search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "படகு போக்குவரத்து"

    • சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகமாக இருந்ததால் இயக்கப்பட்டது
    • கடல் நீர்மட்டம் தாழ்வு காரணமாக படகு போக்குவரத்து 2 மணி நேரம் தாமதமாக தொடங்கியது.

    கன்னியாகுமரி:

    கன்னியாகுமரி கடல் நடுவில் அமைந்துள்ள பாறையில் சுவாமி விவேகானந்தர் நினைவு மண்டபம் உள்ளது. இங்கு சுற்றுலா பயணிகள் பார்வையிடுவதற்கு தினமும் படகுகள் இயக்கப்பட்டு வருகின்றன. தற்போது ஓணம் பண்டிகை விடுமுறை என்பதால் கன்னியாகுமரியில் சுற்றுலா பயணிகள் கூட்டம் கட்டுக்கடங்காமல் உள்ளது. இதனால் சுற்றுலா பயணிகள் 2 மணி நேரத்துக்கு மேலாக வரிசையில் காத்து நின்று படகில் சென்று பார்த்து வருகிறார்கள்.

    நேற்று சனிக்கிழமை விடுமுறை என்பதால் வழக்கத்தைவிட சுற்றுலா பயணிகளின் கூட்டம் அதிகமாக இருந்தது. கடல் நீர்மட்டம் தாழ்வு காரணமாக நேற்று காலை 8 மணிக்கு விவேகானந்தர் நினைவு மண்டபத்துக்கு தொடங்க வேண்டிய படகு போக்குவரத்து 2 மணி நேரம் தாமதமாக காலை 10 மணிக்கு தொடங்கியது.

    இருப்பினும் வழக்கம்போல் மாலை 4 மணிக்கு விவேகானந்தர் மண்டபத்துக்கு படகு போக்குவரத்துநிறுத்தப்பட்டது. ஆனால் அதே சமயம் விவேகானந்தர் மண்டபத்தில் இருந்த சுற்றுலாபயணிகளை இரவு 7 மணி வரை படகுமூலம் கரைக்கு திரும்பி அழைத்து வந்தனர். இரவில் மின்விளக்குவெளிச்சத்தில் இந்த படகுகள் இயக்கபட்டன. இரவிலும் விவேகானந்தர் மண்டபத்தில் இருந்து கரைக்கு சுற்றுலா பயணிகள் திரும்பி வருவதற்கு படகு போக்குவரத்து இயக்கப்பட்டதால் சுற்றுலா பயணிகள் படகில் அச்சத்துடன் பயணம் செய்து கரை திரும்பினர்.

    பவுர்ணமியையொட்டி நேற்று இரவு குமரி கடல் திடீரென உள்வாங்கி காணப்பட்டது. இதனால் கடலுக்கு அடியில் இருந்த பாறைகள் மற்றும் மணல் திட்டுகள் வெளியே தெரிந்தன. இன்று காலை 10 மணிக்கு தான் கடல் சகஜ நிலைக்கு திரும்பியது. இதன் காரணமாக விவேகானந்தர் மண்டபத்தை படகில் சென்று சுற்றுலா பயணிகள் சென்று பார்வையிட காலை 8 மணிக்கு தொடங்க வேண்டிய படகு போக்குவரத்து காலை 10 மணிக்கு பிறகு தொடங்கியது. இதனால் படகு போக்குவரத்து சுமார் 2 மணி நேரம் தாமதமாக போக்குவரத்து தொடங்கியது.

    • குறைந்த அளவு வள்ளம் கட்டுமரங்களில் மீனவர்கள் இன்று கடலுக்கு மீன் பிடிக்க சென்றனர்.
    • அதேசமயம் இந்தியப் பெருங்கடல் மற்றும் அரபிக்கடல் அமைந்துள்ள தெற்கு மற்றும் மேற்கு கடல் பகுதியில் கடல் சீற்றமாகவும், கொந்தளிப்பாகவும் காணப்பட்டது.

