search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நுழைவுத் தேர்வு"

    • பி.டெக்கில் சேருவதற்கான சேர்க்கை முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.
    • ஆன்லைன் கவுன்சிலிங்கில் பங்கேற்க ஊக்குவிக்கிறது.

    வேலூர்:

    விஐடி பல்கலைக்கழகத்தில் நடப்பு கல்வியாண்டில் பி.டெக் பட்டப் படிப்பில் சேருவதற்கான சேர்க்கை முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.

    இந்தியாவில் 125 நகரங்களிலும் மற்றும் துபாய், மஸ்கட், கத்தார், குவைத், சிங்கப்பூர், கோலாலம்பூரிலும். இந்த நுழைவுத் தேர்வு கணினி முறையில் நடைப்பெற்றது.

    மாணவர்கள் சேர்க்கை முடிவுகளை https://ugresults.vit.ac.in/viteee" , "www.vit.ac.in."என்ற இணையதளம் வழியாக தெரிந்துகொள்ளலாம். விஐடி மாணவர்களை ஆன்லைன் கவுன்சிலிங்கில் பங்கேற்க ஊக்குவிக்கிறது மற்றும் சேர்க்கை உறுதி செய்ய அதிகபட்ச வாய்ப்புகளை வழங்குகிறது.

    விஐடியின் நுழைவுத் தேர்வில் முதல் இடத்தை அரியானாவை சேர்ந்த ரூபிந்தர் சிங், 2-ம் இடத்தை ராஜஸ்தானை சேர்ந்த் பானு மகேஷ் செக்குரி, 3-ம் இடத்தை ஆந்திராவை சேர்ந்த வேதாந்த் , 4-ம் இடத்தை அசாமை சேர்ந்த ஆயுசி பெய்த், 5-ம் இடத்தை உத்திரபிரதேசத்தை சேர்ந்த சன்வி சிங்க், 6-ம் இடத்தை மகாராஷ்ட்டிராவை சேர்ந்த அபிராஜ் ராம்காந்த் யாதவ், 7-ம் இடத்தை உத்திரகாண்டை சேர்ந்த சைதன்யா ரமேஷ் போஷ்ரே, 8-ம் இடத்தை உத்திரபிரதேசத்தை சேர்ந்த விக்கி குமார் சிங், 9-ம் இடத்தை இமாச்சல பிரதேசத்ததை சேர்ந்த சோகன் ஹஸ்ரா, 10-ம் இடத்தை பீகாரை சேர்ந்த சாகில் பிடித்தார்.

    விஐடியின் நுழைவுத் தேர்வின் மதிப்பெண் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெறும். ரேங்க் 1 லட்சம் வரை எடுத்த மாணவ, மாணவிகள் விஐடி வேலூர், சென்னை, ஆந்திர பிரதேசம், போபால் ஆகிய 4 வளாங்களில் மாணவ, மாணவிகள் தங்களுக்கான பாடப் பிரிவுகளை தேர்வு (ரேங்க் அடிப்படையில்) செய்து கொள்ளலாம்.

    முதல் கட்ட கலந்தாய்வு (07-5-2024- 10-05-2024) ரேங்க் 1 முதல் 20,000 வரை , இரண்டாம் கட்ட கலந்தாய்வு ( 18-5-2024-21-5-2024 ) ரேங்க் 20,001 முதல் 45,000, மூன்றாம் கட்ட கலந்தாய்வு (29-5-2024-01-6-2024) ரேங்க் 45,001 முதல் 70,000, நான்காம் கட்ட கலந்தாய்வு ( 09-6-2024-12-6- 2024 ) ரேங்க் 70,001 முதல் 1,00,000 நடைபெறும்.

    ரேங்க் 1 லட்சத்துக்கு மேல் எடுத்த மாணவ மாணவியர்களுக்கு விஐடி ஆந்திரபிரதேசம் மற்றும் விஐடி போபாலில் மட்டுமே இடம் கிடைக்கும் . இவர்களுக்கான ஆன்லைன் கலந்தாய்வு (20-06-2024 மற்றும் 23-06-2024) ஆகியஇரண்டு நாட்கள் நடைபெறும். மாணவ, மாணவியர்களுக்கான வகுப்புகள் ஜூலை இரண்டாவது வாரத்தில் இருந்து தொடங்கும்.

    ஜிவி பள்ளி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் சிறப்பு கல்வி உதவி வி.ஐ.டி. பல்கலைக்கழகத்தின் ஜிவி பள்ளி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் விஐடி நுழைவுத்தேர்வில் 1 முதல் 10 ரேங்குக்குள் தகுதி பெறும் மாணவ, மாணவியருக்கு பி.டெக் படிப்பு பயிலும் 4 ஆண்டுகள் முழுவதும் 100 சதவீத படிப்பு கட்டண சலுகை வழங்கப்படுகிறது.

