது தெரிய வந்துள்ளது. ஏற்கனவே எடுக்கப்பட்ட கணக்கெடுப்பில் 20 யானைகள் இருப்பதாக குறிப்பிடப்பட்டு இருந்தது என்றார்.

    கணக்கெடுப்பில் பெறப்பட்ட தகவல்கள், முதுமலை புலிகள் காப்பக கள இயக்குநர்களுக்கு அனுப்பி வைக்கப்படும். தமிழகம் முழுவதும் உள்ள தகவல்கள் கிடைக்கப்பெற்றதும், முதுமலை புலிகள் காப்பக இயக்குநரால் ஆய்வு செய்யப்பட்டு, இறுதி எண்ணிக்கை அறிவிக்கப்படும் என்று கூறப்படுகிறது.

    ×