    கன்னியாகுமரி :

    கன்னியாகுமரியில் இன்றுகாலை விவேகானந்தர் நினைவு மண்டபம் மற்றும் திருவள்ளுவர் சிலை பாறை அமைந்துள்ள வங்க கடல் பகுதியில் கடல் நீர் மட்டம் "திடீர்"என்று தாழ்ந்து உள்வாங்கி காணப்பட்டது. அதேசமயம் இந்தியப் பெருங்கடல் மற்றும் அரபிக்கடல் அமைந்துள்ள தெற்கு மற்றும் மேற்கு கடல் பகுதியில் கடல் சீற்றமாகவும், கொந்தளிப்பாகவும் காணப்பட்டது. இதனால் இன்று காலை 8 மணிக்கு தொடங்க வேண்டிய படகு போக்குவரத்து 1 மணி நேரம் தாமதமாக தொடங்கியது. காலை 9 மணிக்கு கடல் சகஜ நிலைக்கு திரும்பியது. இதைத்தொடர்ந்து 1 மணி நேரம் தாமதமாக காலை 9 மணிக்கு விவேகானந்தர் நினைவு மண்டபத்துக்கு படகு போக்குவரத்து தொடங்கியது. காலை 9 மணி முதல் சுற்றுலா பயணிகள் படகில் பயணம் செய்து விவேகானந்தர் மண்டபத்தை பார்வையிட்டுவந்தனர். இதற்கிடையில் கன்னியாகுமரி, சின்னமுட்டம், வாவத்துறை, ஆரோக்கியபுரம், கோவளம், கீழமணக்குடி, மணக்குடி, பள்ளம் போன்ற கடற்கரை கிராமங்களில் கடல் சீற்றமாகவும், கொந்தளிப்பாகவும் காணப்பட்டது. இதனால் குறைந்த அளவு வள்ளம் கட்டுமரங்களில் மீனவர்கள் இன்று கடலுக்கு மீன் பிடிக்க சென்றனர்.

    • கதவனை மின் உற்பத்தி நிலையங்களில் மீண்டும் மின் உற்பத்தி தொடங்கியது.
    • கரையோரப் பகுதி மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

    அம்மாபேட்டை:

    காவிரியில் வெள்ளப்பெருக்கு அதிகமானதால் மேட்டூர் அணையில் இருந்து ஒரு லட்சம் கனஅடிக்கு மேல் தண்ணீர் வெளியேற்றப்ப ட்டது.இதனால் மேட்டூரை அடுத்து செக்கானூர், நெரிஞ்சிப்பேட்டை, கோனேரிப்பட்டி, ஊராட்சி கோட்டை, ஈரோடு உள்ளிட்ட பகுதிகளில் காவிரி ஆற்றின் குறுக்கே கதவனை மின் நிலையங்களில் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டது.

    தற்போது காவிரியில் தண்ணீர் வரத்து குறைந்ததால் மேட்டூர் அணையில் இருந்து சுமார் 30 ஆயிரம் கன அடி தண்ணீர் மட்டுமே வெளியேற்றபடுகிறது. இதனால் நெரிஞ்சிப்பேட்டை கோனேரிப்பட்டி ஆகிய பகுதிகளில் உள்ள கதவனை மின் உற்பத்தி நிலையங்களில் மீண்டும் மின் உற்பத்தி தொடங்கியது.

    இதேபோல் கடந்த 16-ந் தேதி அணை முழு கொள்ளளவை எட்டியதால் காவிரி ஆற்றில் அணையிலிருந்து உபரிநீர் திறக்கப்பட்டது. இதனால், கரையோரப் பகுதி மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

    இதையொட்டி முன் எச்சரிக்கை நடவடிக்கையாக நெரிஞ்சிப்பேட்டைக்கும், சேலம் மாவட்டம், பூலாம்பட்டிக்கும் இடையே காவிரி ஆற்றில் நடைபெற்று வந்த பயணிகள் படகுப் போக்குவரத்து நிறுத்தப்பட்டிருந்தது. இதனால் பொது மக்கள் 8 கிலோ மீட்டர் தூரம் சுற்றி வரவேண்டிய நிலை இருந்தது.

    இந்த நிலையில் தற்போது மேட்டூர் அணையில் இருந்து ஆற்றில் 30 ஆயிரம் கன அடி தண்ணீர் மட்டுமே திறக்கப்படுகிறது. இதனால் நேற்று பிற்பகல் முதல் நெரிஞ்சிபேட்டை- பூலாம்பட்டிக்கு படகுப் போக்குவரத்து தொடங்கப்பட்டுள்ளது.