    அத்துடன் விஐடி நுழைவுத்தேர்வில் 11 முதல் 50 ரேங்குக்குள் தகுதி பெறும் மாணவ, மாணவியருக்கு75 சதவீத படிப்பு கட்டண சலுகையும் 51 முதல் 100 ரேங்குக்குள் தகுதி பெறும் மாணவ, மாணவியருக்கு 50 சதவீத படிப்பு கட்டண சலுகையும் 101 முதல் 500 ரேங்குக்குள் தகுதி பெறும் மாணவ, மாணவியருக்கு 25 சதவீத படிப்பு கட்டண சலுகையும் 4 ஆண்டுகள் முழுவதும் வழங்கப்படுகிறது.

    தமிழ்நாடு, ஆந்திரபிரதேசம் மற்றும் மத்திய பிரதேசத்தில் உள்ள கிராமபுற பகுதிகளை சேர்ந்த ஏழை, எளிய குடும்பத்தின் மாணவ, மாணவியரும் விஐடி பல்கலைக்கழகத்தில் உயர்கல்வி பயிலும் வகையில் செயல்படுத்தப்பட்டு வரும் ஸ்டார்ஸ் திட்டத்தின்கீழ் ஒவ்வொரு மாவட்டத்திலும் மாவட்ட அளவில் பிளஸ்-2 தேர்வில் அரசு பள்ளியில் முதலிடம் பெறும் மாணவ, மாணவியருக்கு 100 சதவீத படிப்பு கட்டண சலுகையுடன் அவர்களுக்கு உணவு மற்றும் விடுதி வசதியுடன் விஐடி பல்கலைக்கழகத்தில் இலவச சேர்க்கை வழங்கப்படுகிறது.

    3 ஆண்டு இளநிலை பட்டப்படிப்புகள், 4 ஆண்டு இளநிலை பட்டப்படிப்புகள் பி.எஸ்.சி., அக்ரி, பி.ஆர்ச்., பி.டி.இ.எஸ்., மற்றும் 5 ஆண்டு ஒருங்கிணைந்த பட்டப்படிப்புகளுக்கான விண்ணப்பங்களை வி.ஐ.டி. இணையதளம் www.vit.ac.in வழியாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

    • மத்திய அரசு பல்கலைக் கழகங்களில் உள்ள இளநிலைப்படிப்புகளில் சேர்க்கை பெறுவதற்கான பொது நுழைவுத் தேர்வை தேசிய தேர்வு முகமை (என்டிஏ) அண்மையில் நடத்தியது.
    • இந்த தேர்வை சேலம், நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த மாணவர்கள் பலர் எழுதியுள்ளனர். இந்த தேர்வுக்கான விடைக்குறிப்பு ஜூன் 29-ம் தேதி வெளியிடப்பட்டது.

    சேலம்:

    மத்திய அரசு பல்கலைக் கழகங்களில் உள்ள இளநிலைப்படிப்புகளில் சேர்க்கை பெறுவதற்கான பொது நுழைவுத் தேர்வை தேசிய தேர்வு முகமை (என்டிஏ) அண்மையில் நடத்தியது.

    இந்த தேர்வை சேலம், நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த மாணவர்கள் பலர் எழுதியுள்ளனர். இந்த தேர்வுக்கான விடைக்குறிப்பு ஜூன் 29-ம் தேதி வெளியிடப்பட்டது. அதில் பல கேள்விகளுக்கான விடைகள் தவறாக குறிக்கப் பட்டுள்ளதாகத் தேர்வர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

    குறிப்பிட்ட வினாவுக் கான விடை குறித்து முறையீடு செய்ய விரும்பும் மாணவர்கள், ஒவ்வொரு வினாவுக்கும் தலா ரூ.200 செலுத்த வேண்டும் என்றும் என்டிஏ தெரிவித்துள்ளது.

    இதற்கு தேர்வர்கள், ஆசிரியர்கள், பெற்றோர் பல்வேறு தரப்பினரும் கடும் கண்டனம் தெரி வித்துள்ளனர். கட்டணம் அதிகமாக இருப்பதாக அவர்கள் தெரிவித்தனர்.

    இது தொடர்பாக யுஜிசி தலைவர் ஜகதீஷ் குமார் கூறுகையில், என்டிஏ முறையின்றி கட்டணம் வசூலிப்ப தாகக் கூறுவது தவறான குற்றச்சாட்டு. அந்த அமைப்பு லாப நோக்க மற்று இயங்கும் தன்மை உடையது. வசூலிக்கப்படும் கட்டணமா னது விடையை மறுமதிப்பீடு செய்யும் நிபுணர்களுக்கே வழங்கப்படும்.

    விடைக் குறிப்பில் தவறு கள் காணப்படுவதாக செய்திகள் வெளியாகி யுள்ளன. தட்டச்சு செய்வ தில் ஏற்பட்ட பிழையாக அது இருக்கலாம். திருத்தப் பட்ட விடைக்குறிப்பு 2 நாள்களுக்குள் வெளியிடப் படும்.

    விடைக் குறிப்பில் தவறுகள் ஏதேனும் இருந்தால், அது தொடர்பாக என்டிஏ-வுக்கு மின்னஞ்சல் வாயிலாகத் தேர்வர்கள் தெரிவிக்கலாம். அக்கருத்து ஏற்றுக் கொள்ளும்படியாக இருந்தால், அது நிச்சயமாக பரிசீலிக்கப்படும் என்றார்.

    ×