search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "படகு விபத்து"

    • ஆற்றில் படகு கவிழ்ந்த விபத்தில் 20 பேர் உயிரிழந்தனர்.
    • இச்சம்பவம் பாகிஸ்தானில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    இஸ்லாமாபாத்:

    பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணம் ரஹிம் யார் கான் மாவட்டம் மோட்ச்கா பகுதியை சேர்ந்த 100-க்கும் மேற்பட்டோர் ராஜன்பூர் பகுதியில் நடந்த திருமண நிகழ்ச்சியில் பங்கேற்றுவிட்டு படகில் வீடு திரும்பிக் கொண்டிருந்தனர்.

    பஞ்சாப் மற்றும் சிந்து மாகாண எல்லையில் உள்ள இண்டஸ் ஆற்றில் பயணித்தபோது அந்தப் படகு எதிர்பாராத விதமாக ஆற்றில் கவிழ்ந்தது. இந்த விபத்தில் படகில் பயணித்த அனைவரும் ஆற்று நீரில் அடித்துச்செல்லப்பட்டனர்.

    தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த மீட்புக்குழுவினர் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டவர்களை மீட்கும் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

    இந்நிலையில், இந்த படகு விபத்தில் 19 பெண்கள் உயிரிழந்துள்ளனர். அவர்களின் உடல்கள் ஆற்றில் இருந்து மீட்கப்பட்டுள்ளன. ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டுள்ள பலரை தேடும் பணிகள் தொடர்ந்து நடக்கிறது. இதனால் பலி எண்ணிக்கை உயரும் என்ற அச்சம் எழுந்துள்ளது.

    விசாரணையில், அதிக அளவிலான மக்களை படகில் ஏற்றியது, நீரின் ஓட்டம் அதிகரிப்பு உள்ளிட்ட காரணங்களால் இந்த விபத்து ஏற்பட்டிருக்கலாம் என தகவல் வெளியானது.

    திருமண வீட்டிற்கு சென்று திரும்பியவர்கள் ஆற்றில் மூழ்கி பலியான இச்சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    மேற்கு வங்காளம் மாநிலத்தில் உள்ள பைரவ் ஆற்றில் படகு கவிழ்ந்து விபத்தில் சிக்கியது, இதில், 7 பேரை காணவில்லை என தகவல் வெளியாகியுள்ளது.
    கொல்கத்தா :

    மேற்கு வங்காளம் மாநிலம், மர்ஷிதாபாத் மாவட்டத்தில் உள்ள பைரவ் ஆற்றில் பயணிகள் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் படகில் பயணம் செய்த 7 பேரை காணவில்லை என தகவல் வெளியாகியுள்ளது.

    ஹரிஹர்புரா எனும் இடத்தில் இருந்து சுமார் 40 பயணிகளுடன் விரிந்தபன்பூர் நோக்கி 2 படகுகள் இன்று இரவு 7 மணியளவில் சென்றது. அப்போது கரிப்பூர் எனும் இடத்தில் ஒரு படகு தண்ணீரில் கவிழ்ந்து விபத்தில் சிக்கியது. இந்த சம்பவம் குறித்த தகவல் அறிந்ததும் மாவட்ட நீதிபதி பி.உலகநாதன் அப்பகுதிக்கு சென்று விபத்து நிகழ்ந்த இடத்தில் பார்வையிட்டார்.

    பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், ‘ படகு கவிழத்தொடங்கியதும் அதில் இருந்த பலர் கரையை நோக்கி தண்ணீரில் நீந்தி பாதுகாப்பாக வந்துவிட்டனர். ஆனாலும், படகில் பயணம் செய்த 7 பேர் பற்றிய தகவல் இல்லை. அவர்களை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இரவு நேரத்தில் தேடுதல் பணியை மேற்கொள்ள தேவையான லைட் வசதிகள் அனைத்தும் செய்யப்பட்டுள்ளது' என அவர் தெரிவித்தார்.
    தாய்லாந்தின் புக்கெட் தீவு அருகே 90 பேரை ஏற்றிச் சென்ற படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 20 பேர் மாயமாகியுள்ளனர்.
    பாங்காக்:

    தாய்லாந்தின் சுற்றுலா தீவான புக்கெட் அருகே இன்று மாலை 90 பேரை ஏற்றிச் சென்ற படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளனது. இதில், பலர் மீட்கப்பட்டுவிட்டாலும் 20 பேர் மாயமாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

    மீட்புப்பணி தொடர்ந்து நடந்து வருவதாக  அந்நாட்டு பேரிடர் துறை அறிவித்துள்ளது. 
    இந்தோனேசியாவில் சமீபத்தில் நடந்த படகு விபத்தில் 163 பேர் பலியானதாக கூறப்படும் நிலையில், இன்று நடந்த மற்றொரு படகு விபத்து ஏற்பட்டு 12 பேர் உயிரிழந்துள்ளனர். #Indonesia
    ஜகார்த்தா:

    இந்தோனேசியா நாட்டின் சுமத்ரா தீவு அருகே உள்ள தோபா ஏரியில் இரண்டு வாரங்களுக்கு முன்னர் பயணிகளுடன் சென்ற படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் படகிலிருந்த 163 பேரில், சிலரின் சடலங்கள் மட்டும் மீட்கப்பட்டுள்ளன. அவர்கள் அனைவரும் பலியாகியிருக்கலாம் என அஞ்சப்படும் நிலையில், தேடுதல் பணி தொடர்ந்து நடந்து வருகிறது. 

    இந்நிலையில், சுலாவேஸி தீவு பகுதியில் இன்று காலை ஒரு படகு  விபத்துக்குள்ளானது. 139 பேர் படகில் இருந்ததாகவும் இதுவரை 12 பேர் பலியானதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், விபத்துக்குள்ளான படகில் கார், மோட்டார் சைக்கிள் ஆகியவை இருந்ததாகவும் கூறப்படுகிறது.

    விதிமுறைகளை மீறி அனுமதிக்கப்பட்ட அளவை விட பயணிகளை ஏற்றுவதே விபத்துக்கு காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
    உலகக் கோப்பை கால்பந்து போட்டிகள் நடைபெற உள்ள ரஷியாவின் வோல்கோர்ட் நகரில் இன்று நிகழ்ந்த படகு விபத்தில் 10 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
    மாஸ்கோ :

    ரஷியாவின் முக்கிய நகரங்களில் ஒன்றான வோல்கோகிராட் நகரில் உலகக் கோப்பை கால்பந்து போட்டிகள் நடைபெற்ற உள்ளது. இந்நகரில் உள்ள வோல்கா நதியில், திடீரென இரண்டு படகுகள் ஒன்றோடு ஒன்று மோதி விபத்துக்குள்ளானதில் 10 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். 

    விபத்து குறித்து தகவல் அறிந்ததும் அப்பகுதிக்கு விரைந்த மீட்பு குழுவினர் நதியில் உயிருக்கு போராடியபடி இருந்த 5 பேரை பத்திரமாக மீட்டனர். அவர்களில் மூவர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். படகில் பயணம் செய்த மேலும் ஒருவரை பற்றிய எந்த தகவலும் இல்லாததால் அவரை தேடும் பணி துரிதப்படுத்தப்பட்டுள்ளது. 

    விபத்து நிகழ்ந்த வோல்கோகிராட் நகரில், இங்கிலாந்து, துனிஷியா, நைஜீரியா, ஐஸ்லாந்து, சவுதி அரேபியா, எகிப்து, ஜப்பான் உள்ளிட்ட நாடுகள் பங்கேற்கும் உலகக் கோப்பை கால்பந்து தொடக்க சுற்று போட்டிகள் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.
    ×