    நெரிஞ்சிப்பேட்டை கதவணையில் தண்ணீர் தேக்கப்பட்டுள்ளதால் கடல் போல் காட்சியளிக்கிறது. கடந்த 8 நாட்களாக நெரிஞ்சிப்பேட்டை, கோனேரிபட்டி கதவணை பாலம் வழியாக 8 கிலோ மீட்டர் சுற்றிச் சென்று வந்த நிலையில் தற்போது படகுப் போக்குவரத்து தொடங்கப்பட்டுள்ளதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    • விவேகானந்தர் மண்டபத்துக்கு படகு போக்குவரத்து 3 மணி நேரம் தாமதமாக தொடக்கம்
    • கடற்கரை கிராமங்களில் கடல் சீற்றமாவும் கொந்தளிப்பாகவும் காணப்பட்டது

    கன்னியாகுமரி :

    கன்னியாகுமரியில் இன்று காலை 3-வது நாளாக விவேகானந்தர் நினைவு மண்டபம் மற்றும் திருவள்ளுவர் சிலை பாறை அமைந்து உள்ள வங்க கடல் பகுதியில் கடல் நீர் மட்டம் "திடீர்" என்று தாழ்ந்து உள்வாங்கி காணப்பட்டது. அதேசமயம் இந்தியப் பெருங்கடல் மற்றும் அரபிக்கடல் அமைந்துள்ள தெற்கு மற்றும் மேற்கு கடல் பகுதியில் கடல் சீற்றமாகவும் கொந்தளிப்பாகவும் காணப்பட்டது.

    இதனால் இன்று காலை காலை 8 மணிக்கு தொடங்கவேண்டிய படகு போக்குவரத்து வெகு நேரமாகியும் தொடங்கப் படாமல் இருந்தது. இதனால் விவேகானந்தர் மண்டபத்தை படகில் சென்று பார்ப்பதற்காக அதிகாலை முதலே படகுத் துறையில் நீண்ட கியூ வரிசையில் காத்திருந்த சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.

    இதனால் சுற்றுலா பயணிகள் கடற்கரையில் நின்றபடியே விவே கானந்தர் மண்டபம் மற்றும் திருவள்ளுவர் சிலையை பார்த்து ரசித்த தோடு மட்டுமின்றி தங்களது செல்போன் களில் புகைப்படம் மற்றும் செல்பி எடுத்துசென்றனர்.

    இந்த நிலையில் காலை 11மணிக்கு கடல் சகஜ நிலைக்கு திரும்பியது. இதைத்தொடர்ந்து 3மணி நேரம் தாமதமாக காலை 11 மணிக்கு விவேகானந்தர் நினைவு மண்டபத்துக்கு படகு போக்குவரத்து தொடங்கியது. இதைத் தொடர்ந்து காலை 11 மணி முதல் சுற்றுலா பயணிகள் படகில் பயணம் செய்து விவேகானந்தர் மண்டபத்தை பார்வையிட்டுவந்தனர். இதற்கிடையில் கன்னியாகுமரி, சின்னமுட்டம், வாவத்துறை, ஆரோக்கியபுரம், கோவளம், கீழமணக்குடி, மணக்குடி, பள்ளம் போன்ற கடற்கரை கிராமங்களில் கடல் சீற்றமாவும் கொந்தளிப்பாகவும் காணப்பட்டது. இதனால் குறைந்த அளவு வள்ளம் கட்டுமரங்களில் மீனவர்கள் இன்று கடலுக்கு மீன் பிடிக்க சென்றனர்.

    • விவேகானந்தர் மண்டபத்துக்கு படகு போக்குவரத்து 2 மணி நேரம் தாமதமாக தொடக்கம்
    • இன்று காலை 8 மணிக்கு தொடங்கவேண்டிய படகு போக்குவரத்து வெகுநேரமாகியும் தொடங்கப்படாமல் இருந்தது.

