search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நெக்பேண்ட் ஹெட்போன்"

    • விங்ஸ் நிறுவனத்தின் புதிய கேமிங் ஹெட்போன் டூயல் பேரிங் வசதி, லோ-லேடன்சி மற்றும் பிரத்யேக கேமிங் மோட்களை கொண்டிருக்கிறது.
    • இந்த கேமிங் ஹெட்போனில் நாய்ஸ் கேன்சலேஷன் வசதியை வழங்க ENC மைக், வாய்ஸ் அசிஸ்டண்ட் போன்ற அம்சங்கள் உள்ளன.

    விங்ஸ் ஃபேண்டம் 110 நெக்பேண்ட் ஹெட்போன் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. விங்ஸ் ஃபேண்டம் 200 ட்ரூ வயர்லெஸ் இயர்பட்ஸ் வெளியீட்டை தொடர்ந்து புதிய நெக்பேண்ட் ஹெட்போன் அறிமுகமாகி இருக்கிறது. இந்த ஹெட்போன் 20 மணி நேர பேட்டரி பேக்கப் வழங்கும் திறன் கொண்டிருக்கிறது. ஃபேண்டம் 110 மாடலில் அல்ட்ரா லோ லேடன்சி அதிகபட்சம் 50ms மற்றும் பிரத்யேக கேமிங் மோட், ஜீரோ ஆடியோ லேக் வசதி உள்ளது.

    இதில் உள்ள அதிநவீன ப்ளூடூத் 5.3 சிப் டூயல் பேரிங் வசதி, ஸ்பீடு சின்க் ஹை-ஸ்பீடு கனெக்டிவிட்டி போன்ற வசதிகளை வழங்குகிறது. இது இரு சாதனங்கள் இடையே விரைவில் ஸ்விட்ச் செய்வதை வேகமாக செய்து முடிக்கிறது. அதிவேக கனெக்‌ஷன் மற்றும் மிக குறைந்த லேடன்சி மட்டுமின்றி புதிய ஃபேண்டம் 110 மாடலில் 13mm டிரைவர்கள் உள்ளன. இவை தலைசிறந்த ஆடியோ மற்றும் சிறப்பான பேஸ் அனுபவத்தை வழங்குகின்றன.

    மேலும் பாஸ் பூஸ்ட் மோட் மூலம் சிறப்பான ஆடியோ அனுபவம் பெற ஹை பேஸ் மோடிற்கு மாறிக் கொள்ளும் வசதி உள்ளது. இதன் ஸ்டெம் பகுதியில் உள்ள டேக்டிக்கல் பட்டன்கள் ஆடியோ கண்ட்ரோல் ஆப்ஷன்களை வழங்குகின்றன. இதோடு ஸ்டெம் பகுதியில் ENC மைக் உள்ளது. இது நாய்ஸ் கேன்சலேஷன் வசதியை வழங்குகிறது. இதில் உள்ள பேட்டரியை முழுமையாக சார்ஜ் செய்தால் 20 மணி நேரத்திற்கு பேக்கப் பெறலாம்.

    இதில் உள்ள டைப் சி போர்ட் ஃபாஸ்ட் சார்ஜிங் தொழில்நுட்பம், ஹெட்போனை 15 நிமிடங்கள் சார்ஜ் செய்தால் ஏழு மணி நேரத்திற்கு பயன்படுத்தும் வசதியை வழங்குகிறது. ஃபேண்டம் 110 ப்ளூடூத் நெக்பேண்ட் ஹெட்போன் மென்மையான, சருமத்திற்கு எவ்வித பாதிப்பையும் ஏற்படுத்தாத, வியர்வைகளால் பாதிக்காமல் இருக்கும் சிலிகான் மூலம் உருவாக்கப்பட்டு இருக்கிறது. மேலும் இது நாள் முழுக்க பயன்படுத்தினாலும் எவ்வித அசௌகரியத்தையும் ஏற்படுத்தாது.

    விலை மற்றும் விற்பனை விவரங்கள்:

    இந்திய சந்தையில் புதிய விங்ஸ் ஃபேண்டம் 110 நெக்பேண்ட் ஹெட்போன் ரூ. 699 எனும் சிறப்பு விலையில் விற்பனைக்கு கிடைக்கிறது. இந்த ஹெட்போன் நான்கு வித நிறங்களில் கிடைக்கிறது. இதன் விற்பனை நெக்பேண்ட் வலைதளம், ப்ளிப்கார்ட் மற்று் அமேசான் தளங்களில் விற்பனைக்கு கிடைக்கிறது.

    ×