search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நெல்விதை"

    • விதைகள் இருப்பு வைக்கப்பட்டுள்ள குடோன்களையும் ஆய்வு செய்தார்.
    • ஆய்வின்போது தாராபுரம் மற்றும் காங்கயம் விதை ஆய்வாளர்கள் உடனிருந்தனர்.

    தாராபுரம் :

    தாராபுரம் பகுதியில் உள்ள தனியார் நெல் விதை விற்பனை நிலையங்களில் ஈரோடு விதை ஆய்வு துணை இயக்குனர் பெ.சுமதி ஆய்வு செய்தார். அப்போது விற்பனை உரிமம், இருப்பு மற்றும் விலை விபரப்பலகை, கொள்முதல் பட்டியல், பதிவேடுகள், பதிவுச்சான்றிதழ், முளைப்புதிறன் பரிசோதனை முடிவு அறிக்கை போன்றவை ஆய்வு செய்தார். விதைகள் இருப்பு வைக்கப்பட்டுள்ள குடோன்களையும் ஆய்வு செய்தார்.

    அப்போது விதை இருப்பிற்கும், பதிவேடு இருப்பிற்கும் வேறுபாடு இருந்தது. இதனால் ரூ.72 ஆயிரம் மதிப்பிலான 2,250 கிலோ எடை அளவிலான விதை குவியலை விற்பனை செய்ய தடை விதித்தார்.

    மேலும் விற்பனை உரிமம் பெறாமல் விற்பனை செய்யும் விற்பனை நிலையங்கள் மற்றும் நாற்றுப்பண்ணை உரிமையாளர்கள் மீது விதை சட்டத்தின்படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும். விசாயிகளுக்கு பட்டத்திற்கு ஏற்ற ரகங்களை மட்டுமே விற்பனை செய்ய வேண்டும்.விதிமீறல்கள் கண்டறியப்படும் பட்சத்தில் விதை விற்பனையாளர்கள் மற்றும் வினியோகஸ்தர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தார். ஆய்வின்போது தாராபுரம் மற்றும் காங்கயம் விதை ஆய்வாளர்கள் உடனிருந்தனர்.

    ×