    கன்னியாகுமரி :

    கன்னியாகுமரியில் இன்று காலை2-வது நாளாக விவேகானந்தர் நினைவு மண்டபம் மற்றும் திருவள்ளுவர் சிலை பாறை அமைந்துள்ள வங்க கடல் பகுதியில் கடல் நீர் மட்டம் "திடீர்"என்று தாழ்ந்து உள்வாங்கி காணப்பட்டது. அதேசமயம் இந்தியப் பெருங்கடல் மற்றும் அரபிக்கடல் அமைந்துள்ள தெற்கு மற்றும் மேற்கு கடல் பகுதியில் கடல் சீற்றமாகவும் கொந்தளிப்பாகவும் காணப்பட்டது. இதனால் இன்று காலை 8 மணிக்கு தொடங்கவேண்டிய படகு போக்குவரத்து வெகுநேரமாகியும் தொடங்கப்படாமல் இருந்தது.

    இதனால் விவேகானந்தர் மண்டபத்தை படகில் சென்று பார்ப்பதற்காக அதிகாலை முதலே படகுத் துறையில் நீண்ட கியூ வரிசையில் காத்திருந்த சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர். இதனால் சுற்றுலா பயணிகள் கடற்கரையில் நின்றபடியே விவேகானந்தர் மண்டபம் மற்றும் திருவள்ளுவர் சிலையை பார்த்து ரசித்த தோடு மட்டுமின்றி தங்களது செல்போன்களில் புகைப்படம் மற்றும் செல்பி எடுத்துசென்றனர்.

    இந்த நிலையில் காலை 9 மணிக்கு கடல் சகஜ நிலைக்கு திரும்பியது. இதைத்தொடர்ந்து 1 மணி நேரம் தாமதமாக காலை 9 மணிக்கு விவேகானந்தர் நினைவு மண்டபத்துக்கு படகு போக்குவரத்து தொடங்கியது. இைத தொடர்ந்து காலை 9 மணி முதல் சுற்றுலா பயணிகள் படகில் பயணம் செய்து விவேகானந்தர் மண்டபத்தை பார்வையிட்டு வந்தனர்.

    இதற்கிடையில் கன்னியாகுமரி, சின்னமுட்டம், வாவத்துறை, ஆரோக்கியபுரம், கோவளம், கீழமணக்குடி, மணக்குடி, பள்ளம் போன்ற கடற்கரை கிராமங்களில் கடல் சீற்றமாவும், கொந்தளிப்பாகவும் காணப்பட்டது. இதனால் குறைந்த அளவு வள்ளம் கட்டுமரங்களில் மீனவர்கள் இன்று கடலுக்கு மீன் பிடிக்க சென்றனர்.

    • கடல் சீற்றம் மற்றும் மழை காரணமாக ரத்து செய்யப்பட்டது.
    • சுற்றுலா பயணிகள் பெரும் அவதிக்கு ஆளானார்கள்.

    கன்னியாகுமரி:

    கன்னியாகுமரியில் கடல் சீற்றம் மற்றும் மழை காரணமாக நேற்று ஒரே நாளில் 3 முறை படகு போக்குவரத்து ரத்து செய்யப்பட்டது.

    காலையில் 8 மணிக்கு தொடங்க வேண்டிய படகு போக்குவரத்து கடல் சீற்றம் காரணமாக 9.30 மணிக்கு தொடங்கியது. பின்னர் மீண்டும் சூறாவளி காற்று வீசியதால் 10.30 மணிக்கு நிறுத்தபபட்டது.

    பின்னர் 12 மணிக்கு மீண்டும் தொடங்கியது. அதன்பின்னர் ஏற்பட்ட கடல் கொந்தளிப்பு காரணமாக 3 மணிக்கு மீண்டும் நிறுத்தப்பட்டது.

    இப்படி ஒரே நாளில் விவேகானந்தர் பாறைக்கு படகு போக்குவரத்து 3 முறை நிறுத்தப்பட்டதால் சுற்றுலா பயணிகள் பெரும் அவதிக்கு ஆளானார்கள்.

    • கன்னியாகுமரியில் கடல் சீற்றம்-கொந்தளிப்பு ஏற்படுவது கடந்த 2 நாட்களாக அடிக்கடி நிகழ்ந்து வருகிறது.
    • மீனவர்கள் இன்று கடலுக்கு மீன் பிடிக்க செல்லவில்லை.

