search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "படைவீரர் கொடிநாள்"

    • கலெக்டர் அரவிந்த் தொடங்கி வைத்தார்
    • இந்தியா முழுவதும் ஆண்டுதோறும் டிசம்பர் 7-ந் தேதி கொடிநாள் தினம் அனுசரிக்கப்பட்டு வருகிறது.

    நாகர்கோவில்:

    இந்தியா முழுவதும் ஆண்டுதோறும் டிசம்பர் 7-ந் தேதி கொடிநாள் தினம் அனுசரிக்கப்பட்டு வருகிறது.

    அன்றைய தினம் முன்னாள் படை வீரர்கள் ஆற்றிய தொண்டுகளை நினைவு கூறும் வகையில் கொடி நாள் நிதி திரட்டப்படு கிறது. இந்த நிதி உயிர் நீத்த படை வீரர்களின் மனைவிகள், ஊனமுற்ற படை வீரர்கள், முன்னாள் படை வீரர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் மறுவாழ்விற்காகவும், நலத்திட்டங்களுக்காகவும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. குமரி மாவட்டத்தில் கடந்த ஆண்டு கொடிநாள் வசூல், ரூ.1 கோடியே 14 லட்சத்து 52 ஆயிரம் நிர்ணயம் செய்யப்பட்டு, ரூ.1 கோடியே 20 லட்சத்து 56 ஆயிரம் வசூல் செய்யப்பட்டுள்ளது.

    இந்த ஆண்டுக்கான படைவீரர் கொடிநாள் வசூலை மாவட்ட கலெக்ட ரும் மாவட்ட முப்படை வீரர் வாரியத் தலைவருமான அரவிந்த் இன்று தொடங்கி வைத்தார். அப்போது அவருக்கு அடையாள கொடியை மாவட்ட முன்னாள் படைவீரர் நல உதவி இயக்குநர் சீனிவாசன் அணிவித்தார்.

    தொடர்ந்து போர் மற்றும் போரையொத்த நடவடிக்கையின் போது உயிர் நீத்த படைவீரரின் மனைவிக்கு கார்கில் நிவாரண நிதியில் இருந்து கருணை தொகை ரூ.20 லட்சம் வழங்கப்பட்டது. குமரி மாவட்ட நிர்வாகத்தின் சீரிய முயற்சியால் தொடர்ச்சியாக 2 ஆண்டு கள் ரூ.1 கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை புரிந்து உள்ளதாகவும் இந்த ஆண்டும் கொடிநாள் நிதிக்கு அனைவரும் நிதியை வாரி வழங்க வேண்டும் என்று கலெக்டர் அரவிந்த் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

    ×