search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நுகர்வோர்"

    • 55 டன் வரத்து கொண்ட காய்கறிகள் மற்றும் பழங்கள் 175 விவசாயிகள் மூலம் விற்பனை செய்யப்படுகிறது.
    • கருப்பட்டி, பருப்பு வகைகள், முறுக்கு, கடலை, எள்ளுருண்டை போன்ற பாரம்பரிய உணவு பொருட்கள் விற்பனை செய்யப்பட உள்ளது.

    தஞ்சாவூர்:

    வேளாண்மை உழவர் நலத்துறையின் அங்கமான வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண்மை வணிகத் துறையின் மூலமாக தஞ்சை நாஞ்சிக்கோட்டை சாலையில் இயங்கி வரும் தஞ்சாவூர் உழவர் சந்தையில் வேளாண்மை பொருட்கள் மற்றும் பாரம்பரிய திண்பண்டங்கள் அங்காடியை மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் திறந்து வைத்தார்.

    அப்போது அவர் கூறியதாவது:-

    வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறையின் மூலமாக தஞ்சாவூர் மாவட்டத்தில் தஞ்சாவூர், கும்பகோணம், பட்டுக்கோட்டை, பாபநாசம் மற்றும் திருக்காட்டுப்பள்ளி ஆகிய 5 வட்டாரங்களில் உழவர் சந்தைகள் இயங்கி வருகின்றன.

    தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள 5 உழவர் சந்தைகளிலும் சேர்த்து நாளொன்றிற்கு சராசரியாக ரூ.21 லட்சம் மதிப்பு உள்ள 55 டன் வரத்து கொண்ட காய்கறிகள் மற்றும் பழங்கள் 175 விவசாயிகள் மூலம் விற்பனை செய்யப்படுகிறது. இதில் தினசரி 8,000 முதல் 9,000 நுகர்வோர்கள் பயனடைகின்றனர்.

    தஞ்சாவூர் உழவர் சந்தையில் உள்ள 71 கடைகளின் மூலம் நாளொன்றிற்கு சராசரியாக ரூ.6 லட்சம் மதிப்பு உள்ள 15 டன் வரத்து கொண்ட காய்கறிகள் மற்றும் பழங்கள் 65 விவசாயிகள் மூலம் விற்பனை செய்யப்படுகின்றனர்.

    தஞ்சாவூர் உழவர் சந்தையில் உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களின் சார்பாக தஞ்சாவூர் உழவர் சந்ததையில் சிறுதானியங்கள், பருப்பு வகைகள், தானியங்கள், எண்ணெய் வகைகள் மற்றும் மதிப்பு கூட்டப்பட்ட பொருட்கள் மாலை நேரங்களில் மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை சோதனை அடிப்படையில் விற்பனை நடைப்பெற்றுவருகிறது.

    இதில் பாரம்பரிய கைக்குத்தல் அரிசி வகைகள், கருப்பு கவுனி, மாப்பிள்ளை சம்பா, பூங்கார் போன்ற அரிசி வகைகள், அவல், செக்கு எண்ணெய், நாட்டு சர்க்கரை, கருப்பட்டி, பருப்பு வகைகள், முறுக்கு, கடலை, எள்ளுருண்டை போன்ற பாரம்பரிய உணவு பொருட்கள் விற்பனை செய்யப்பட உள்ளது.

    இயற்கை வேளாண்மை பொருட்கள் விளைவிக்கும் விவசாயிகளுக்கும், பாரம்பரிய திண்பண்டங்கள் தயார் செய்பவர்களுக்கும் வியாபாரம் செய்வதற்கு இது நல்ல வாய்ப்பாகும். உழவர் சந்தையில், இயற்கை வேளாண்மை பொருட்கள் மற்றும் பாரம்பரிய உணவு பொருட்களை வாங்கி பயனடையுங்கள்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    விழாவில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ரவளிப்பிரியா, தஞ்சை மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் ஜஸ்டின், வேளாண்மை விற்பனை மற்றும் வணிகத்துறை துணை இயக்குனர் மரியரவி ெஜயக்குமார், வேளாண்மை துணை இயக்குனர் மாநிலத் திட்டங்கள் (பொ) சாருமதி, இயற்கை வேளாண்மை வல்லுனர் சித்தர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    விழா ஏற்பாடுகளை உழவர் சந்தை வேளாண்மை அலுவலர் ஜெய்ஜிபால் ஜெபசிங் மற்றும் உழவர் சந்தை அலுவலர்கள் செய்திருந்தனர்,

    ×