    கன்னியாகுமரி:

    வங்கக்கடல் பகுதியில் கடல் நீர்மட்டம் "திடீர்" என்று தாழ்ந்து உள்வாங்குவதும் இந்தியப்பெருங்கடல் மற்றும் அரபிக்கடல் அமைந்துள்ள தெற்கு மற்றும் மேற்கு கடல் பகுதியில் கடல் சீற்றம்-கொந்தளிப்பு ஏற்படுவதும் கடந்த 2 நாட்களாக அடிக்கடி நிகழ்ந்து வருகிறது.

    இன்று காலையும் இதே நிலை காணப்பட்டதால் கன்னியாகுமரி கடலில் உள்ள விவேகானந்தர் மண்டபத்துக்கு படகு போக்குவரத்து தொடங்கப்படாமல் இருந்தது. இதனால் படகுத்துறையில் நீண்ட வரிசையில் காத்திருந்த சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர்.

    இந்த நிலையில் பகல் 11 மணிக்கு கடல் சகஜ நிலைக்கு திரும்பியதைத்தொடர்ந்து 3 மணி நேரம் தாமதமாக படகு போக்குவரத்து தொடங்கியது. சுற்றுலா பயணிகள் படகில் பயணம் செய்து விவேகானந்தர் மண்டபத்தை பார்வையிட்டனர். கன்னியாகுமரி, சின்ன முட்டம், வாவத்துறை, ஆரோக்கியபுரம், கோவளம், கீழமணக்குடி, மணக்குடி, பள்ளம் போன்ற கடற்கரை கிராமங்களில் கடல் சீற்றமாகவும் கொந்தளிப்பாகவும் காணப்பட்டது. இதனால் மீனவர்கள் இன்று கடலுக்கு மீன் பிடிக்க செல்லவில்லை.

    • இந்தியப் பெருங்கடல், அரபிக்கடல் அமைந்துள்ள தெற்கு மற்றும் மேற்கு கடல் பகுதியில் கடல் சீற்றமாகவும் கொந்தளிப்பாகவும் காணப்பட்டது.
    • படகுத்துறையில் நீண்ட கியூ வரிசையில் காத்திருந்த சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.

    கன்னியாகுமரி:

    கன்னியாகுமரி விவேகானந்தர் நினைவு மண்டபம் மற்றும் திருவள்ளுவர் சிலை பாறை அமைந்துள்ள வங்க கடல் பகுதியில் கடல் நீர் மட்டம் "திடீர்"என்று தாழ்ந்து உள்வாங்கி காணப்பட்டது. அதேசமயம் இந்தியப் பெருங்கடல் மற்றும் அரபிக்கடல் அமைந்துள்ள தெற்கு மற்றும் மேற்கு கடல் பகுதியில் கடல் சீற்றமாகவும் கொந்தளிப்பாகவும் காணப்பட்டது.

    இதனால் இன்று காலை 8 மணிக்கு தொடங்க வேண்டிய படகு போக்குவரத்து வெகுநேரமாகியும் தொடங்கப்படாமல் இருந்தது. இதனால் விவேகானந்தர் மண்டபத்தை படகில் சென்று பார்ப்பதற்காக அதிகாலை முதலே படகுத்துறையில் நீண்ட கியூ வரிசையில் காத்திருந்த சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.

    இந்த நிலையில் காலை 10 மணிக்கு கடல் சகஜ நிலைக்கு திரும்பியது. இதைத்தொடர்ந்து 2 மணி நேரம் தாமதமாக காலை 10 மணிக்கு விவேகானந்தர் நினைவு மண்டபத்துக்கு படகு போக்குவரத்து தொடங்கியது.

    • விவேகானந்தர் மண்டபத்துக்கு படகு போக்குவரத்து 2 மணி நேரம் தாமதமாக தொடக்கம்
    • காலை 10 மணிக்கு கடல் சகஜ நிலைக்கு திரும்பியது

    கன்னியாகுமரி:

    கன்னியாகுமரி கடல் நடுவில் அமைந்துஉள்ள பாறையில் சுவாமி விவேகானந்தர் நினைவு மண்டபமும் அதன் அருகில் உள்ள இன்னொரு பாறையில் 133 அடி உயர திருவள்ளுவர் சிலையும் எழுப்பப்பட்டு உள்ளது.

    இன்று காலை கடல் நீர் மட்டம் "திடீர்"என்று தாழ்ந்து உள்வாங்கி காணப்பட்டது.

    இதனால் இன்று காலை காலை 8 மணிக்கு தொடங்கவேண்டிய படகு போக்குவரத்து வெகுநேரமாகியும் தொடங்கப்படாமல் இருந்தது.

    இந்த நிலையில் காலை 10 மணிக்கு கடல் சகஜ நிலைக்கு திரும்பியது. இதைத்தொடர்ந்து 2 மணி நேரம் தாமதமாக காலை 10 மணிக்கு விவேகானந்தர் நினைவு மண்டபத்துக்கு படகு போக்குவரத்து தொடங்கியது.

    • பகவதி அம்மன் கோவில் தேரோட்டத்தில் சுற்றுலாப் பயணிகள் பங்கேற்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
    • வருகிற சனிக்கிழமை (நாளை) காலையில் கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் வைகாசி விசாகத் திருவிழாவையொட்டி தேரோட்டம் நடக்கிறது.

    கன்னியாகுமரி:


    கன்னியாகுமரி கடல் நடுவில் உள்ள பாறையில் சுவாமி விவேகானந்தர் நினைவு மண்டபமும் அதன் அருகில் உள்ள இன்னொரு பாறையில் 133 அடி உயரத்தில் திருவள்ளுவர் சிலையும் எழுப்பப்பட்டு உள்ளது.


    இதில் விவேகானந்தர் நினைவு மண்டபத்தை விவேகானந்தா கேந்திர நிறுவனம் நிர்வகித்து வருகிறது. அதே சமயம் 133 அடி உயர திருவள்ளுவர் சிலையை தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் பராமரித்து வருகிறது. இவற்றை தினமும் ஆயிரக்கணக்கான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் படகில் சென்று பார்த்துவருகிறார்கள்.

    இவற்றை பார்வையிட செல்லும் சுற்றுலா பயணிகளுக்கு வசதியாக தமிழக அரசு நிறுவனமான பூம்புகார் கப்பல் போக்குவரத்துக் கழகம் படகு போக்குவரத்தை நடத்தி வருகிறது. இதற்காக பொதிகை, குகன், விவேகானந்தா ஆகிய 3 படகுகள் இயக்கப்பட்டு வருகின்றன.


    தினமும் காலை ௮ மணிக்கு தொடங்கும் படகு போக்குவரத்து மாலை 4 மணிவரை இடைவேளை இன்றி தொடர்ச்சியாக இயக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் வருகிற சனிக்கிழமை (நாளை) காலையில் கன்னியாகுமரி பகவதிஅம்மன் கோவிலில் வைகாசி விசாகத் திருவிழாவையொட்டி தேரோட்டம் நடக்கிறது. காலை 7 மணிக்கு மேல் 8மணிக்குள் திருத்தேர் வடம் தொட்டு இழுத்து தேரோட்டம் தொடங்கி வைக்கப்படுகிறது.

    இந்த தேரோட்டத்தில் விவேகானந்தர் நினைவு மண்டபம் மற்றும் விவேகா னந்த கேந்திர தொழி லாளர்கள் குடும்பத்துடன் பங்கேற்பதற்கு வசதியாகவும் சுற்றுலாப் பயணிகள் இந்த தேர் திருவிழாவில் கலந்துகொண்டு தேர் இழுப்பதற்கு நாளைக்கு கன்னியாகுமரி கடல் நடுவில் அமைந்து உள்ள விவேகானந்தர் நினைவு மண்டபத்துக்கு படகு போக்குவரத்து தொடங்குவதற்கு பதிலாக 2மணி நேரம் தாமதமாக காலை 10 மணிக்கு படகு போக்குவரத்து தொடங்குகிறது.

    இந்த தகவலை கன்னியா குமரி விவேகானந்த கேந்திர நிர்வாக அதிகாரி அனந்தஸ்ரீ பத்மநாபன் தெரிவித்து உள்ளார்.

    ×